முன்னாள் முதல்வர் கருணாநிதி 100வது பிறந்தநாள்:நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்துகிறார்
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் 100-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட இருந்தநிலையில், ஒடிசா ரயில் விபத்து காரணமாக தமிழக முதலமைச்சரின் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.
கலைஞர் கருணாநிதிக்கு இன்று 99 வயது நிறைவடைந்து 100 வயது ஆரம்பிக்க உள்ளது. இதனை முன்னிட்டு தமிழ்நாடு அரசு தரப்பிலும், திமுக கட்சி சார்பிலும் மிக பிரமாண்டமாக விழா இன்று கொண்டாடப்படுகிறது..

அதுமட்டுமல்ல, இந்த ஆண்டு கருணாநிதியின் 100-வது பிறந்த நாள் என்பதால் வருடம் முழுவதுமே நூற்றாண்டு விழாவாக திமுகவினர் கொண்டாட உள்ளனர். திராவிட இயக்கத்தின் கொள்கை , கலைஞரின் அளப்பரிய சாதனைகளை மக்கள் நெஞ்சில் பதிவு செய்யும் வகையில் இது அமைந்திடும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது
தமிழக அரசு தரப்பிலும், திமுக சார்பிலும் மிக பிரமாண்டமாக விழா கொண்டாடுவதாக அறிவிப்புகள் வெளியாகின.. அதாவது, கருணாநிதியை பெருமைப்படுத்தும் வகையில் அவரால் பயனடைந்த மக்களை இணைத்து விழாக்களை கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
அதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் அவரது நூற்றாண்டு விழாவையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளதாகவும், இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைச்சர்கள் தலைமையில் விழாக்குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.

குறிப்பாக, கொடி கம்பங்களை புதுப்பித்து கொடி ஏற்றுவது, மாவட்டம்தோறும் கருணாநிதிக்கு சிலைகள் அமைப்பது, 70 வயதுக்கு மேலான மூத்த கட்சி நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்குவது, திமுக குடும்பத்தை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவது, கருத்தரங்கம்-பொதுக்கூட்டம், நூலகங்கள் தொடங்குவது என பல்வேறு நிகழ்ச்சிகளை மக்கள் பயன்பெறும் வகையில் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன் முன்னேற்பாடாக சென்னை கலைவாணர் அரங்கில் நேற்றைய தினம், கருணாநிதியின் நூற்றாண்டு விழா தொடக்க நிகழ்ச்சி நுடைபெற்றது.. இதில், முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு லோகோ (இலச்சினை) வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார்.. சிறப்பு விருந்தினராக மேற்கு வங்காள முன்னாள் ஆளுநர் கோபால கிருஷ்ண காந்தி பங்கேற்றார். இந்த விழாவில் முடிவுற்ற என பொருள்படும் படியான இலச்சினை வெளியிடப்பட்டது.
இதையடுதது, இன்று காலை 9.15 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில், கருணாநிதியின் திருவுருவப்படத்திற்கு முதல்வர் மலர்தூவி மரியாதை செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல, 9.17-க்கு புதுப்பிக்கப்பட்ட DMK.in இணையதளத்தை தொடங்கி வைப்பது என்றும், காலை 9.20 மணிக்கு 2 கோடி உறுப்பினர்களை கழகத்தில் இணைத்ததன் அடையாளமாக உறுப்பினர் அட்டையை வழங்குதல் என்றும் திட்டமிடப்பட்டுள்ளது.

அதேபோல, செம்மொழி பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள மலர்க்கண்காட்சிக்கும், வடசென்னையில், இன்று மாலை நடைபெறவிருந்த கருணாநிதி பிறந்தநாள் பொதுக்கூட்டத்துக்கும் பிரம்மாண்டமான ஏற்பாடுகள் தயாராகி வந்தன.
இப்படி கருணாநிதியின் 100-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படவிருந்த நிலையில், அத்தனையும் ரத்தாகி உள்ளன.. ஒடிசா ரயில் விபத்து காரணமாக தமிழக முதலமைச்சரின் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.. கருணாநிதி நினைவிடத்திற்கு சென்று மரியாதை மற்றும் ஓமந்தூராரில் உள்ள சிலைக்கு மரியாதை ஆகிய 2 நிகழ்ச்சிகள் மட்டுமே நடக்கும் என்றும் தமிழக அரசு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, செம்மொழி பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள மலர்க்கண்காட்சிக்கு முதல்வர் ஸ்டாலின் செல்லும் நிகழ்ச்சி ரத்து எனவும், சென்னையில் இன்று மாலை நடைபெறவிருந்த கருணாநிதி பிறந்தநாள் பொதுக்கூட்டம் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications