"அடங்க மாட்றாங்கய்யா".. 52 வயசு "அசிங்கம்" அனுராதா.. நேக்கா போட்ட ஸ்கெட்ச்.. அலேக்கா தூக்கிய போலீஸ்

பெண் போலீஸ் அனுராதாவை சென்னை போலீசார் கைது செய்து சிறையிலடைத்துள்ளனர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அடங்காத ஆசை, பேராசையாகி கடைசியில் கம்பி எண்ணி கொண்டிருக்கிறார் ஒரு பெண் இன்ஸ்பெக்டர்.. என்ன நடந்தது?

சென்னை கொளத்தூரை சேர்ந்தவர் வினோத்குமார்.. 35 வயதாகிறது.. இவர் ஒரு டாக்டர்.. 2020ம் ஆண்டு கோவையை சேர்ந்த மோனிகாஸ்ரீ என்வரை திருமணம் செய்து கொண்டார். மோனிகாவுக்கு 30 வயதாகிறது..

திருமணத்தின்போது பேசப்பட்ட 200 சவரன் நகையை பெண் வீட்டார் வழங்கவில்லை என்று தெரிகிறது.. அதனால், வினோத்குமார் குடும்பத்தினர், மோனிகாஸ்ரீயை நகையை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

 நியூ கிளினிக்

நியூ கிளினிக்

அதுமட்டுமல்ல, தனக்கு கிளினிக் வைத்து கொடுத்தால்தான் வீட்டிற்குள் நுழைய வேண்டும் என்று வீட்டை விட்டு மோனிகாவை வெளியேற்றியதாகவும் தெரிகிறது.. இதுதொடர்பாக, 2021ல் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வில்லிவாக்கம் மகளிர் போலீசில் மோனிகாஸ்ரீ புகார் அளித்தார்... இதையடுத்து, 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்தனர்... மற்றொருபக்கம் இந்த கேஸ் கோர்ட்டிலும் நடந்து வந்தது.

 அடங்காத ஆசை

அடங்காத ஆசை

எனினும் இந்த கேஸை சீக்கிரமாக முடித்து வைக்கக்கோரி வில்லிவாக்கம் இன்ஸ்பெக்டர் அனுராதா என்பவரிடம் மோனிகாஸ்ரீ முறையிட்டுள்ளார்.. அனுராதாவுக்கு 52 வயாகிறது.. கேஸை சீக்கிரமாக முடிக்க அனுராதா 1 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டாராம்.. மோனிகாஸ்ரீயும் பணத்தை தந்துள்ளார்.. அப்போதும் அனுராதாவுக்கு பண ஆசை அடங்காமல், கூடுதலாக 20 ஆயிரம் ரூபாய் கேட்டாராம்.. அதையும் மோனிகா தந்துள்ளார்.. ஆனாலும் கேஸை முடித்து வைக்காமல் அனுராதா இழுத்தடித்து வந்துள்ளார். பொறுத்து பொறுத்து பார்த்த மோனிகாஸ்ரீ, இதனால் ஆத்திரமடைந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு விஷயத்தை சொல்லிவிட்டார்..

 டியூட்டி டைம்

டியூட்டி டைம்

இன்னும் 20 ஆயிரம் ரூபாய் தருவதாக சொல்லி அனுராதாவை குறிப்பிட்ட இடத்துக்கு வர சொல்லுமாறு, வில்லிவாக்கம் போலீசார் சொல்லி உள்ளனர்.. அதன்படியே, ரசாயனம் தடவிய 20 ஆயிரம் ரூபாய் பணத்தை அனுராதாவிடம் மோனிகா கொடுத்தார்... அப்போது, அனுராதாவை கையும் களவுமாக சிக்கினார்.. இதையடுத்து, அனுராதாவிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.. இவர் டியூட்டியில் சேர்ந்ததில் இருந்தே லஞ்சம் வாங்கி கொண்டே இருக்கிறாராம்.. இந்த 52 வயதுவரை லஞ்சம் வாங்கி பழக்கப்பட்டுள்ளார் அனுராதா என்பது விசாரணையில் தெரியவந்தது..

 கம்பி எண்ணுகிறார்

கம்பி எண்ணுகிறார்

இதையடுத்து சென்னை, அயப்பாக்கம் பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள, அனுராதா வீட்டிற்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக சோதனையிட்டனர்... அனுராதா வீட்டு பீரோவில் லஞ்சப்பணம், 7.21 லட்சம் ரூபாயை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.. இன்னும் எத்தனை பேரை அனுராதா ஏமாற்றி உள்ளார், எவ்வளவு லஞ்சம் பெற்றுள்ளார் என்பது குறித்த விசாரணை நடக்கிறது. அனுராதாவை சஸ்பெண்ட் செய்வதற்கான நடவடிக்கையிலும் போலீசார் இறங்கி உள்ளனராம்.. ஒரு பெண் இன்ஸ்பெக்டர், 52 வயதில் கைதாகி கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+