"ஹாட்ரிக்".. மோப்பம் பிடித்த பாஜக.. 10 தொகுதி ரெடி, வேட்பாளர்களும் ரெடி.. விழிக்கும் திராவிட கட்சிகள்
தமிழக பாஜக போட்டியிட போகும் 10 தொகுதிகள் குறித்த யூகமான தகவல் வட்டமடிக்கிறது
சென்னை: 3 விதமான பிளான்களை திட்டமிட்டு, தமிழக பாஜக காய்நகர்த்தி வரும் நிலையில், புது தகவல் ஒன்று அரசியல் களத்தில் பறந்து கொண்டிருக்கிறது....!
சில மாதங்களுக்கு முன்பு நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவின் எழுச்சி தமிழக பாஜகவுக்கு, பெருத்த நம்பிக்கையையும் உற்சாகத்தையும் தந்து வருகிறது.
இதற்கு பிறகுதான், அதிமுகவில் உட்கட்சி பஞ்சாயத்துகள் தலைதூக்கவும், பாஜக தன்னுடைய "சவுண்ட்" அதிகப்படுத்தியது.

சீக்ரெட் ரூட்
"எப்போதுமே தனித்து போட்டியிட்டால்தான், ஒவ்வொரு கட்சியின் முழுமையான பலம் தெரியும்... அப்போதுதான், அடுத்தடுத்த தேர்தல்களில் நம்மை பலப்படுத்தி கொள்ள, தேர்தல் வியூகங்களை அமைத்து கொள்ள முடியும்" என்று நகர்ப்புற தேர்தல் ரிசல்ட் கிடைத்த அன்றைய தினமே, பிரதமர் மோடி அண்ணாமலையிடம் அறிவுறுத்தியதாக சொல்லப்பட்ட நிலையில், அதே ரூட்டிலேயே பாஜக தற்போது சென்று கொண்டிருப்பதாக தெரிகிறது.

டஃப் அமித்ஷா
ஒருபக்கம் திமுகவுக்கு டஃப் தந்துகொண்டே, மறுபக்கம், மாற்று கட்சியில் உள்ள அதிருப்தியாளர்களை தன்பக்கம் இழுக்க தூண்டில் போடுவது என துரித நடவடிக்கையில் இறங்கிவிட்டது.. அதுமட்டுமல்ல, கடந்த முறை அமித்ஷா சென்னைக்கு வந்தபோது, தமிழக பாஜக தலைவர்களிடம், நிலவரம் குறித்து நீண்ட நேரம் ஆலோசனை நடத்தியிருக்கிறார்.. தற்போதைய அரசியல் மாற்றங்கள், பாஜக ஏற்படுத்திய தாக்கங்கள் குறித்தெல்லாம் காதுகொடுத்தும் கேட்டுள்ளார்.

நிறம் மாறுமா?
இறுதியாக தன்னுடைய நிர்வாகிகளிடம், "பாஜவுக்கு திமுகதான் நம்பர் ஒன் எதிரி.. அதனால் தமிழக அரசை எதிர்த்து தொடர் போராட்டங்கள் நடத்த வேண்டும்.. இதற்கு பாஜக தலைமை முழு ஆதரவு தரும்.. என்ன செய்வீங்களோ தெரியாது, வரப்போகும் எம்பி தேர்தலில் தமிழகத்தில் குறைந்தது 5 தொகுதிகளிலாவது பாஜக வெற்றி பெற வேண்டும் என்று சொல்லிவிட்டு போனதாககூட செய்திகள் பரபரத்தன..

ஹாட்ரிக்
அமித்ஷா வந்து போனபிறகு, 3 விதமான வியூகங்களை கையில் எடுத்துள்ளதாம் தமிழக பாஜக.. ஒன்று மாற்று கட்சியில் இருந்து முக்கிய தலைகளை பாஜகவுக்கு கொண்டு வருவது, அடுத்து, மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்த்து, அதன்மூலம் நாடாளுமன்ற தேர்தலில் 25 தொகுதிகளையாவது வென்றெடுக்க வேண்டும், அடுத்து, பாஜகவில் உறுப்பினர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்பதே அந்த 3 ஹாட்ரிக் பிளான்களாம்..

25 ஸ்பாட்கள்?
அதாவது, 5 இடங்களில் பாஜக வென்றாக வேண்டும் என்று அமித்ஷா கண்டிஷன் போட்டால், 25 இடங்களுக்கு குறி வைத்து காய் நகர்த்த வேண்டும் என்றும் அண்ணாமலை கறாராக நிர்வாகிகளிடம் சொல்லிவிட்டாராம்.. 25 இடங்களுக்கு குறி வைத்தால்தான், 5-ல் நிச்சயம் வெற்றி பெற முடியும் என்றும் பலமாக நம்புகிறாராம்.. ஆனால், இப்போது விஷயம் என்னவென்றால், 10 எம்பி தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுவது என்பதில் பாஜக மூத்த தலைவர்கள் தெள்ளத்தெளிவாக இருக்கிறார்களாம்.

5 + 5 = 10 தொகுதிகள்
இதற்காக பல்வேறு கோணங்களிலும் 39 தொகுதிகளிலும் பாஜக டீமை இறக்கி, பல்வேறு கட்டமான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது.. அந்த ஆய்வுகளின்படி மொத்தம் 10 தொகுதிகளை டாப் லிஸ்ட் போட்டு மேலிடத்துக்கு தந்தார்களாம்.. அதன் அடிப்படையில் தென் சென்னை, வேலூர், நெல்லை, தென்காசி, கோவை, ஈரோடு, நீலகிரி, ராமநாதபுரம், சிவகங்கை, கன்னியாகுமரி ஆகிய 10 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக புது தகவல் ஒன்று வந்துள்ளது..

பசை பசை தாராளம்
இந்த 10 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் கூட தேர்ந்து எடுத்து விட்டார்களாம்... விரைவில் அவர்கள் மூலம் புதிய நடவடிக்கைகள் தொடங்கப்பட உள்ளன... அதுமட்டுமல்ல, பணத்தையும், தண்ணீராக செலவழிக்க போகிறார்களாம்.. சும்மாவே பாஜக "தாராளம்" காட்டும்.. அதுவும் இந்த கங்கணம் கட்டிக்கொண்டு களத்தில் இறங்கி உள்ளதால் தாராளங்களுக்கு பஞ்சமிருக்காது என்கிறார்கள்.. தமிழகத்தில் 6 மாதங்களுக்கு முன்பேயே எம்பி தேர்தலுக்கான வியூகத்தை பாஜக எடுத்துவிட்ட நிலையில், தாமரைகளின் ஸ்பீடுக்கு திராவிட கட்சிகள் ஈடுகொடுக்குமா என்று தெரியவில்லை.. பார்ப்போம்..!












Click it and Unblock the Notifications