சென்னை எக்மோரில்.. கண்டெய்னருக்குள் எட்டிப்பார்த்த போலீஸ்.. தெர்மாகோல் பெட்டிக்குள்ளே "அது" இருக்கு
சென்னை: சென்னை எழும்பூர் ரயில்வே ஸ்டேஷனில் நடந்த சம்பவம், ஒட்டுமொத்த மக்களையும் அதிர வைத்துள்ளது.. அதிலும் அசைவ உணவுப் பிரியர்களுக்கு கலக்கத்தை தந்து கொண்டிருக்கிறது. என்ன நடந்தது எக்மோரில்?
சமீபகாலமாகவே, ஓட்டல்களிலும், இறைச்சி கடைகளிலும் தரமற்ற இறைச்சியை விநியோகிக்கப்பதாக புகார்கள் வெடித்து வருகின்றன.. இதையடுத்து அதிகாரிகள், சம்பந்தப்பட்ட இடங்களுக்கு சென்று நேரடியாகவே ஆய்வு செய்து வருகிறார்கள்.

ஓட்டல்களில், நடைபாதை உணவகங்களில், இறைச்சி கூடங்களில், மீன் மார்க்கெட்டுகளில் என எங்கெங்கு புகார்கள் வருகிறதோ, அங்கெல்லாம் விரைந்து சென்று, சோதனை மேற்கொள்கிறார்கள். இதில், புகார்கள் உண்மையாகும்பட்சத்தில் அவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன..
ஜெய்ப்பூர்: அந்தவகையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து மதுரை சென்ற பிக்கானீர் எக்ஸ்பிரஸ் ரெயிலில், கெட்டுப்போன இறைச்சி கடத்திக்கொண்டு வரப்பட்டதாக, நேற்றுமுன்தினம் சென்னை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து எழும்பூர் ரெயில்வே ஸ்டேஷனுக்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் விரைந்து சென்றனர்.. அப்போது, ரயிலில் கெட்டுப்போன ஆட்டிறைச்சி உள்ளதை பார்த்து அதிர்ந்தனர்.
அவைகள் மொத்தம் 1700 கிலோ ஆட்டுக்கறியாகும்.. 5 நாட்களுக்கு முன்பு ஆடுகளை வெட்டியிருக்கிறார்கள்.. வெட்டி உரிக்கப்பட்ட ஆடுகளை, தெர்மாகோல் பெட்டிகளில் மடக்கி வைத்து ரெயிலில் கொண்டு வந்திருப்பது தெரியவந்தது. 1700 கிலோ ஆட்டுக்கறியும் கெட்டுப்போய் நாற்றம் அடித்துள்ளது.. அவைகளை பறிமுதல் செய்து, மாநகராட்சி அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
கண்டெய்னர்கள்: இந்த சோதனையில் போலீசார் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோதுன், திடீரென ஒரு "பெட்டி" மாயமாகிவிட்டது போலீசாருக்கு தெரியவந்தது.. கண்டெய்னர் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த 1000 கிலோ எடை கொண்ட இறைச்சி எங்கே போனது தெரியாமல் போலீசார் குழம்பினார்கள்.. 30 பெட்டிகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த இந்த இறைச்சி பெட்டிகள், சென்னை வருவதற்கு முன்பே காணாமல் போயிருந்தது.. ஆன் தி வழியிலேயே அந்த பெட்டிகளை யாரோ திருடியிருப்பதும் தெரியவந்து.
ஆனால், 1000 கிலோ கெட்டுப்போன இறைச்சியை, எங்கே கொண்டு போய் விற்பனை செய்திருக்கிறார்களோ? தெரியவில்லை.. இப்படி கெட்டுப்போன இறைச்சி சென்னையில் உள்ள ஓட்டல்களில் விற்பனை செய்யப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்...
பாதி விலை: சென்னையில் தற்போது ஒரு கிலோ ஆட்டிறைச்சி, இப்போது ரூ.1000-க்கு விற்பனை செய்யப்படுகிறது... ஆனால், ராஜஸ்தானிலிருந்து இப்படி நிறைய முறை கெட்டுப்போன இறைச்சியை கடத்தி கொண்டு வந்து, சென்னையில் விற்றுவிடுகிறார்கள்.. சென்னையில் உள்ள கடைகளுக்கு ஒரு கிலோ ரூ.500 என நிர்ணயம் செய்து விற்பனை செய்து விடுகிறார்களாம்.
எனவே, சென்னையில் உள்ள அசைவ ஓட்டல்கள், மற்றும் பிரியாணி கடைகளில் கெட்டுப்போன ஆட்டிறைச்சி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்பது பற்றின ஆய்வையும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்தி கொண்டிருக்கிறார்கள்.
அதிர்ச்சி: சென்னை மாநகரில் கெட்டுப்போன ஆட்டிறைச்சிகள் தொடர்ச்சியாக பிடிபட்டு வருவது, அசைவ உணவு பிரியர்களிடையே கடும் அதிர்ச்சியையும், கவலையையும் உண்டுபண்ணி வருகிறது.
-
அசுர வேகத்தில் தயாராகும் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே! பயண நேரத்தில் அதிரடி மாற்றம் ஜூன் 2026 -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
வாகன ஓட்டிகளுக்கு குஷி.. தடம் தெரியாமல் மாறும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை? புது ப்ளூபிரிண்ட் ரெடி! -
பிஎஃப் பணம்.. மாத சம்பளம் வாங்குவோருக்கு முக்கிய அறிவிப்பு.. சென்னை உள்பட 10 இடங்களில் முகாம் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான்












Click it and Unblock the Notifications