Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

100 சவரன் தங்கம்! கணவரிடம் நெருங்க முடியாமல் தவித்த வக்கீல் மனைவி! அரசு ஆபீசரை தூக்கிய சென்னை போலீஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வரதட்சணை பெறுவதும், தருவதும் குற்றம் என்றாலும், தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன.. வரதட்சணைக்கு எதிரான சட்டங்கள் கடுமையாக இருந்தபோதிலும், வரட்சணைகள் தலைதூக்கி வருகின்றன.. அத்துடன் இளம் பெண்களையும் காவு வாங்கிவிடுகின்றன.. இந்நிலையில் சென்னையில் நடந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை தந்து வருகிறது. இது சம்பந்தமான விசாரணையை போலீசார் நடத்தி வருகிறார்கள்.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி பகுதியை சேர்ந்த ரிதன்யா மற்றும் கவின்குமாருக்கு கடந்த 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற்றது. அப்போது 300 சவரன் நகை வழங்குவதாக பேசப்பட்டிருந்த நிலையில், முதலில் 100 சவரன் நகையும், ரூ.62 லட்சம் மதிப்புள்ள சொகுசு காரும் வரதட்சணையாக மாப்பிள்ளைக்கு வழங்கப்பட்டுள்ளது.

Chennai Gold Jewellery Government EB Officer 100

ஆனால், மீதமுள்ள 200 சவரன் நகையை கொடுக்க வேண்டும் என, ரிதன்யாவின் கணவர் மற்றும் கணவர் வீட்டார் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. அதனால் மனமுடைந்த ரிதன்யா கடந்த ஜூன் மாதம் தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கின் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.

திருப்பூர் ரிதன்யா வரதட்சணை

ரிதன்யாவே கடைசி மரணமாக இருக்கட்டும் என்று நினைத்தாலும், நாளுக்கு நாள் வரதட்சணை கொடுமைகளின் துயரங்கள் நீண்டு கொண்டே வருகிறது.. இந்நிலையில் சென்னையில் நடந்துள்ள சம்பவம் மிகப்பெரிய அதிர்வலையை உண்டுபண்ணி வருகிறது.

சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் பிரியா.. (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வயது 26 ஆகிறது.. சென்னை ஹைகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வருகிறார்.

இவருக்கும் சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்த அரிஷ் (31) என்பவருக்கும் கடந்த பிப்ரவரி 2ம் தேதி பெற்றோர் ஆசீர்வாதத்துடன் திருமணம் நடந்தது.. ஹரிஷ், மின்வாரிய அலுவலகத்தில் செயற்பொறியாளராக பணியாற்றி வருகிறார்.

100 சவரன் நகை, 2 கிலோ வெள்ளி

திருமணத்திற்கு முன்பே மாப்பிள்ளை வீட்டில் வரதட்சணையை கறாராக கேட்டார்களாம்.. மாப்பிள்ளை மின்வாரியத்தில் அரசு அதிகாரியாக வேலை பார்ப்பதால், 100 பவுன் நகை போட வேண்டும் என்று கேட்டார்களாம்.. அவர்கள் கேட்டபடியே பிரியா வீட்டாரும் 100 சவரன் நகைகளை தந்துள்ளார்கள்.. மேலும், ரூ.3 லட்சம் மதிப்புள்ள பொருட்களையும் சீர்வரிசையாக கொடுத்திருக்கிறார்கள்.

எனினும் மாப்பிள்ளை வீட்டில் திருப்தியடையவில்லையாம்.. இன்னும் வரதட்சணை வேண்டும் என்று கேட்டு நச்சரிப்பை தந்து வந்திருக்கிறார்கள்.. இதற்காக, கணவரிடம்கூட பிரியாவை நெருங்கி பழக, மாமியார் தேவிகா விடுவதில்லையாம்.. அதேபோல கணவரிடம் போனிலும் பேச விடாமல் தடுத்துள்ளார்.. சமைக்கும் உணவையும் சாப்பிட விடாமல் தடுத்துள்ளார். மேலும், தம்பதி இருவரும் மகிழ்ச்சியாக இருக்கவும் தடை போட்டுள்ளார்..

திருச்சியில் காலி மனை நிலம்

இதுகுறித்து பிரியா தன்னுடைய மாமியாரிடம் கேட்டதற்கு, என் மகனுடன் சந்தோஷமாக வாழ வேண்டுமானால் பேங்க் லாக்கரிலுள்ள 100 பவுன் நகை, 2 கிலோ வெள்ளி, ரூ. 5 லட்சம் ரொக்கம் அனைத்தையும் என் மகனுக்கே தந்துவிட வேண்டும்.. திருச்சியில் உள்ள காலிமனையையும் என்னுடைய மகன் பெயருக்கே பத்திரம் எழுதி தர வேண்டும் என்று சொல்லி உள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பிரியா, மாமியாரின் வேண்டுகோளுக்கு மறுத்துள்ளார்.. இதனால் ஆத்திரமடைந்த கணவர் ஹரிஷ், மாமியார் தேவிகா, மைத்துனர் ரஜினிஷ் ஆகிய 3 பேரும் சேர்ந்து பிரியாவின் தலைமுடியை பிடித்திழுத்து கொடுமையாக தாக்கியிருக்கிறார்கள்..

பெற்றோரிடம் கதறிய பிரியா

ஆனால் இவ்வளவு நடந்தும் இதை பற்றியெல்லாம் தன்னுடைய பெற்றோரிடம் பிரியா எதுவுமே சொல்லாமல் இருந்துள்ளனார்.. எனினும் நாளுக்கு நாள் மாமியார், கணவரின் டார்ச்சர் அதிகமாகின.. இதற்கு மேல் பொறுமையாக இருந்தால், தன்னை கொலையும் செய்துவிடுவார்கள் என்று அச்சப்பட்டு, உடனடியாக பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.

நடந்ததையெல்லாம் பெற்றோரிடம் சொல்லி அழுதுள்ளார்.. இதைக்கேட்டு அதிர்ந்த பெற்றோர் போலீசில் விஷயத்தை சொல்வதென முடிவெடுத்தனர்.. உடனே பிரியாவும், அண்ணாநகர் மகளிர் போலீசில் வரதட்சணை கொடுமை குறித்த புகாரை தந்தார். கணவர், மாமியார், மைத்துனர் என இவர்கள் 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் மனுவில் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

அரசு அதிகாரிக்கு சம்மன்

இந்த புகாரின்பேரில் போலீசாரும் வழக்கு பதிவு செய்து, சம்பந்தப்பட்ட ஹரிஷ், தேவிகா, ரஜினிஷ் மூவரையும் ஸ்டேஷனுக்கு விசாரணைக்காக அழைத்துள்ளனர்.. ஆனால், தான் ஒரு அரசு அதிகாரி என்பதால் விசாரணைக்கு வரமுடியாது என்றாராம் ஹரிஷ்..

இதனால் போலீசார் அவருக்கு நோட்டீஸ் அனுப்பி, விசாரணைக்கு ஆஜராகும்படி சொன்னார்கள்.. இதற்கு பிறகு வேறு வழியின்றி, ஹரிஷ் நேற்று விசாரணைக்கு ஆஜரானார்..

அவரிடம் நடத்தப்பட்ட அந்த விசாரணயில், பிரியாவை வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்தது உண்மை என்று தெரியவந்தது.. இதையடுத்து, ஹரிஷை போலீசார் கைது செய்து புழலில் அடைத்துள்ளனர்.. ஆனால், அதற்குள் மாமியார், மைத்துனரை காணவில்லை.. எனவே, அவர்களையும் தீவிரமாக தேடி கொண்டிருக்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+