10ம் வகுப்பு மாணவர்களே..நல்ல செய்தி.. வரும் 18ம் தேதி உங்கள் பள்ளியிலேயே கிடைக்க போகுது!
சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு வரும் 18ம் தேதி முதல் அந்தந்த பள்ளிகளிலேயே அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும் என தமிழக தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது .
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் மாதம் 6ம் தேதி முதல் 20-ம் தேதி வரை 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை 9 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் எழுதினர். இவர்களில் மாணவர்கள் 4,55,017 , மாணவிகள் 4,59,303 தேர்வு எழுதினர்.

இந்நிலையில், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த மே 19ம் தேதி வெளியானது. http://www.tnresults.nic.in மற்றும் http://www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து மாணவர்கள் முடிவுகளை அறிந்து கொண்டனர்.
மாணவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்பித்த செல்போன் எண்ணுக்கும் தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய செல்போன் எண்ணிற்கும் குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பபியும் வைக்கப்பட்டன.
நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 8,35,614 (91.39%) பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். மாணவியர் 4,30,710 (94.66%) பேரும், மாணவர்கள் 4,04,904 (88.16%) பேரும் தேர்ச்சி அடைந்திருந்தனர். மாணவர்களை விட மாணவியர் 6.50% அதிகம் தேர்ச்சி பெற்றிருந்தனர்.
தமிழ்நாட்டிலேயே 97.67 % தேர்ச்சி பெற்று, பெரம்பலூர் மாவட்டம் மாநிலத்தில் முதலிடம் பிடித்தது. அதற்கு அடுத்தபடியாக சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை - 97.53% பேரும், விருதுநகர் மாவட்டத்தில் - 96.22% பேரும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 95.99% பேரும், தூத்துக்குடி மாவட்டத்தில் 95.58% பேரும் தேர்ச்சி பெற்றிருந்தனர்.

இந்நிலையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கு வரும் 18ம் தேதி முதல் அந்தந்த பள்ளிகளிலேயே அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும் என தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது: நடைபெற்ற ஏப்ரல் 2023 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் 18.08.2023 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10 மணிமுதல் அந்தந்தப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூலம் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் விநியோகம் செய்யப்படும். தனித்தேர்வர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையத்திலேயே பெற்றுக் கொள்ளலாம்" என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications