சத்தமில்லாமல் திமுக அரசு செய்யும் சாதனை.. 1000மாவது கோவிலுக்கு கும்பாபிஷேகம்.. சேகர்பாபு பெருமிதம்
சென்னை: தமிழ்நாட்டில் திமுக அரசு அமைந்த பின்னர் கடந்த 2 ஆண்டுகளில் 1000மாவது கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது. சென்னை மேற்கு மாம்பலம் அருள்மிகு காசி விஸ்வநாதர் கோவிலில் செப்டம்பர் 10ம் தேதி ஆயிரமாவது கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெறவுள்ளது.
சனாதனம் குறித்த சர்ச்சைகள் ஒரு பக்கம் இருந்தாலும் கோவில்களில் திருவிழாக்கள், கும்பாபிஷேகம் நடத்துவதில் எந்த குறையும் வைப்பதில்லை திமுக அரசு. கடந்த 2021ஆம் ஆண்டு மே மாதத்தில் தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்த பின்னர் இந்து சமய அறநிலையத்துறைக்குப் புத்துயிர் கொடுக்கப்பட்டு ஏராளமான பணிகளை அது செய்து வருகிறது.

மகாசிவராத்திரி திருவிழா, ஆடி மாதம் அம்மன் கோவில் சுற்றுலா, புரட்டாசி மாதம் பெருமாள் கோவில்கள் சுற்றுலா என பல சிறப்பான திட்டங்களை அறிவித்து மக்களின் குட்புக்கில் இடம்பிடித்துள்ளார் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட பி.கே.சேகர் பாபு. ஆன்மீகவாதிகள் பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.
திருக்கோவில் அறப் பணிகள், திருக்கோவிலுக்கு சொந்தமான பல ஆயிரம் கோடி மதிப்புள்ள நிலங்கள் மீட்பு, கும்பாபிஷேகங்கள் என அனைத்தையும் சிறப்பாக நடத்தி வருகிறார் பி.கே.சேகர்பாபு. அந்த வகையில் தற்போது 1000மாவது குடமுழுக்கு விழாவை இந்து சமய அறநிலையத்துறை மேற்கொள்ளவுள்ளது.
இது திமுக அரசுக்கு தனி பெருமையை சேர்க்க உள்ளது. இதுகுறித்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றபின், தமிழர்களின் கலைபண்பாடு மற்றும் கலாச்சாரத்தை பறைசாற்றும் பெட்டகங்களான திருக்கோயில்களைப் புனரமைத்து பாதுகாத்திடும் வகையில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்குகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில்1,000-வது குடமுழுக்காக சென்னை, மேற்கு மாம்பலம், அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் குடமுழுக்கு வருகின்ற 10.09.2023 அன்று வெகு விமரிசையாக நடைபெற உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications