தனியார் நிறுவன மேனேஜர் வீட்டில் கைவரிசை.. சென்னை திருவேற்காட்டில் 100 சவரன் நகை கொள்ளை!
சென்னை: சென்னையை அடுத்த திருவேற்காட்டில் தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் சுமார் 100 சவரன் நகைகள் மற்றும் ரூ.50,000 ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவேற்காடு அருகே அயனம்பாக்கத்தில் தனியார் நிறுவன மேலாளர் ஜனார்த்தனன் என்பவரது வீட்டில் இந்த கொள்ளை சம்பவம் நடந்திருக்கிறது. இதில் 100 சவரன் நகைகள், ரூ.50,000 ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக திருவேற்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவேற்காடு பகுதியில் கடந்த சில ஆண்டுகளாகவே கொள்ளை சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. குறிபாக கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் திருவேற்காடு கோ-ஆபரேட்டிவ் நகர் பகுதியில் பல லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. வீட்டின் உரிமையாளர் தாட்சாயணி வெளியூறுக்கு சென்றுவிட்டு 2 நாட்களுக்கு பின்னர் வீடு திரும்பியுள்ளார். இதற்கிடையில் கொள்ளை சம்பவம் நடந்திருந்தது.
அதேபோல திருவேற்காடு தேவி கருமாரியம்மன் நகர் பகுதியில் முருகேசன் என்பவரது வீட்டிலும் கொள்ளை சம்பவம் நடந்திருந்தது. அதுவும் 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்திருந்தது. இந்த கொள்ளையில் 8 சவரன் நகை திருடப்பட்டிருந்தது.
இப்படியாக திருவேற்காடு பகுதியில் தொடர் கொள்ளை சம்பவங்கள் நடப்பதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதனை நிரந்தரமாக நிறுத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications