தமிழகத்தில் வேகமாக குறையும் கொரோனா.. 1,668 பேர் புதிதாக பாதிப்பு
சென்னை : தமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும் 1,668 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேநேரம் கொரோனா பாதிப்பில் இருந்து 1,887 பேர் ஒரே நாளில் மீண்டனர். தமிழகத்தில் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 19,621 ஆக சரிந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் மெதுவாக குறைந்து வருகிறது. குணம் அடைபவர்களின் எண்ணிக்கை பாதிப்பவரகளின் எண்ணிக்கைவிட அதிகமாக இருக்கிறது. கட்டுப்பாடுகள் காரணமாக தினமும் கணிசமான அளவு குறைந்து வருகிறது.
தமிழகத்தில் ஆகஸ்ட் 20 ம் தேதி நிலவரப்படி கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 1668 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதித்தவரகளின் எண்ணிக்கை 25,97,603 ஆக உயர்ந்துள்ளது.

தேறியவர்கள்
அதேநேரம் கொரோனா பாதிப்பில் இருந்து 1,887 பேர் ஒரே நாளில் மீண்டனர். இதனால் ஒட்டுமொத்தமாக கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 25,43,319 ஆக உயர்ந்துள்ளது.

கொரேனா உயிரிழப்பு
தமிழகத்தில் கொரோனா காரணமாக ஒரே நாளில் 24 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதனால் இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 34,663 ஆக உயர்ந்துள்ளது.

நேயாளிகள் அதிகரிப்பு
தமிழகத்தில் தற்போதைய நிலையில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 19 ஆயிரம் ஆக குறைந்துள்ளது தமிழகத்தில் நேற்று 19,864 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அந்த எண்ணிக்கை 19,621 ஆக குறைந்துள்ளது.

குறையும் பாதிப்பு
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா நிலவரத்தை பார்த்தால் அதிகபட்சமாக கோவையில் 199 பேரும், சென்னையில் 185 பேரும், ஈரோட்டில் 158 பேரும், தஞ்சாவூரில் 98 பேரும், சேலத்தில் 94 பேரும், செங்கல்பட்டில் 85 பேரும், திருப்பூரில் 80 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களில் பாதிப்பு பெரிய அளவில் இல்லை. சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை கோவையில் மட்டும் அதிகமாக 2266 பேர் உள்ளனர். சென்னையில் இந்த எண்ணிக்கை 2094 ஆகவும், ஈரோட்டில் 1800 ஆகவும். செங்கல்பட்டில் 1133 ஆகவும், தஞசாவூரில் 1098
ஆகவும் உள்ளது.












Click it and Unblock the Notifications