முத்து முத்தான 10 அறிவிப்புகள்.. பட்ஜெட்டில் பிடிஆர் சொன்ன முக்கியமான விஷயங்கள்! அடித்தது ஜாக்பாட்!

சுற்றுலா துறையை மையமாக வைத்து பல முக்கிய அறிவிப்புகள் இன்று வெளியாகும் வாய்ப்புகள் உள்ளன.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட தமிழ்நாடு பட்ஜெட்டில் இன்று 10 முக்கியமான அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.

2023-24ம் ஆண்டிற்கான தமிழ்நாடு பட்ஜெட் இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

அவர் 3வது முறையாக தாக்கல் செய்யும் பட்ஜெட் ஆகும் இது. பல்வேறு முக்கிய அறிவிப்புகளை அவர் பட்ஜெட்டில் வெளியிட்டார்.

முக்கிய அறிவிப்பு

முக்கிய அறிவிப்பு

1. மகளிர் உரிமைத்தொகை' தகுதியான குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ₹1000 வரும் நிதியாண்டும் முதல் வழங்கப்படும் என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு மட்டும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். இதற்கான லிஸ்ட் எடுக்கும் பணிகள் தற்போது நடந்து வருகிறது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம், தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு மட்டும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 2.15 கோடி ரேஷன் அட்டை உள்ளது. இதில் அனைத்திலும் குடும்ப தலைவிகளுக்கு பணம் கொடுப்பது இயலாத காரியம். இதனால் அரசுக்கு பெரிய அளவில் சுமை ஏற்படும். அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்தம் நபர்கள், சொந்த வீடு வைத்து இருப்பவர்கள் ஆகியோருக்கு இந்த உரிமைத்தொகை அளிக்கப்படாது என்று அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2. ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் இரண்டாம் கட்டம் ரூ.7145 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். ரூ77,000 கோடியில் புதிய மின் உற்பத்தி திட்டம் செயல்படுத்தப்படும். ரூ 880 கோடியில் சேலத்தில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும். சென்னை தீவுத்திடலில் 30 ஏக்கர் நிலப்பரப்பில் நகர்ப்புற பொதுச்சதுக்கம், கண்காட்சி அரங்குகள், திறந்தவெளி திரையரங்கம் ஆகிய நவீன வசதிகள் அமைத்திட ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

சிங்கார சென்னை

சிங்கார சென்னை

3. 1000 புதிய பேருந்துகள், 500 பழைய பேருந்துகளை புதுப்பிக்க ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். வடபழனி, திருவான்மியூர், வியாசர்பாடியில் உள்ள பேருந்து பணிமனைகள் ₹1600 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.

4. சென்னை கோடம்பாக்கம்- பூவிருந்தவல்லி மெட்ரோ ரயில் திட்டம் 2025-ல் நிறைவு செய்யப்படும். சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ10,000 கோடி நிதி ஒதுக்கீடு என்று தமிழ்நாடு பட்ஜெட்டில் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

ஐடி பார்க்

ஐடி பார்க்

5. ரூ100 கோடியில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும். விருதுநகர், வேலூர், கள்ளக்குறிச்சி, கோயம்புத்தூர் ஆகிய புதிய சிப்காட் தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும். இதனால் 22,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

6. ரூ1,000 கோடியில் வட சென்னை வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும், தமிழ்நாட்டில் உள்ள 10 ஆயிரங்கள் குளங்கள், நீர் நிலைகள் தூய்மைப்படுத்தப்படும். அடையாறு , கூவம் பகுதிகளை மறுசீரமைக்க ரூ. 1,500 கோடி செலவில் செயல்படுத்தப்படும் என்று தமிழ்நாடு பட்ஜெட்டில் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

அரசு ஊழியர்கள்

அரசு ஊழியர்கள்

7. ரூ621 கோடியில் சென்னை அண்ணாசாலையில் 4 வழி மேம்பாலம் அமைக்கப்படும். சென்னை தேனாம்பேட்டை- சைதாப்பேட்டை இடையே 4 வழி மேம்பாலம் கட்டப்படும். ரூ621 கோடியில் சென்னை அண்ணாசாலையில் 4 வழி மேம்பாலம் அமைக்கப்படும்.


8. எழில்மிகு கோவை, மாமதுரை திட்டங்கள் மூலம் 2 நகரங்கள் மேம்படுத்தப்படும். ரூ172 கோடியில் கோவையில் செம்மொழி பூங்கா அமைக்கப்படும். கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் ₹9000 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். மதுரையில் ₹8500 கோடி செலவில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்.

9. பள்ளி கல்வித்துறைக்கு ரூ.40,299 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். பள்ளி கல்வித்துறையின் கீழ் அனைத்து துறை பள்ளிகளும் கொண்டு வரப்படும். அறநிலையத்துறை கீழ் செயல்படும் பள்ளிகள் கல்வித்துறைக்கு கீழ் கொண்டு வரப்படும். புதிய வகுப்பறைகள், ஆய்வகங்களுக்கு ரூ.1500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாடு திட்டத்தில் புதிய வகுப்பறைகள், ஆய்வகங்கள் கட்ட ரூ.1500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்., 2 ஆண்டுகளில் மாணவர் சேர்க்கை கணிசமாக உயர்ந்துள்ளது. ரூ1,500 கோடியில் புதிய வகுப்பறைகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.


10 . தமிழ்நாட்டில் காலை சிற்றுண்டி திட்டம் விரிவுப்படுத்தப்படும் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்து உள்ளார். வரும் கல்வி ஆண்டு முதல் தமிழ்நாட்டில் உள்ள 30 ஆயிரத்து 122 அரசு தொடக்கப் பள்ளிகளில் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும். ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் 18 லட்சம் மாணவர்கள் பயனடையும் வகையில், இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். இதற்கு 500 கோடி ரூபாய் செலவு செய்யப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+