குஷியில் பாஜக.. 4-8 இடம் ஜெயிக்கும்! ஆனா அங்கதான் பெரிய லாக் இருக்கு! ஷாக் சர்வே! இதை கவனிச்சீங்களா?
சென்னை: தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலில் கட்சிகள் எத்தனை இடங்களில் வெல்லும் என்று டைம்ஸ் நவ் செய்தி நிறுவனம் இடிஜி அமைப்பு இணைந்து கணிப்பு வெளியிட்டு உள்ளது.
லோக்சபா தேர்தலுக்கான கருத்து கணிப்புகள் வரிசையாக வெளியாகி வருகின்றன. நாடாளுமன்ற தேர்தல் நடக்க இன்னும் 7-8 மாதங்கள் உள்ள நிலையில்தான் கருத்து கணிப்புகள் அடுத்தடுத்து வெளியாக தொடங்கி உள்ளன. அதன்படி 2024 நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காது. பாஜக கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளின் "இந்தியா" கூட்டணி இடையே கடுமையான போட்டி இருக்கும் என்று சில கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளன.

அதே சமயம் பாஜகவிற்கு பெரும்பான்மை கிடைக்கும் என்றும் சில கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளன. இப்படிப்பட்ட நிலையில்தான் நாடாளுமன்ற தேர்தலில் மேற்கு வங்கத்தில் பாஜகவை விட இந்தியா கூட்டணிதான் அதிக இடங்களை வெல்லும் என்று டைம்ஸ் நவ் - இடிஜி கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலில் மொத்த இடங்கள்: 39
- இதில் பாஜகவின் என்டிஏ கூட்டணி : 4-8 இடங்கள் வெல்லும்
- காங்கிரஸ் - திமுகவின் இந்தியா கூட்டணி: 30-34 இடங்கள் வெல்லும்
- மற்றவை: 0-2 இடங்கள் வெல்லும் என்று கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
லாக் இருக்கு?: இதில் பாஜக 4-8 இடங்களை பெறும் என்று தெரிவிக்கப்பட்டாலும்.. பாஜகவிற்கு இது சந்தோசமான செய்தி என்றாலும் ஒரு லாக் இதில் இருக்கு. அதன்படி இது என்டிஏ வெற்றியாகும். அதிமுக - பாஜக இணைந்து இருந்த போது எடுக்கப்பட்ட கருத்து கணிப்பு ஆகும்.
அதிமுக - பாஜக இடையிலான கூட்டணி மோதல் தற்போது உட்கட்சி மோதலாக உருவெடுத்து உள்ளது. ஆம் கட்சியில் இந்த கூட்டணி மோதலை வைத்து கதகளி ஆட ஒரு தலைவர் தயாராகிவிட்டதாக கூறப்படுகிறது. அதிமுக - பாஜக கூட்டணி கடந்த வாரம் முறிந்தது. அண்ணாமலையின் தொடர் பேச்சு அதிமுகவை சீண்டவே இவர்கள் கூட்டணி முறிந்ததாக கூறப்பட்டது.
இப்போது இவர்கள் கூட்டணியில் இல்லை. 2024 லோக்சபா தேர்தலில் இவர்கள் கூட்டணி கிடையாது என்று அறிவித்துள்ளனர். அப்படி இருக்க.. கூட்டணி இல்லாமல் இதே இடங்கள் வருமா என்பது சந்தேகம். இந்த கருத்து கணிப்பும் கூட அதிமுக - பாஜக இணைந்த என்டிஏ கூட்டணியின் வெற்றிவாய்ப்பு தொடர்பான கணிப்பு ஆகும்.
மொத்த வெற்றி வாய்ப்பு: மொத்தம் 543 இடங்கள் இருக்கும் நிலையில், எந்தவொரு கட்சி அல்லது கூட்டணியும் ஆட்சியை அமைக்கக் குறைந்தது 272 இடங்கள் தேவை. இதில் அடுத்தாண்டு நடைபெறும் லோக்சபா தேர்தலில் பாஜகவின் என்டிஏ கூட்டணி மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் வென்று ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. நாடு முழுக்க 543 இடங்கள் இருக்கும் நிலையில், பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கு 297-317 இடங்கள் கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. மறுபுறம் "இந்தியா" கூட்டணிக்கு 165- 185 இடங்கள் கிடைக்கும் என அதில் கூறப்பட்டுள்ளது.
அடுத்து பிராந்திய கட்சிகளான ஓய்ஆர்எஸ் காங்கிரஸ் கட்சிக்கு 24-25 இடங்கள் கிடைக்கும் என்றும் மற்றொரு பிராந்திய கட்சியான பிஆர்எஸ் கட்சிக்கு 9-11 இடங்கள் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications