தமிழ்நாட்டில் மேலும் 1,872 பேருக்கு கொரோனா.. இந்த 5 மாவட்டங்களில் மட்டும் பாதிப்பு அதிகம்!
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 1,872 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 29 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனாவுக்கு 25,526 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கோவையில் இன்று அதிக உயிரிழப்பு பதிவாகி இருக்கிறது. சென்னை, கோவை உள்பட 5 மாவட்டங்களில் தினமும் 100-க்கும் மேற்பட்ட பாதிப்பு பதிவாகி வருகிறது.

குறைந்த கொரோனா
தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டவது அலை அதிவேகமாக குறைந்து வருகிறது. தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நடவடிக்கையும், கடுமையான ஊரடங்குமே இந்த அளவுக்கு கொரோனாவை குறைத்துள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில்1,872 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தொடர்ந்து 62-வது நாளாக வைரஸ் பாதிப்பு குறைந்து இருக்கிறது.

மொத்த பாதிப்பு எவ்வளவு?
இதனால் மொத்த பாதிப்பு 25,43,040 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் 29 பேர் உயிரிழந்துள்ளனர். கோவையில் அதிகபட்சமாக கொரோனாவுக்கு 6 பேர் இறந்துள்ளனர். தஞ்சாவூரில் 3 பேர் இறந்துள்ளனர். சென்னையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதுவரை கொரோனாவுக்கு 33,838 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து மேலும் 2,475 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 24,83,676 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பை விட குணமடைவோர் விகிதம் தொடர்ந்து அதிகமாக இருக்கிறது.

சென்னை நிலை என்ன?
25,526 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் 1,44,759 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 3,52,47,522 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மேலும் 133 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கோவையில் பாதிப்பு தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறது. ஈரோட்டிலும் பாதிப்பு அதிகமாக இருக்கிறது.

ஈரோட்டில் அதிகரிப்பு
கோவையில் மட்டும் 180 பேருக்கு பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 98 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 41 பேருக்கும், மதுரையில் 28 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் 43 பேருக்கும், திருவள்ளூரில் 61 பேருக்கும், திருச்சியில் 68 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. திருப்பூரில் 94 பேருக்கும், விருதுநகரில் 15 பேருக்கும், ஈரோட்டில் 137 பேருக்கும், சேலத்தில் 113 பேருக்கும், நாமக்கல்லில் 52 பேருக்கும், தஞ்சாவூரில் 102 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னை, கோவை, சேலம், ஈரோடு மற்றும் தஞ்சாவூரில் தினமும் 100-க்கும் மேற்பட்ட பாதிப்பு பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications