2010-ல் வெறும் 10,000 ரூபாய்.. 2025-ல் ₹1 கோடி! எல்ஐசியில் ஒளிந்திருந்த அந்த சீக்ரெட் இதுதான்
சென்னை: 20 ஆண்டுகள் LIC-யில் பணம் கட்டிய பிறகு கையில் கிடைத்தது இதுதானா? நம்பிக்கையுடன் எடுத்த எல்ஐசி பாலிசி உண்மையில் எவ்வளவு லாபம் கொடுத்தது தெரியுமா? பல குடும்பங்களை இன்று சிந்திக்க வைத்திருக்கும் இந்த கேள்விக்கு விடை என்ன தெரியுமா? இதை பற்றி இங்கே சுருக்கமாகவும், எளிமையாகவும் பார்ப்போம்.
நம்முடைய இந்தியாவை பொறுத்தவரை, நடுத்தர வர்க்க குடும்பங்களின் மிகப்பெரிய நம்பிக்கையாக இருப்பது எல்ஐசி எனப்படும் ஆயுள் காப்பீட்டு திட்டங்கள் தான்.. சேமிப்பு என்றாலே பலருக்கும் முதலில் நினைவுக்கு வருவதும் இந்த பாலிசிதான்..

இதற்கு காரணம், பாதுகாப்பும், சேமிப்பும் இரண்டும் ஒன்றாக சேர்ந்து கிடைக்கும் என்பதால், கடந்த பல வருஷமாகவே நம் மக்கள் இதைத்தான் தேர்வு செய்து வருகிறார்கள்.
எல்ஐசி பாலிசி
பொதுவாக எல்ஐசி பாலிசி எடுப்பதற்கான 2 முக்கிய காரணங்கள் உள்ளன.. ஒன்று குடும்பத்திற்கான பாதுகாப்பை கருத்தில் கொண்டு பாலிசி எடுப்பார்கள், அதாவது பாலிசி எடுத்த நபருக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால், அந்த தொகை குடும்பத்திற்கு போய் சேரும்..
இன்னொன்று, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு ஒரு தொகை கையில் கிடைக்கும் சேமிப்பு.. இதனால் பலர் இதை ஒரு பாதுகாப்பான முதலீடாக பார்க்கிறார்கள்..
எல்ஐசி சேமிப்பு
ஆனால் முக்கியமாக கேட்கப்படும் கேள்வி என்னவென்றால், 20 வருடங்களாக தொடர்ந்து பணம் கட்டிய பிறகு, எல்ஐசி உண்மையில் எவ்வளவு லாபம் கொடுக்கிறது என்பது தான். பலரது எதிர்பார்ப்புக்கு மாறாக, எல்ஐசி திட்டங்கள் அதிக லாபம் தரும் முதலீடாக இல்லை.. இது பங்குச்சந்தை அல்லது மியூச்சுவல் ஃபண்ட் போன்ற உயர்ந்த வருமானம் தரும் திட்டங்களுடன் ஒப்பிடவும் முடியாது.
கடந்த 20 ஆண்டுகளின் சராசரி கணக்குகளை பார்த்தால், ஒரு சாதாரண எல்ஐசி பாலிசி சுமார் 5% முதல் 7% வரை மட்டுமே வருமானம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.. இது மிகவும் பாதுகாப்பான வருமானம் தான்.. ஆனால் அதிக லாபம் தரும் வகையில் இல்லை. அதனால் சிலர் "நாம் எதிர்பார்த்த அளவுக்கு வளர்ச்சி இல்லை" என்று நினைத்து விடுகிறார்கள்.
போனஸ் லாபம்
எல்ஐசி திட்டங்களில் லாபம் "போனஸ்" என்ற முறையில் சேர்க்கப்படுகிறது.. ஒவ்வொரு வருடமும் நிறுவனத்தின் செயல்திறனை பொறுத்து ஒரு போனஸ் அறிவிக்கப்படுகிறது.. இந்த போனஸ், பாலிசியின் காலம் முழுவதும் சேர்ந்து, முடிவில் ஒரு தொகையாக கிடைக்கும்.. மேலும், கால அவகாசம் முடியும் போது கூடுதல் போனஸும் வழங்கப்படலாம்.. இதனால், நாம் கட்டிய பணத்தை விட அதிகமாக கையில் கிடைக்கும்..
ஆனால் இதை மற்ற முதலீடுகளோடு ஒப்பிடும் போது தான் வித்தியாசம் தெரிகிறது.. பங்குச்சந்தை சார்ந்த முதலீடுகள் அல்லது மியூச்சுவல் ஃபண்டுகள் நீண்ட காலத்தில் அதிக வருமானம் தரக்கூடும்.. அதே சமயம் வங்கி FD எனப்படும் நிலையான வைப்பு அல்லது பிபிஎஃப் போன்ற திட்டங்களும் சில நேரங்களில் எல்ஐசியை விட சமமான அல்லது அதிக வருமானம் தரும்.
இருந்தாலும், எல்ஐசியின் மிகப்பெரிய பலம் பாதுகாப்பு தான்.. எந்த நேரத்திலும் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால், முழு காப்பீட்டு தொகையும் குடும்பத்திற்கு போய்ச் சேரும்.. இந்த பாதுகாப்பு அம்சம் மற்ற முதலீடுகளில் கிடைப்பதில்லை.. அதனால் பல குடும்பங்கள் இதை இன்னும் நம்பிக்கையுடன் தேர்வு செய்கின்றன..
பாதுகாப்பு + சேமிப்பு திட்டம்
அதனால், எல்ஐசியை ஒரு "அதிக லாபம் தரும் முதலீடு" என்று பார்க்காமல், ஒரு "பாதுகாப்பு + சேமிப்பு" திட்டமாக பார்க்க வேண்டும்.. இது புரியாமல் அதிக எதிர்பார்ப்புடன் எடுத்தவர்கள் சில நேரங்களில் ஏமாற்றம் அடையலாம்..
இதை விட வேறு ஏதாவது திட்டங்களில் போட்டிருந்தால் என்ன என்றுகூட சிலர் சிந்திக்கிறார்கள்.. ஆனால் உண்மையில், எல்ஐசி ஒரு தவறான தேர்வு கிடையாது.. அது ஒரு பாதுகாப்பான தேர்வு மட்டுமே. அதனால் உங்கள் நோக்கம் அதிக லாபம் என்றால் வேறு வழிகளை தேட வேண்டும்.. ஆனால் உங்கள் குடும்பத்தின் பாதுகாப்பு முக்கியம் என்றால், எல்ஐசி இன்னும் ஒரு நம்பகமான தேர்வாகவே உள்ளது..!!












Click it and Unblock the Notifications