ரூ.10, ரூ.20 நோட்டுகள் அடியோடு மாற போகிறதா? மத்திய அரசு போட்ட புது கணக்கு.. என்ன நடக்குது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரூ.10, ரூ.20 நோட்டுகள் இனி பிளாஸ்டிக்கில் வரப்போகிறதா? இதற்கான சோதனையை தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.. ஆனால் இதனால் இப்போது புழக்கத்திலுள்ள காகித ரூ.10, ரூ.20 நோட்டுகள் செல்லாது என்று அர்த்தம் இல்லை. அவை வழக்கம்போல தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும். அப்படியானால் என்ன மாற்றம் வரப்போகிறது? பாலிமர் நோட்டு என்றால் என்ன? இங்கே சுருக்கமாக பார்ப்போம்.

ரிசர்வ் வங்கி சோதனைக்காக ரூ.10 மதிப்பில் 100 கோடி பாலிமர் நோட்டுகளையும், ரூ.20 மதிப்பில் 100 கோடி நோட்டுகளையும் தயாரிக்க உள்ளது. அதாவது மொத்தம் 200 கோடி பாலிமர் நோட்டுகள். இவை காகித நோட்டுகளுக்கு பதிலாக உடனடியாக கொண்டு வரப்படவில்லை. இரண்டும் சேர்ந்து புழக்கத்தில் எப்படி செயல்படுகின்றன என்பதைத்தான் முதலில் பார்க்கப் போகிறார்கள்.

Notes

பாலிமர் நோட்டு என்பது என்ன

பாலிமர் நோட்டு என்பது என்ன? காகிதத்துக்குப் பதிலாக, கிழியாமல் நீண்ட நாட்கள் தாக்குப்பிடிக்கும் ஒரு வகை பிளாஸ்டிக் பொருளால் இந்த நோட்டுகள் தயாரிக்கப்படும்.. ஸ்ட்ராங்கான பிளாஸ்டிக் பொருளில் தயாரிக்கப்படும். தண்ணீர் பட்டாலும், அழுக்கு ஏற்பட்டாலும், எளிதில் கிழியாமல் இருப்பது இதன் ஸ்பெஷாலிட்டி..

காகித நோட்டுகளைவிட, இந்தவகை நோட்டுகளை நீண்ட காலம் பயன்படுத்த முடியுமாம்.. வெளிநாடுகளில் காகித நோட்டுகளைவிட பல மடங்கு இந்த பாலிமர் நோட்டுகள் அதிக காலம் நீடித்துள்ளன. அதனால்தான் இங்கேயும் இதை கொண்டுவர சோதனை முயற்சியில் இறங்கியுள்ளார்கள்.

இதில் இன்னொரு விஷயமும் உள்ளது.. பாலிமர் நோட்டை செய்ய ஆரம்பத்தில் கொஞ்சம் அதிக செலவு ஆகலாம். ஆனால் நீண்ட நாட்கள் பயன்படுத்த முடிந்தால், அடிக்கடி புதிய நோட்டுகளை அச்சடிக்க வேண்டியிருக்காது. அப்படி பார்த்தால் அரசுக்கு செலவு மிச்சமாகிறதா என்பதையும் இந்த சோதனையில் தெரிந்துகொள்ளப் போகிறார்கள்.

ரூ.10, ரூ.20 நோட்டுகள் மட்டும் ஏன்?

அதற்காக ரூ.10, ரூ.20 நோட்டுகளை மட்டும் ஏன் தேர்வு செய்ய வேண்டும்? என்ற சந்தேகமும் பலருக்கு உள்ளது.. இந்த 10, 20 ரூபாய் நோட்டுகள்தான் புழக்கத்தில் அதிகமாக உள்ளன..

ஏழை, எளிய மக்கள் உட்பட அனைவரிடமும் இருப்பது இந்த நோட்டுகள்தான். இந்த சிறிய மதிப்பிலான நோட்டுகள்தான் அதிகமாக கைமாறுகின்றன. அதனால் இந்த 2 நோட்டுகளும் சீக்கிரமாகவே அழுக்காகி விடுகின்றன.. கிழிந்தும் விடுகின்றன.. பயன்படுத்த முடியாத நிலைமையும் வந்துவிடுகிறது.. எனவேதான், இந்த நோட்டுகளை வைத்தே சோதனை மேற்கொள்வது உபயோகமாக இருக்கும் என்று நினைக்கிறார்கள்.
.
நம்முடைய நாட்டில் வெயில், மழை, ஈரப்பதம் என பல விதமான காலநிலை இருக்கிறது. இந்த சூழலில் பாலிமர் நோட்டுகள் எப்படி இருக்கின்றன என்பதையும் சோதிக்க போகிறார்கள். அதேபோல், ஏடிஎம், பணம் எண்ணும் இயந்திரம் உள்ளிட்டவற்றில் இந்த நோட்டுகளை பயன்படுத்தும்போது எந்த பிரச்சனையும் வருகிறதா என்பதையும் பார்க்கப் போகிறார்கள்.

ஜஸ்ட் டெஸ்ட்டிங்தான்

இப்படியான முயற்சி இந்தியாவுக்கு புதிது கிடையாது.. 2012-ம் ஆண்டிலேயே ரூ.10 பாலிமர் நோட்டுகளை சோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது. ஜெய்ப்பூர், சிம்லா, புவனேஸ்வர், மைசூரு, கொச்சி ஆகிய 5 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டன. ஆனால் தொழில்நுட்பம் மற்றும் கொள்முதல் தொடர்பான சிக்கல்களால் அந்த முயற்சி பின்னர் கைவிடப்பட்டது.

இப்போது அந்த முயற்சி மீண்டும் வந்துள்ளது. இந்த சோதனை வெற்றிகரமாக முடிந்த பிறகே அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும். எனவே இப்போதைக்கு கையிலுள்ள காகித ரூ.10, ரூ.20 நோட்டுகளைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. பாலிமர் நோட்டுகள் வருவது காகித நோட்டுகளை உடனடியாக ஒழிப்பதற்காக கிடையாது.. முதலில் அவை இந்தியாவில் எப்படி வேலை செய்கின்றன என்பதைத்தான் சோதிக்கப் போகிறார்கள்...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+