"ஜாக்பாட்".. ஈரோடு கிழக்கு தேர்தல் முடிந்ததும்.. மெகா திட்டத்தை தொடங்கும் ஸ்டாலின்! வருகிறது ரூ.1000!
பெரிய விழா எடுக்கப்பட்டு இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.
சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு பின்பாக தமிழ்நாடு அரசு விரைவில் முக்கியமான தேர்தல் வாக்குறுதி ஒன்றை நிறைவேற்ற போவதாக கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அது என்ன திட்டம். எப்போது வெளியாகும் என்று கோட்டை வட்டார தரப்பில் விசாரித்தோம்.
ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தல் சூடு பிடித்து உள்ளது. இந்த மாதம் 27ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
ஆளும் தரப்பில் திமுக - காங்கிரஸ் கூட்டணி சார்பாக ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக களமிறங்கி உள்ளார். இவர் ஈரோடு கிழக்கு தொகுதியில் தீவிரமாக பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார். 11 அமைச்சர்களை களமிறக்கி திமுக கூட்டணி இங்கே தீவிரமாக பணிகளை செய்து வருகிறது.

தேர்தல்
ஆனால் எதிர் தரப்பில்தான் பல திருப்பங்கள் அடுத்தடுத்து நடந்து வருகின்றன. ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலுக்காக எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிமுக அடித்து ஆட தொடங்கி உள்ளது. ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலுக்காக முன்னாள் எம்எல்ஏ தென்னரசு எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். தற்போது பொதுக்குழு உறுப்பினர்கள் சார்பாக வேட்பாளரை தேர்வு செய்ய வாக்களிக்கப்பட்ட வாக்கு சீட்டுகளை அவை தலைவர் தமிழ் மகன் உசேன் டெல்லிக்கு கொண்டு சென்றுள்ளார். இன்று இரவிற்குள் அதிமுகவின் பொது வேட்பாளர் இறுதி செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாக்குறுதி
தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் இருப்பதால் ஆளும் திமுக சார்பாக திட்டங்கள் எதையும் நிறைவேற்ற முடியவில்லை. இந்த நிலையில்தான் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு பின்பாக தமிழ்நாடு அரசு விரைவில் முக்கியமான தேர்தல் வாக்குறுதி ஒன்றை நிறைவேற்ற போவதாக கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. திமுக தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ 1000 உரிமை தொகை மாதந்தோறும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த திட்டம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. கடந்த பட்ஜெட்டிலும் இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வரவில்லை. பொருளாதார ரீதியாக அரசுக்கு இருக்கும் சில சிக்கலால் இந்த திட்டம் இன்னும் செயல்பாட்டிற்கு வரவில்லை.

முக்கியமான வாக்குறுதி
திமுகவின் இந்த தேர்தல் வாக்குறுதி பல்வேறு காரணங்களுக்காக இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. முக்கியமாக தமிழ்நாடு அரசின் பொருளாதாரம் சரியாகவில்லை என்ற காரணத்திற்காக இந்த திட்டம் தொடங்கப்படாமல் உள்ளது. இந்த உரிமைத் தொகை ஏழ்மையான குடும்பத் தலைவிகளுக்கு மட்டுமே அளிக்கப்படும் என்றும் மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். நான் கொடுத்த வாக்குறுதியில் இருந்து மாற மாட்டேன். கண்டிப்பாக எனது வாக்குறுதியை நிறைவேற்றுவேன். மக்களுக்கு கண்டிப்பாக மாத 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும். இதில் மாற்றம் இருக்காது என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்

முடிவு
இந்த நிலையில்தான் சில மாற்றங்களுடன் இந்த திட்டம் விரைவில் அமலுக்கு வரும் என்று தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் முடிவுகள் எல்லாம் வந்த பின் இந்த உரிமை தொகையை வரும் மார்ச் 8ம் தேதி.. அதாவது சர்வதேச மகளிர் தினத்தில் இருந்து வழங்கலாம் என்று அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. லோக்சபா தேர்தலுக்கான பிரச்சாரங்கள் தொடங்க உள்ளன. ஏற்கனவே பெண்களுக்கு அளிக்கப்படும் கட்டணமில்லா பேருந்து காரணமாக பெண்கள் இடையே திமுகவிற்கு மதிப்பு உள்ளது. தற்போது இந்த திட்டத்தையும் செயல்படுத்தி பெண்களை மொத்தமாக கவரும் விதமாக திட்டத்தை ஆரம்பிக்க அரசு முடிவு செய்துள்ளது. லோக்சபா தேர்தலுக்கு ஒரு வருடத்திற்கு முன் திட்டத்தை கொண்டு வந்தால் அரசியல் ரீதியாகவும் பெரிய அளவில் அது பலன் அளிக்கும் என்று திமுக தரப்பு நினைக்கிறதாம்.

அமைச்சர்
ஈரோடு இடைத்தேர்தலுக்கு பின் இந்த திட்டம் தொடங்கப்படும் என்று அமைச்சர் மதிவேந்தனும் உறுதி அளித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் இந்த திட்டத்தை அறிவிக்க உள்ளதாக அமைச்சர் கூறி உள்ளார். இந்த நிலையில் இந்த திட்டத்தை செயல்படுத்த ஆண்டுக்கு 25800 கோடி ரூபாய் செலவு ஆகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 2.15 கோடி ரேஷன் அட்டை உள்ளது. இதில் அனைத்திலும் குடும்ப தலைவிகளுக்கு பணம் கொடுப்பது இயலாத காரியம். இதனால் அரசுக்கு பெரிய அளவில் சுமை ஏற்படும். அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்தம் நபர்கள், சொந்த வீடு வைத்து இருப்பவர்கள் ஆகியோருக்கு இந்த உரிமைத்தொகை அளிக்கப்படாது என்று அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் PHH-AYY, PHH, NPHH ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டுமே நிதி அளிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது. NPHH -S, NPHH - NS ரேஷன் அட்டைதாரர்களுக்கு இந்த உரிமைத்தொகை அளிக்கப்படாது என்று அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விழா
பெரிய விழா எடுக்கப்பட்டு இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள். சிறப்பு திட்ட செயலாக்கம் துறை வழியாக உதயநிதி ஸ்டாலினும் கூட இதை அறிவிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த துறை வழியாக உதயநிதி ஸ்டாலின் குடும்ப தலைவிக்கு ஆயிரம் ரூபாய் வழங்குவது தொடர்பான அறிவிப்பை வெளியிடுவார். இது உதயநிதிக்கு அரசியல் ரீதியாக மைலேஜை கொடுக்கும் என்று கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
ரூ.5000 + ரூ.8000.. ஸ்டாலின் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம்.. பெண்களை தேடி வரப்போகும் பணம்! -
ராகுல் காந்தி கடும் அதிருப்தி.. திமுக அழைத்தும் செவிசாய்க்காத காங்கிரஸ் மேலிடம்.. என்ன நடந்தது? -
தொகுதி மறுவரையறை! சண்டை செய்யும் திமுக.. வேடிக்கை பார்க்கும் அதிமுக! என்னதான் பிரச்சனை? -
"திமுக தோற்கணும்னு ராகுல் காந்தியே ஆசைப்படுறாரு".. கொளுத்திப் போடும் அண்ணாமலை! -
ரூ.8,000 கூப்பன் கொடுத்தால் வழக்கு பாயும்.. கறார் காட்டிய தேர்தல் ஆணையம்! அதிரடி உத்தரவு! -
அமுதா அக்காவுக்கு சிரிப்பு தங்கல.. நாதக வேட்பாளரை பூத்தூவி வரவேற்ற திமுகவினர்! இது கூட தெரியாதா? -
இயக்குநர் மோகன் ஜி வீட்டுக்கு! ரூ 8000 கூப்பனுடன் வந்த 4 பெண்கள்! ரேஷன் கார்டு கேட்டு அடம்! -
அவசரமாக தொகுதி மறுவரையறை.. தமிழ்நாடே ஸ்தம்பிக்கும்.. பழைய திமுகவை பார்ப்பீங்க.. ஸ்டாலின் எச்சரிக்கை! -
பழைய நியூஸ் பேப்பரை காட்டி பிரச்சாரம் செய்யும் எடப்பாடி பழனிசாமி.. உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலடி -
ஏமாற்றும் ராகுல்.. ஸ்டாலினுடன் கைகோர்க்கும் கெஜ்ரிவால்.. திமுகவுக்கு ஆதரவாக 2 நாள் பிரசாரம் -
Delimitation: நீதிமன்றத்திற்கு கூட போக முடியாது! தமிழ்நாட்டுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து! -
விஜயின் தவெக சரியில்லை... தமிழ்நாடு பிஷப் கவுன்சில் திமுக கூட்டணிக்கு ஆதரவு.. அதிமுக மீது ‘அட்டாக்'












Click it and Unblock the Notifications