சென்னையில் குவிக்கப்படும் 10 ஆயிரம் போலீசார்.. இரவு நேர ஊரடங்கு ரொம்ப ஸ்ட்ரிக்ட்!
சென்னை: சென்னையில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் 10 ஆயிரம் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளதால் இரவு நேரங்களில் ஊரடங்கு மிகவும் கெடுபிடியாக இருக்கும் என்றே தெரிகிறது.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இதன்படி தினமம் இரவு 10 முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும்.
இரவு நேரத்தில் தேவையின்றி வெளியே வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பால், பத்திரிகை, மருந்து, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டும் இரவு ஊரடங்கு நேரத்தின் போது பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தேவையின்றி வருபவர்கள்
சென்னையில் 499 இடங்களில் தடுப்புகள் அமைத்து தேவையின்றி வெளியில் வருபவர்கள் கண்காணிக்கப்படுவார்கள். அது மட்டுமல்லாமல் அவர்கள் மீது குடம் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வியாபாரிகள்
வணிக நிறுவனங்கள், வியாபாரம் செய்வோர் இரவு 10 மணிக்கு முன்பாக தங்களது வியாபாரத்தை முடித்துக் கொண்டு கடைகளை அடைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பணி, மருத்துவ உதவிக் கோரி செல்பவர்கள் அதற்கான ஆவணங்களை காண்பித்தால் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் காவல் துறையினர் தெரிவித்துள்ளார்கள்.

10 ஆயிரம் போலீஸார்
இதற்காக சென்னையில் 10 ஆயிரம் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளார்கள். கொரோனா பரவல் அதிகமாக பரவுவதை தடுக்கவே இது போன்ற கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே மக்கள் அனைவரும் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.

அத்தியாவசிய பொருட்கள்
அது போல் ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் மக்கள் யாரும் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். அத்தியாவசிய பொருட்களை முன் கூட்டியே வாங்கி வைத்துக் கொள்ளுமாறும் பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகத்தினர் அறிவுரை வழங்கியுள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications