Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

1000 சவரன் தங்கம்.. மகளுக்கு கடன்! விஜய்யின் சொத்து பத்திரத்தில் ஷாக் முரண்? திமுக புள்ளி சொல்வதென்ன

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தாக்கல் செய்துள்ள சொத்து விவரங்கள் தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளன. குறிப்பாக, விஜய்யின் கோடிக்கணக்கான சொத்துகளுக்கும் அவரது மனைவி சங்கீதாவின் பெயரில் உள்ள சொத்துகளுக்கும் இடையிலான முரண்பாடுகள் சமூக வலைதளங்களில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளன. இந்நிலையில், திமுக மூத்த தலைவர் காசி முத்து மாணிக்கம் தெரிவித்துள்ள கருத்தும் கவனம் பெற்று வருகிறது.

தவெக தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்காகத் தாக்கல் செய்த வேட்புமனுவில் தனது சொத்து விவரங்களை முறையாகத் தெரிவித்துள்ளார். இதில் விஜய்க்கு சுமார் 400 கோடி ரூபாய்க்கும் அதிகமான அசையும் சொத்துகளும், 100 கோடி ரூபாய்க்கும் மேலான அசையா சொத்துகளும் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Vijay Assets 2026 TVK Vijay Election Affidavit Sangeetha Vijay Asset Controversy 1000 sovereigns gold jewelry DMK Muthu Manickam Speech Vijay Loan to Daughter Divya Sasha Vijay Trisha Controversy Rumors Tamil Nadu Assembly Election 2026 TVK Chief Net Worth Shock 2026 1000 2026

இருநதாலும், அவரது மனைவி சங்கீதாவின் பெயரில் 3 கிலோ தங்கம் மற்றும் 1 கோடி ரூபாய் மதிப்பிலான வைரம் போன்ற நகைகள் மட்டுமே உள்ளதாகவும், வீடு அல்லது நிலம் போன்ற பெரிய அளவிலான அசையா சொத்துகள் எதுவும் அவர் பெயரில் இல்லை என்பதும் அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.

முதலீடுகள் - தவெக விஜய்

மனைவி சங்கீதாவின் பெயரில் பெரிய முதலீடுகள் இல்லாதது இப்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. விவாகரத்து தொடர்பான தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், தான் பொருளாதார ரீதியாகச் சிரமத்தில் இருப்பதாகச் சங்கீதா தரப்பில் கூறப்பட்டதாக சொல்லப்படும் செய்திகளோடு இந்த சொத்து விவரங்களை ஒப்பிட்டுப் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஒரு தரப்பினர் சங்கீதாவிற்கு ஆதரவாகவும், இன்னொரு தரப்பினர் விஜய்க்கு ஆதரவாகவும் கருத்துகளைத் தெரிவித்து வரும் நிலையில், இந்தத் தனிப்பட்ட விவகாரம் விஜய்யின் தற்போதைய அரசியல் பயணத்திலும், பொது பிம்பத்திலும் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் நிலவுகிறது.

சங்கீதா சொத்து விவரம்

இந்நிலையில், திமுக வர்த்தகர் அணி செயலாளர் காசி முத்து மாணிக்கம் செய்தியாளர்களிடம் பேசினார்.. அப்போது விஜய்யின் மனைவி சங்கீதா அவர் மீது வைத்துள்ள குற்றச்சாட்டுகளை எப்படி பார்க்கிறீர்கள்? அதேபோல் விஜய்யின் ரசிகர்கள் முட்டு கொடுக்கமுடியவில்லை, கிராமத்து பெண்களும் த்ரிஷா உடன் சென்றதை வசைபாடுகிறார்களே? என்று கேள்வி எழுப்பப்ட்டது,

இதற்கு அவர் பதிலளிக்கும்போது "நீரடித்து நீர் விலகாது, எங்களுக்குள் பேசிக் கொள்கிறோம், என் மனைவி, மகன், மகளை நான் விட்டுவிட மாட்டேன் என்று மேடையில் சொல்லாமல் அதெல்லாம் WORTH இல்லாத விஷயம் என பேசுவதை படித்த தமிழ் பெண்கள் யாருமே ரசிக்கவில்லை.

கோர்ட்டில் திருமணத்திற்கு மீறிய உறவுடன் ஒரு நடிகையுடன் சுற்றுகிறார் என்று வழக்கு போட்டால், அப்படி நான் இல்லை என்றுதான் பதில் சொல்ல வேண்டும்.. அதைவிட்டுவிட்டு, ஒரே கலரில் சேலை, வேட்டி, சட்டையுடன் ஒரே காரில் செல்வதன் மூலம் மக்களுக்கு என்ன சொல்கிறார்?

மகளுக்கே கடன் தருகிறாரா

மனைவி இருக்கும்போதே திரிஷாவுடன் தான் சுற்றுகிறேன் என சட்டத்திற்கும், பண்பாட்டிற்கும் சவால் விடுகிறாரா?. ஆண்மகன் சம்பாதிப்பதெல்லாம் மனைவி, மகன், மகள், அப்பா, அம்மாவுக்கு பங்கு உண்டு. ஆனால் அவர்களுக்கே கடன் கொடுத்திருப்பது, அதிலும் பெற்ற மகளுக்கு ரூ.4 லட்சம் கொடுத்தது எல்லாம் கடன் என்கிறாரே?

படத்திற்கு ரூ.300 கோடி வாங்கியதை விட்டுவிட்டு வந்தேன் என்று சொன்னவர், ரூ.519.71 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக சொல்கிறார்... ரூ.300 கோடி என வருமான வரித்துறை, இந்திய அரசாங்கம் மற்றும் பொதுமக்கள் ஏமாற்றுகிறாரா? என்று பெண்களே திட்டுகிறார்கள்" என்று பதிலளித்துள்ளார்...!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+