தேம்பி தேம்பி அழுதாரே அன்புமணி.. நொறுங்கிய கனவு.. 40 ஆண்டு பாமக போராட்டத்துக்கு பின்னடைவா?
வன்னியர்கள் இடஒதுக்கீடு ரத்து செய்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது
சென்னை: வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீடு செல்லாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்... இது பாமகவுக்கு பெருத்த அதிர்ச்சியை தந்து வருகிறது..
கடந்த 50 வருட காலங்களில் தமிழகத்தில் ஏராளமான போராட்டங்கள் நடந்துள்ளன.. அதிலும் குறிப்பிட்டு சொல்லும்படியாக அமைந்தது சமூக நீதி போராட்டங்கள்தான்..
இதில் பெருமளவு தமிழக மக்களின் கவனத்தை ஈர்த்தது பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம் என்பதை உரக்க சொல்லலாம்.

ராமதாஸ்
வழக்கமாக தேர்தல் என்றாலே, முதல் கட்சியாக பாமகவை இழுத்து உள்ளே போட்டு கொள்ளும் வேலையை அதிமுக, திமுக செய்துவிடும்.. ஆனால், கடந்த முறை 2 கட்சிகளுமே பாமகவுடன் கூட்டணிக்கு தயங்கியது.. இதற்கு ஒரே காரணம் இடஒதுக்கீடு விஷயத்தை டாக்டர் ராமதாஸ் முன்னெடுத்ததுதான். இந்த அளவுக்கு உறுதியாக டாக்டர் ஐயா இதற்கு முன்பு இருந்ததில்லை.. மற்ற கட்சிகள் கூட்டணிகளை முடிவு செய்து பிரச்சாரத்துக்கே சென்றுவிட்ட நிலையில், இடஒதுக்கீடு கோரி மீண்டும் இட ஒதுக்கீடு போராட்டம் தொடங்க உள்ளதாக ராமதாஸ் அறிவித்தார்..

இடஒதுக்கீடு
இப்படித்தான் வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு விவகாரம் சூடுபிடிக்க ஆரம்பித்தது.. இழந்ததை மீட்டாக வேண்டும் என்ற உறுதியோடு டாக்டர் ராமதாஸ் தீவிரத்தை முன்னெடுத்தார்.. சிறிது கால இடைவெளிவிட்டு மீண்டும் வன்னியர் இட ஒதுக்கீட்டு போராட்டத்தை தொடங்க வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது.. அதற்காகவே நடந்து முடிந்த தேர்தலை கனகச்சிதமாக பயன்படுத்தி கொண்டார்.
Recommended Video

பாமக
வழக்கமாக தேர்தல் என்றாலே, முதல் கட்சியாக பாமகவை இழுத்து உள்ளே போட்டு கொள்ளும் வேலையை அதிமுக, திமுக செய்துவிடும்.. ஆனால், கடந்த முறை 2 கட்சிகளுமே பாமகவுடன் கூட்டணிக்கு தயங்கியது.. இதற்கு ஒரே காரணம் இடஒதுக்கீடு விஷயத்தை டாக்டர் ராமதாஸ் முன்னெடுத்ததுதான். இந்த அளவுக்கு உறுதியாக டாக்டர் ஐயா இதற்கு முன்பு இருந்ததில்லை.. மற்ற கட்சிகள் கூட்டணிகளை முடிவு செய்து பிரச்சாரத்துக்கே சென்றுவிட்ட நிலையில், இடஒதுக்கீடு கோரி மீண்டும் இட ஒதுக்கீடு போராட்டம் தொடங்க உள்ளதாக ராமதாஸ் அறிவித்தார்..

அழைப்பு
டிசம்பர் 1 முதல் போராட்டம் நடக்கும், போராட்டத்தை நிறுத்திவிட்டுப் பேச்சுவார்த்தைக்கு வாருங்கள் என எங்களை அழைக்கும் அளவுக்குப் போராட்டம் தீவிரமாக இருக்கும் என்று ராமதாஸ் கூறியிருந்தார். அதன்படியே டிசம்பர் 1 அன்று சென்னையில் அன்புமணி ராமதாஸ் தலைமையில் போராட்டம் அறிவிக்கப்பட்டது. ஏராளமானோர் போராட்டத்தில் கலந்து கொள்ள வாகனங்களில் திரண்டு வந்தனர்.. ஆனால் அவர்கள் சென்னை எல்லையில் போலீஸாரால் தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டனர்..

இன்னல்கள்
எனினும் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் வாகன நெரிசலில் சிக்கினர்... இது தவிர ரயில் மறியலிலும் ஈடுபட்டதால் புறநகர் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இதனால் கடற்கரை தாம்பரம், செங்கல்பட்டு செல்லும் ரயில்கள், சென்ட்ரலிலிருந்து அரக்கோணம், திருவள்ளூர் செல்லும் ரயில்கள் ஆகியவை ரத்து செய்யப்பட்டன... இதனால் அவ்வழியாகப் பயணிக்கும் பொதுமக்களும், அங்கிருந்து பணிக்கு சென்னை வரும் பொதுமக்களும் வெகுவாக பாதிக்கப்பட்டனர்.

இடஒதுக்கீடு
மற்றொருபுறம் ராமதாஸின் இந்த கோரிக்கை ஏற்கப்படுமா என்ற சந்தேகம் வலுத்தது.. காரணம், பொதுவாக, தேர்தல் சமயங்களில் இதுபோன்ற இடஒதுக்கீடு விஷயத்தில் அரசு கவனம் செலுத்தி தீர்மானம் நிறைவேற்றுவதில்லை.. தேர்தல் நேரத்தில், ஒரு சமூகத்துக்கு இடஒதுக்கீடு வழங்கினால், மற்ற ஜாதியினரும் கிளம்பி விடுவார்கள் என்பது இயல்பான சந்தேகமாக அன்றைய ஆளும் தரப்புக்கு இருந்தது. இப்படிப்பட்ட சமயத்தில்தான் மாஜி அமைச்சர்கள் தைலாபுரத்தில் 2, 3, முறை சந்தித்து பேசினார்கள்.. ஆனாலும் தேர்தல் உடன்பாடு எட்டப்படவில்லை..

இடஒதுக்கீடு
கூட்டணி முடிவாகாமல் அதிமுக திணற ஆரம்பித்தது.. எங்களுக்கும் இடஒதுக்கீடு வேண்டும் என்று கருணாஸ் கொந்தளித்தார்.. இறுதியில் சட்டசபை கூட்டத்தொடரில், வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்குவதற்கான 10.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவை முதல்வர் எடப்பாடியார் தாக்கல் செய்தார்.

தாக்கல்
40 ஆண்டு காலப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என வன்னியர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள், பாமகவினர் பட்டாசு வெடித்து இதை கொண்டாடினர்... டாக்டர் ராமதாஸோ உச்சக்கட்ட மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.. "வன்னியர்களுக்கு இடப்பங்கீடு கொடுத்தார்கள், அதனால் மீண்டும் ஆட்சிக்கு வந்தார்கள் என்று சொல்லும் வகையில் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக ஒட்டுமொத்த வன்னியர்களின் களப்பணி அமைய வேண்டும்" என்று ட்வீட் செய்தார்.

வீடியோ
அதேபோல அன்புமணி ராமதாசும் தன்னுடைய மகிழ்ச்சியை, ராமதாசுக்கு போனை போட்டு தெரிவித்திருந்தார்.. இது சம்பந்தமான ஒரு வீடியோவும் அப்போது சோஷியல் மீடியாவில் வைரலானது.. டி-சர்ட் அணிந்தபடி உட்கார்ந்து கொண்டே அன்புமணி போனில் பேசுகிறார்.. அப்போது அவர் கண்களில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.. கண்ணீரை ஒரு கையால் துடைத்து கொண்டே, இன்னொரு கையால் செல்போனில் பேசுகிறார்..

வன்னியர்கள்
"40 வருஷமாக இதுக்குதானே உழைச்சோம்.. இது முதல்கட்ட முதல் கட்டம் தான்... அடுத்தது இன்னும் கொஞ்சம் சேர்த்து வாங்கிக்கலாம்.. 40 வருஷங்கள் என்பது சாதாரண உழைப்பு கிடையாது.. எவ்வளவு தியாகம் செய்திருக்கிறோம்" என்று பேசுவது அதில் பதிவாகி இருந்தது. உணர்ச்சிபிழம்பின் மொத்த வெளிப்பாடாக இந்த வீடியோ அமைந்திருந்ததை யாராலும் மறுக்க முடியாது. இந்த அறிவிப்பினால் வன்னியர்கள் சமூகம் நிம்மதியடைந்தது மட்டுமல்லாமல் ராமதாஸின் போராட்டமும் வெற்றி பெற்றதாக பார்க்கப்பட்டது.. ஆனால், அதிமுக இதற்கான அதிருப்தியை சட்டசபை தேர்தலில் அறுவடை செய்துவிட்டது என்பது வேறு விஷயம்.

ஆட்சி மாற்றம்
ஆட்சி மாறியது.. திமுக பொறுப்பேற்றது.. இடஒதுக்கீட்டுக்கான அரசாணை வெளியிடப்பட்டது... கல்லூரி கலந்தாய்வுகளிலும் இந்த உள் இடஒதுக்கீடு முறை நடைமுறைப்படுத்தப்பட்டது.. இப்படிப்பட்ட சூழலில்தான், பரமக்குடியை சேர்ந்த பாலமுரளி என்பவர் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், "எவ்வித அடிப்படை தரவுகளும் இன்றி உள் இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.. அதனை ரத்து செய்ய வேண்டும்.. முறையாக ஜாதிவாரியான கணக்கெடுப்பு நடத்திய பிறகே, இட ஒதுக்கீடு வழங்கியிருக்க வேண்டும்" என்று கோரியிருந்தார்.

ஹைகோர்ட்
இவர் இப்படி மனு தாக்கல் செய்ததுமே, இதே கோரிக்கையை முன்வைத்து, 60-க்கும் மேற்பட்டோர் மனுதாக்கல் செய்தனர்.. இது தொடர்பான விசாரணையை சென்னை ஹைகோர்ட் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி துரைசாமி அமர்விற்கு மாற்றியது.. இந்த மனுக்கள் நீதிபதிகள் எம்.துரைசாமி, கே.முரளி சங்கர் ஆகியோர் அடங்கிய அமா்வு முன் விசாரிக்கப்பட்டன... இது தொடர்பாக பல்வேறு தரப்பு வாதங்கள் நடந்து வந்தன.. இன்று தீர்ப்பு வெளியாகி உள்ளது..

ரத்து
அதன்படி, வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சட்டம், அரசியலமைப்புக்கு எதிரானது, சாதிவாரியான கணக்கெடுப்பை நடத்தாமல் உள் ஒதுக்கீடு வழங்கியது தவறானது என்று கூறி, தமிழக அரசு கொண்டு வந்த 10.5 % உள் இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதிர்ச்சி
இத்தனை வருட கால உழைப்பும், அர்ப்பணிப்பும், தீவிர போராட்டமும் முன்னெடுத்து வந்த பாமகவுக்கு இது பெருத்த அடியாக விழுந்துள்ளது.. டாக்டர் ராமதாஸ் மனம் சுக்குநூறாக சிதறி போயுள்ளது.. இனி வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு ரத்து விஷயத்தை எப்படி கையாள போகிறார்? இன்னொரு சட்டபோராட்டத்தை முன்னெடுப்பாரா? அதற்கான மனவலிமையை பாமக பெற்றுள்ளதா? என்பதெல்லாம் இனிமேல்தான் தெரியவரும்.
-
கீழ்வேளூரில் வடிவேல் ராவணன், அம்பத்தூரில் சேகர்.. பாமகவின் 3 வேட்பாளர்களை அறிவித்த அன்புமணி! -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
திருப்போரூர் அல்லது பாப்பிரெட்டிபட்டி.. செளமியா அன்புமணி களமிறங்கும் தொகுதி எது? -
ராமதாசுக்கு அதிர்ச்சி! பாமகவின் மாம்பழம் சின்னம் வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.. அன்புமணி குஷி! -
அய்யாவுக்கு கடைசி சான்ஸ்.. ’மாம்பழம்’ கேட்டு அடம் பிடிக்கும் ராமதாஸ்! இன்று கோர்ட்டில் விசாரணை! -
பெரம்பூர் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது விஜய்க்கு சாதகமா? கள நிலவரம் என்ன? டேட்டாவை பாருங்க -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications