அடேங்கப்பா.. 4 விசாரணை கமிஷன்களுக்கு இத்தனை கோடி செலவா? ஆர்டிஐ கேள்வி மூலம் வெளிவந்த ஷாக் தகவல்!
சென்னை: தமிழ்நாட்டில் அமைக்கப்பட்ட 4 விசாரணை ஆணையங்களுக்காக இதுவரை ரூ. 11.17 கோடி செலவானதாக ஆர்டிஐ மூலம் தகவல் வெளியாகியுள்ளது.
மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலரான கார்த்திக் என்பவர், தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையங்கள் பற்றியும், அவற்றிற்கான செலவு பற்றியும் ஆர்டிஐ சட்டத்தின் வாயிலாக கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு தமிழ்நாடு அரசு பதில் அளித்துள்ளது.

அதன்படி, தமிழ்நாட்டில் கடந்த 13 ஆண்டுகளில் சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்காக 4 விசாரணை ஆணையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தமிழக அரசால் நியமிக்கப்பட்ட நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்திற்கு 5.60 கோடி செலவாகியுள்ளது. இந்த ஆணையம் சில மாதங்களுக்கு முன்னர், தங்கள் அறிக்கையைச் சமர்ப்பித்தது குறிப்பிடத்தக்கது.
தருமபுரி இளவரசன் மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட நீதிபதி சிங்காரவேலு ஆணையத்திற்கு ரூ.2.17 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. 2011 பரமக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் விசாரணை நடத்திய நீதிபதி சம்பத் ஆணையத்திற்கு ரூ. 82.64 லட்சம் செலவிடப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு போராட்டங்கள் தொடர்பாக அமைக்கப்பட்ட நீதிபதி ராஜேஸ்வரன் ஆணையத்திற்கு இதுவரை ரூ. 2.57 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications