Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இங்கே ஸ்டாலின்.. மத்தியில் மோடி.. 2 பேருமே கிளீன் ஸ்வீப்தான்! தேர்தல் சர்வே சொன்ன 10 ஷாக் பாயிண்ட்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: லோக்சபா தேர்தல் தொடர்பாக வரிசையாக சர்வேக்கள் வெளியாகி வருகின்றன. இந்த சர்வேக்கள் பல்வேறு அதிர்ச்சி தரும் சுவாரசியமான விஷயங்களை வெளியிட்டு வருகின்றன. டைம்ஸ் நவ் - இடிஜி மற்றும் இந்தியா டிவி-சிஎன்எக்ஸ் (India TV-CNX) ஆகியவை இது தொடர்பாக கருத்து கணிப்புகளை மேற்கொண்டு உள்ளன.

இந்த இரண்டு கருத்து கணிப்புகளிலும் சில முக்கியமான தகவல்கள் அடங்கி உள்ளன. முக்கியமாக தமிழ்நாட்டில் மீண்டும் திமுக கூட்டணியே அதிக லோக்சபா இடங்களில் வெல்லும், மத்திய பாஜக கூட்டணியே அதிக இடங்களில் வெல்லும் என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன. அந்த கணிப்புகள் தெரிவிக்கும் 10 முக்கியமான விஷயங்கள் இங்கே.

10 points you should know about Lok Sabha elections Survey results on India and Tamil Nadu

1. நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜகவை விட திமுகவின் இந்தியா கூட்டணிதான் அதிக இடங்களை வெல்லும் என்று டைம்ஸ் நவ் - இடிஜி கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலில் மொத்த இடங்கள்: 39
- இதில் பாஜகவின் என்டிஏ கூட்டணி : 4-8 இடங்கள் வெல்லும்
- காங்கிரஸ் - திமுகவின் இந்தியா கூட்டணி: 30-34 இடங்கள் வெல்லும்
- மற்றவை: 0-2 இடங்கள் வெல்லும் என்று கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

2. இதில் பாஜக 4-8 இடங்களை பெறும் என்று தெரிவிக்கப்பட்டாலும்.. பாஜகவிற்கு இது சந்தோசமான செய்தி என்றாலும் ஒரு லாக் இதில் இருக்கு. அதன்படி இது என்டிஏ வெற்றியாகும். அதிமுக - பாஜக இணைந்து இருந்த போது எடுக்கப்பட்ட கருத்து கணிப்பு ஆகும். இப்போது இவர்கள் கூட்டணியில் இல்லை. 2024 லோக்சபா தேர்தலில் இவர்கள் கூட்டணி கிடையாது என்று அறிவித்துள்ளனர். அப்படி இருக்க.. கூட்டணி இல்லாமல் இதே இடங்கள் வருமா என்பது சந்தேகம். இந்த கருத்து கணிப்பும் கூட அதிமுக - பாஜக இணைந்த என்டிஏ கூட்டணியின் வெற்றிவாய்ப்பு தொடர்பான கணிப்பு ஆகும். இதனால் இந்த 4-8 இடங்களை பாஜக கூட்டணி வெல்லுமா என்பது சந்தேகமே.

3. மொத்தம் 543 இடங்கள் இருக்கும் நிலையில், எந்தவொரு கட்சி அல்லது கூட்டணியும் ஆட்சியை அமைக்கக் குறைந்தது 272 இடங்கள் தேவை. இதில் அடுத்தாண்டு நடைபெறும் லோக்சபா தேர்தலில் பாஜகவின் என்டிஏ கூட்டணி மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் வென்று ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. நாடு முழுக்க 543 இடங்கள் இருக்கும் நிலையில், பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கு 297-317 இடங்கள் கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. மறுபுறம் "இந்தியா" கூட்டணிக்கு 165- 185 இடங்கள் கிடைக்கும் என அதில் கூறப்பட்டுள்ளது.

4. அடுத்து பிராந்திய கட்சிகளான ஒய்ஆர்எஸ் காங்கிரஸ் கட்சிக்கு 24-25 இடங்கள் கிடைக்கும் என்றும் மற்றொரு பிராந்திய கட்சியான பிஆர்எஸ் கட்சிக்கு 9-11 இடங்கள் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

5. நாடாளுமன்ற தேர்தலில் மேற்கு வங்கத்தில் பாஜகவை விட இந்தியா கூட்டணிதான் அதிக இடங்களை வெல்லும் என்று டைம்ஸ் நவ் - இடிஜி கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள கருத்து கணிப்பில், மக்களவை 2024 - மேற்கு வங்கம்: மொத்த இடங்கள்: 42
- பாஜகவின் என்டிஏ கூட்டணி : 17-19
- திரிணாமூல் காங்கிரஸ் - காங்கிரசின் இந்தியா கூட்டணி: 22-26
- மற்றவை: 0

6.ஆனால் உத்தர பிரதேசத்தில் பாஜகதான் மீண்டும் மெஜாரிட்டி இடங்களை வெல்லும் என்று இந்த கருத்து கணிப்பில் கூறப்பட்டு உள்ளது. உத்தரபிரதேசம்: மொத்த இடங்கள்: 80
- பாஜகவின் என்டிஏ கூட்டணி: 70-74
- சமாஜ்வாதி - காங்கிரசின் இந்தியா கூட்டணி: 4-8
- பகுஜன் சமாஜ்: 0-1
- மற்றவை: 1-3

10 points you should know about Lok Sabha elections Survey results on India and Tamil Nadu

7. இன்னொரு பக்கம் இந்தியா டிவி-சிஎன்எக்ஸ் (India TV-CNX) நேற்று மேற்கு வங்காளம், ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, அசாம், அருணாச்சல பிரதேசம், திரிபுரா, மணிப்பூர், மேகலாயா, சிக்கிம், நாகலாந்து, மிசோராம் ஆகிய மாநிலங்களில் கருத்து கணிப்புகளை வெளியிட்டது.

8. மேற்கூறிய 18 மாநிலங்களில் மொத்தம் 282 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் பாஜக 118 இடங்களிலும், இந்தியா கூட்டணி 110 இடங்களிலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

9. தமிழ்நாடு, ஆந்திரா, கேரளாவில் பாஜக மற்றும் பாஜக கூட்டணிக்கு ஒரு இடங்கள் கூட கிடைக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் 25 தொகுதிகளிலும், ராஜஸ்தான் மாநிலத்தில் 23 தொகுதிகளிலும், கர்நாடகாவில் 16 தொகுதிகளிலும், மேற்கு வங்கத்தில் 10 தொகுதிகளிலும், ஒடிசாவில் 8 தொகுதிகளிலும், சத்தீஸ்கரில் 7 தொகுதிகளிலும், தெலங்கானாவில் 6 தொகுதிகளிலும், அசாம் மாநிலத்தில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி 12 தொகுதிகளிலும், 7 வடகிழக்கு மாநிலங்களில் பாஜக தலைமையிலான கூட்டணி 7 இடங்களிலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

10.‛இந்தியா' கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுக தமிழ்நாட்டில் 21 தொகுதிகளை அள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 30 தொகுதிகளிலும் வெல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

( குஷியில் பாஜக.. 4-8 இடம் ஜெயிக்கும்! ஆனா அங்கதான் பெரிய லாக் இருக்கு! ஷாக் சர்வே! இதை கவனிச்சீங்களா? )

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+