பாட்டிலுக்கு பத்து ரூபாய்.. 10 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்.. குடிமகன்கள் அதிரடி கேள்வி
சென்னை: மது பாட்டில்களை நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு விற்ற புகாரின் பேரில், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 10 டாஸ்மாக் ஊழியர்களை நிர்வாகம் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. பாட்டிலுக்கு (பாட்டிலே திரும்ப பெரும் திட்டத்தின் கீழ் பத்து ரூபாய் தவிர்த்து கூடுதலாக பத்து ரூபாய்) பத்து ரூபாய் அதிகமாக வாங்குவது என்பது தமிழ்நாடு முழுக்கவே இருக்கிறது எனவே தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் ஊழியர்களை சஸ்பெண்ட் செய்ய டாஸ்மாக் நிர்வாகம் தயாராக உள்ளதா என குடிமகன்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
தமிழ்நாடு முழுக்கவே பல்வேறு டாஸ்மாக் கடைகளில் பாட்டிலை திரும்ப ஒப்படைக்கும் நிகழ்வுக்காக பத்து ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. அதேநேரம் அதைவிடவும் கூடுதலாக பத்து ரூபாய் எல்லா டாஸ்மாக் கடையிலும் வசூலிப்பதாக புகார்களை குடிமகன்கள் கூறி வருகிறார்கள். இந்த விவகாரத்தில் கையும் களவுமாக மாட்டும் ஊழியர்கள், மொபைல் போனில் சிக்கும் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவது வாடிக்கையாக உள்ளது . அவ்வப்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் சில டாஸ்மாக் ஊழியர்கள் பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக வாங்கியதாக சஸ்பெண்ட் செய்யப்படுவதும் நடக்கிறது. அப்படித்தான் திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 10 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

நடந்தது என்ன?
திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில், மது பாட்டில்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்படுவதாகத் தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.
குறிப்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சென்னையின் புறநகர் பகுதிகளான நசரத்பேட்டை, திருநின்றவூர், பட்டாபிராம் மற்றும் முகப்பேர் ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் இந்த முறைகேடு நடப்பதாகத் தெரியவந்தது.
நிர்வாகத்தின் அதிரடி நடவடிக்கை
இந்த புகார்களைத் தொடர்ந்து, டாஸ்மாக் நிர்வாகம் நடத்திய ரகசிய ஆய்வில் ஊழியர்கள் கூடுதல் விலைக்கு மது விற்றது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, விதிமீறலில் ஈடுபட்ட அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்த 10 ஊழியர்களை உடனடியாக சஸ்பெண்ட் செய்து டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
எச்சரிக்கை
"அரசு நிர்ணயித்த விலையை விட ஒரு ரூபாய் கூடுதலாக விற்றாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என டாஸ்மாக் நிர்வாகம் மீண்டும் எச்சரித்துள்ளது. இந்த அதிரடி நடவடிக்கை மற்ற டாஸ்மாக் ஊழியர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதே நேரம் இதை பார்த்த குடிமகன்கள் பலர், தமிழ்நாடு முழுக்கவே பல்வேறு டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு கூடுதல் விலைக்கு விற்பது தொடர்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளனர். அப்படித்தான் சஸ்பெண்ட் செய்வதாக இருந்தால் தமிழ்நாடு முழுக்க டாஸ்மாக் ஊழியர்களை சஸ்பெண்ட் செய்ய வேண்டியது இருக்கும் என்று குடிமகன்கள் சவால் விடுத்துள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications