ரூ.1000 வாங்கிட்டீங்களா? இன்னும் வரலியா.. இதோ, மகளிர் உரிமை தொகையில் சூப்பர் ஏற்பாடு.. ரெடியா இருங்க
சென்னை: மகளிர் உரிமைத்தொகையில் இன்னொரு சிறப்பு ஒன்று வெளியாகி உள்ளது.. தமிழக அரசு வெளியிட்ட இந்த அறிவிப்பானது, பெரும் நிம்மதியை ஏற்படுத்தி வருகிறது.
வாக்குறுதியில் சொல்லியிருந்ததை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றி விட்டார்.. கலைஞர் மகளிர் உரிமைத்தொகையாக பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை, கடந்த 15-ந் தேதி காஞ்சிபுரத்தில் தொடங்கி வைத்தார்.

உரிமைத்தொகை: இந்த திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு ரூ.1,000, அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இதனிடையே, உரிமைத்தொகை திட்டம் குறித்து பொதுமக்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள், குறைகளுக்கு தீர்வு காணும் வகையில் கலெக்டர் அலுவலகங்கள், ஆர்டிஓ அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்களில் சிறப்பு உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த மையங்கள் தற்போது செயல்படவும் தொடங்கிவிட்டன. திரண்டு வந்த பொதுமக்களிடம், ஆதார் அட்டை, ரேஷன் கார்டு விவரங்கள் மூலம் பயனாளிகளின் விண்ணப்ப நிலை குறித்தும், அவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருப்பின் அதற்கான காரணங்களும் பயனாளிகளுக்கு தெரிவிக்கப்பட்டன.. ஒருவேளை, பயனாளிகள் உரிமைத்தொகை பெற தகுதியுடையவர்கள் என்று கருதும் பட்சத்தில் அவர்களை இ-சேவை மையங்கள் மூலம் மீண்டும் விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தி வருகிறார்கள்.
பயனாளிகள்: அதேபோல, ஆதார் எண் இணைக்கப்படாத பயனாளிகளுக்கு அஞ்சல் துறை "மணியார்டர்" மூலமாக ஓரிரு நாட்களில் பணம் அனுப்பி வைக்க போகிறார்களாம்.. இந்த தகவல் அரசு தரப்பிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது. பணம் கிடைக்கவில்லையே என்று குழப்பத்திலும், ஏமாற்றத்திலும் இருந்த பெண்கள், அரசின் இந்த மணியார்டர் நடவடிக்கையால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதனிடையே, மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களை விண்ணப்பதாரர்களே அறிந்து கொள்வதற்காகவே, வெப்சைட் (https://kmut.tn.gov.in) ஒன்று தொங்கப்பட்டுள்ளது..

பாஸ்வேர்ட்: இந்த இணையதளத்தில் ஆதார் எண்ணையும், பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்ணையும் பதிவிட்டால், ஒரு முறை பயன்படுத்தும் பாஸ்வேர்ட் வரும்.. அந்த பாஸ்வேர்டை பயன்படுத்தி விண்ணப்ப நிலையை அறிந்து கொள்ளலாம். இந்த இணையதளம் 2 நாட்களாகவே இயங்கவில்லை. தற்போது பராமரிப்பில் இருப்பதாகவும், விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்றும் இணையப் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, விண்ணப்பங்கள் நிகாகரிக்கப்பட்டவர்களோ மேல்முறையீடு செய்வது எங்கே என தெரியாமல் தவிக்கிறார்கள். அதனால், உரிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு விரைந்து வெளியிட வேண்டும் என்று கோரிக்கை எழுந்தபடியே உள்ளதால், இதற்கும் தமிழக அரசு சிறப்பு ஏற்பாடு செய்ய போகிறதாம்..
யோசனைகள்: அதன்படியே, விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்களுக்காக சிறப்பு முகாம்களை நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. விண்ணப்பப் படிவங்களை வட்டாட்சியர் அலுவலகங்கள், மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் பெற்று, பூர்த்தி செய்த படிவங்களை சிறப்பு முகாம்களில் அளிக்க யோசனைகள் முன் வைக்கப்பட்டு வருவதாகவும் தெரிகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எல்லாம் விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications