10,+1,+2 பொதுத்தேர்வுகள் எப்போது? மாணவர்களுக்கு கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் கொடுத்த அப்டேட்
சென்னை: தீபாவளி முடிந்ததும் 10,+1, +2 பொதுத் தேர்வு உள்ளிட்ட அனைத்து தேர்வுகள் தொடர்பான அட்டவணை அறிவிப்பு வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலாளராக குமரகுருபரன் சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இதையடுத்து துறை சார்ந்த அறிமுகக் கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை தாங்கினார்.

செய்தியாளர்களிடம் பேசிய கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் தீபாவளி முடிந்ததும், பொதுத் தேர்வு உள்ளிட்ட அனைத்து தேர்வுகள் தொடர்பான அட்டவணை அறிவிப்பு வெளியிடப்படும். 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக என்னிடம் பேசினர். ஆர்ப்பாட்டம், போராட்டம் என அவர்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்துவதற்காக நடத்துகிறார்கள்.
நீதிமன்றத்தில் இருந்து இன்னும் ஆசிரியர் பணியிடங்களை ஏன் நிரப்பாமல் வைத்திருக்கிறீர்கள் என்ற கேள்வி வருகிறது. 2013 டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ஒரு பக்கம் கோரிக்கை வைக்கிறார்கள். 2014, 2017, 2019, 2022ல் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஒரு லட்சத்து 35 ஆயிரம் பேர் காத்திருக்கிறார்கள்.
இதையெல்லாம் ஆலோசனை செய்து, அதற்கு தகுந்தாற்போல், மாற்று ஏற்பாடு என்ன செய்ய முடியுமா என்பதற்கான சில வழிமுறைகளை முதன்மை செயலாளரிடம் முன்வைத்துள்ளோம். இதற்கு இடைப்பட்ட காலத்தில் தான் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. முதலமைச்சர் அலுவலகம் வாயிலாக மாற்று ஏற்பாடுகளை சொல்ல இருக்கிறோம். அதற்கேற்ப முடிவெடுத்து அறிவிப்புகள் வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
வருகைப் பதிவு தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், "எமிஸ் செயலியைப் பொறுத்தவரை, ஆசிரியர்கள் அவர்களது வருகைப் பதிவு மற்றும் மாணவர்களின் வருகைப் பதிவை மட்டும் பதிந்தால் போதும். மற்றவை தேவை இல்லை. தேவை இல்லை என்றால், அதற்கான மாற்றாக கிட்டத்தட்ட 9 ஆயிரம் ரிசோர்ஸை நாங்கள் தயாரித்துக் கொண்டிருக்கிறோம் என்று கூறினார்.
10, 11, 12ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு பொதுத் தேர்வுக்கான தேதிகள் எப்போது அறிவிக்கப்படும் என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அன்பில் மகேஷ், லோக்சபா தேர்தலுக்கான அறிவிப்பு எப்போது வெளியாகும் என்பது முக்கியமாக இருக்கிறது. அதுபோல், ஏப்ரல் மாதம் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் தேர்வு நடக்கலாம் என்று தெரிகிறது.
பிளஸ் 2 பொதுத் தேர்வைப் பொறுத்தவரை, செய்முறைத் தேர்வு முடிந்து, சிறு இடைவெளிக்குப் பின்னர் பொதுத் தேர்வை தொடங்க வேண்டியுள்ளது.
ஜனவரி மாதம் நடத்தப்பட வேண்டிய திருப்புதல் தேர்வை நடத்த வேண்டியிருக்கிறது. டிசம்பர் மாதத்துக்குள் அரையாண்டுத் தேர்வுக்கான பாடத்திட்டங்களை முடிக்க வேண்டிய பணிகள் வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
எனவே, பொதுத் தேர்வுக்கான தேதியை முன்கூட்டியே அறிவித்தால்தான், மாணவர்களும் தேர்வுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ளமுடியும். எனவே, தீபாவளி முடிந்த பின்னர் பொதுத் தேர்வு அட்டவணை குறித்து அறிவிப்பு கட்டாயம் வெளியாகும் என்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
கொரோனா பரவலுக்கு முன்பு வரை கல்வியாண்டின் தொடக்கத்திலேயே பொதுத்தேர்வுகளுக்கான தேதியும் ரிசல்ட் வெளியாகும் தேதியும் அறிவிக்கப்பட்டு விடும்.
2020ஆம் ஆண்டு கொரோனா பரவல் காரணமாக பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு ஆல்பாஸ் போடப்பட்டது. 2021ஆம் ஆண்டும் கொரோனா பரவல் மாணவர்களின் கல்வி, தேர்வுகளை பாதித்தது. 2022ஆம் ஆண்டு பொதுத்தேர்வுகள் தாமதமாகவே நடைபெற்றன. ரிசல்ட் ஜூன் மாதம் 2022ஆம் ஆண்டு வெளியானது. 2022- 2023ஆம் கல்வி ஆண்டில் வகுப்புகள் சரியான நாளில் தொடங்கியதால் ப்ளஸ் 2 முடிவுகள் மே மாதம் வெளியானது.
தற்போது 2023-2024 ஆம் கல்வி ஆண்டிற்கான வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. பொதுத்தேர்வு போலவே காலாண்டு தேர்வுகள் நடைபெற்றுள்ளன. அரையாண்டு தேர்வு டிசம்பர் மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வுகள் மார்ச் மாதம் நடைபெறும் என்று கூறப்பட்டாலும் எந்தெந்த நாளில் என்ன தேர்வுகள் நடைபெறும் என்பது பற்றிய கால அட்டவணை எப்போது வெளியாகும் என்று மாணவர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications