கோவிலம்பாக்கத்தில் 10 வயது சிறுமி மீது தண்ணீர் லாரி மோதியதால் பலி.. தாயின் கண் முன்னே நடந்த சோகம்
சென்னை: சென்னை கோவிலம்பாக்கத்தில் தண்ணீர் லாரி மோதிய விபத்தில் சிக்கி 10 வயது சிறுமி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சனி, ஞாயிறு விடுமுறை முடிந்து இன்று பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள் மீண்டும் திறந்தன. இதனால் காலை வேளையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு ஆங்காங்கே வாகனங்கள் நிற்பது வழக்கம்.

இது போல் சென்னை உள்ளிட்ட நகரங்களில் நடக்கும் விஷயம். அந்த வகையில் இன்று காலை சென்னை கோவிலம்பாக்கத்தை சேர்ந்த தனியார் பள்ளி மாணவி லியோரா ஸ்ரீ (10) தனது தாயுடன் இரு சக்கர வாகனத்தில் பள்ளிக்கு புறப்பட்டார்.
அப்போது வழியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. இதனால் மெல்ல மெல்ல ஊர்ந்து வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. இந்த போக்குவரத்து நெரிசலில் லியோரா ஸ்ரீயின் இரு சக்கர வாகனமும் சிக்கியது. போக்குவரத்து சற்று சீராகி வாகனங்கள் ஒன்றாக புறப்படத் தயாரானது.
அப்போது லியோரா ஸ்ரீயின் தாயும் தனது வாகனத்தை இயக்கினார். அப்போது அவரது வாகனம் நிலைத்தடுமாறி கவிழ்ந்தது. இந்த விபத்தில் கீழே விழுந்த லியோரா ஸ்ரீ மீது தண்ணீர் லாரியின் சக்கரம் ஏறியது. இதில் அந்த சிறுமி சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டார்.
இந்த விபத்தை ஏற்படுத்திய டிரைவர் சாலையிலேயே வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பியோடிவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த கோவிலம்பாக்கம் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். தப்பியோடிய டிரைவரை தேடி வருகிறார்கள். தாயின் கண் முன்னே மகள் துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
தஞ்சையில் கள்ளக்காதல்.. நள்ளிரவில் புருஷன்- சொந்த அக்காவை தீயில் கொளுத்திய அமுதா -
Kerala: ஒன்றரை வயது குழந்தையின் உடலில் 91 காயங்கள்! 7 எலும்பு முறிவுகள்! துடிதுடித்த திருவனந்தபுரம்! -
காலையில் கஞ்சா பால்.. இட்லிக்கு கஞ்சா சட்னி.. பெட் ரூம் முழுக்க 70 கஞ்சா செடிகள்.. மிரண்ட போலீஸ் -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications