பீகாரை போல்! தமிழக பெண்களுக்கும் ரூ. 10000! இன்று காலை ரிலீஸ் செய்ய இருந்தாரா ஸ்டாலின்? பிளான் என்ன?
சென்னை: தமிழகத்தில் உள்ள 1.5 கோடி மகளிர் சுய உதவிக் குழு பெண்களுக்கு தலா ரூ 10 ஆயிரத்தை இன்று காலை வரவு வைக்க திமுக திட்டமிட்டிருந்த நிலையில் நேற்றைய தேர்தல் தேதி அறிவிப்பால் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து, திமுகவின் பிளான் சுக்குநூறாகிவிட்டதாக சொல்லப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.
தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு திமுக தேர்தல் வாக்குறுதியாக கலைஞர் மகளிர் உரிமை தொகை என்ற பெயரில் 1.31 கோடிக்கும் மேற்பட்டோருக்கு 2023 ஆம் ஆண்டு முதல் மாதந்தோறும் தலா ரூ 1000 வழங்கப்பட்டு வருகிறது.

மகளிர் உரிமைத் தொகை, மகளிர் விடியல் பயணம், புதுமைப் பெண் திட்டம், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உள்ளிட்ட பெண்கள் சார்ந்த திட்டங்களுக்கு மக்களிடையே வரவேற்பு இருக்கிறது.
இந்த நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் மகளிர் உரிமைத் தொகை கொடுக்கக் கூடாது என மகாராஷ்டிரா, அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்களில் நீதிமன்றத்திற்கு சென்ற பாஜக அங்கு அந்த திட்டங்களை தேர்தலை காரணம் காட்டி தடுத்து நிறுத்தியது.
அது போல் தமிழகத்திலும் தேர்தலுக்கு முன்பே இந்த திட்டங்களை நிறுத்த பாஜக முயற்சி செய்ததாகவும் அது தனக்கு தெரியவந்ததால் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய மாதங்களுக்கு தலா ரூ 1000, கோடைகால தொகுப்பு நிதியாக ரூ 2000 என மொத்தம் ரூ 5000 -த்தை யாரும் எதிர்பாராத வகையில் திடீர் ட்விஸ்ட்டாக விடிந்ததும் வங்கிக் கணக்கில் திமுக அரசு போட்டுவிட்டது.
இந்த ரூ. 5000 பணத்திற்கு எத்தனையோ விமர்சனங்கள் அரசுக்கு எதிராக வந்தாலும் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். அந்த பணம் மக்களுக்கு, மருத்துவம், கல்விக் கட்டணம், மருந்து உள்ளிட்ட பல்வேறு அவசர தேவைகளுக்கு உதவியது என்பதை மறுக்க முடியாது.
இந்த நிலையில் பீகாரில் சுயஉதவி குழு பெண்களுக்கு தலா 10 ஆயிரம் என ஒரு திட்டத்தை அப்போதைய ஜேடியூ+ பாஜக அரசு கொண்டு வந்தது. இதுதான் அந்த மாநிலத்தில் பாஜகவுக்கு வெற்றியை வாரி தந்தது என சொல்லப்பட்டது.
அது போல் தமிழகத்திலும் சுயஉதவிக் குழு பெண்களுக்கு ரூ. 10000 நிதியுதவி வழங்கப்படும் என சொல்லப்பட்டது. இதை என்டிஏ கூட்டணி அறிவிக்கும் என்றும் சொல்லப்பட்டது.
இந்த நிலையில் அந்த ரூ 10000-த்தை 1.51 கோடி பெண்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க திமுக அரசு முடிவு செய்திருந்ததாக சொல்லப்படுகிறது. அதன்படி இன்று காலை 7 மணிக்கு அந்த பணத்தை செலுத்த முடிவு செய்திருந்ததாக சொல்லப்படுகிறது.
இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் ராஜகோபாலன் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: திமுகவுக்கு பின்னடைவு. இன்று காலை 7 மணிக்கு 1.51 கோடி பெண்களுக்கும் தலா ரூ 10000-த்தை வழங்க திட்டமிட்டிருந்தது. ஆனால் நல்லவேளையாக தமிழக தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமையே அறிவித்துவிட்டது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் உடனே அமலுக்கு வந்ததால் திமுகவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
வரும் தேர்தலில் திமுக வெற்றி பெறாது என தெரிந்து விட்டது. அதனால்தான் அரசு கஜானாவை காலி செய்து, புதிதாக பொறுப்பேற்கும் அரசை கடனில் தத்தளிக்க திட்டமிட்டது. இதெல்லாம் நடக்காமல் தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்துவிட்டது என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications