இந்த 11 ரூல்கள் தெரிந்தால்.. பணம் உங்கள் வீட்டில் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டும்
சென்னை: பணத்தை சேமிக்க விரும்பும் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய 11 ரூல்களை பற்றி பார்ப்போம். ரூல் நம்பர் 72 ஐ மட்டும் சரியாக தெரிந்து கொண்டீர்கள் என்றால், உங்கள் பணம் இரட்டிப்பாகும். இதேபோல் ரூல் நம்பர் 70ஐ தெரிந்து கொண்டால் உங்களால் பணவீக்கத்திற்கு ஏற்ப உங்கள் சேமிப்பை பன்மடங்கு பெருக்க முடியும். அதே போல் இஎம்ஐ ரூல்களும் உள்ளன. இதுபற்றி பார்ப்போம்.
11 ரூல்கள் என்னென்ன:
1) ரூல் நம்பர் 72 (உங்கள் பணத்தை இரட்டிப்பாக்கவும்)
2) ரூல் நம்பர் 70 (பணவீக்கம் சரிசெய்தல்)
3) 4% திரும்பப் பெறும் ரூல்
4) 100 மைனஸ் வயது ரூல்
5) 10, 5, 3 ரூல்
6) 50-30-20 ரூல்
7) 3X அவசரகால ரூல்
8) 40% EMI ரூல்
9) ஆயுள் காப்பீட்டு ரூல்
10) ரூல் நம்பர் 144
11) சுழலும் கடன் சூத்திரம்:- (1+i%)^12-1.

1) ரூல் நம்பர் 72 : 72 ஐ வட்டி விகிதத்தால் வகுப்பதன் மூலம் உங்கள் பணத்தை இரட்டிப்பாக்க எவ்வளவு காலம் ஆகும் என்பதை நீங்களே மதிப்பிடலாம். ஒருவேளை முதலீட்டுக்கான வட்டி விகிதம் 8 சதவீதம் என்றால் 9 ஆண்டுகள் ஆகும். 6 சதவீதம் என்றால் அது 12 ஆண்டுகள் ஆகும்.
2) ரூல் நம்பர் 70 : (பணவீக்கம் சரிசெய்தல்): உங்கள் முதலீட்டின் மதிப்பு பாதியாகக் குறைய எவ்வளவு நேரம் ஆகும் என்பதைப் பார்க்க, தற்போதைய பணவீக்க விகிதத்தை 70 ஆல் வகுக்கவும். பணவீக்கம் 7% ஆக இருந்தால், உங்கள் பணத்தின் மதிப்பு 10 ஆண்டுகளில் பாதியாக குறைந்துவிடும்.
3) 4% திரும்பப் பெறுதல் விதி: உங்களுடைய கார்பஸ் தேவை என்பது உங்களின் மதிப்பிடப்பட்ட வருடாந்திர செலவில் 25 மடங்காக இருக்க வேண்டும். சரி கார்ப்ஸ் என்றால் என்ன.. ஒரு குறிப்பிட்ட திட்டத்தில் முதலீடு செய்யப்படும் மொத்தப் பணத்தை கார்பஸ் என்று அழைப்பார்கள். வயதான பின்னர் செலவுக்கு எவ்வளவு பணம் தேவை என்பதை அறிய இந்த 4% திரும்பப் பெறுதல் விதி உதவுகிறது.
எடுத்துக்காட்டாக 50 வயதிற்குப் பிறகு உங்கள் ஆண்டுச் செலவு 500,000 எனில், அப்போது நீங்கள் விஆர்எஸ் எடுத்துக் கொள்ள விரும்பினால், உங்களுடன் தேவைப்படும் கார்பஸ் 1.25 கோடியாகும். இதில் 50% நிலையான வருமானத்திலும் 50% ஈக்விட்டியிலும் வைக்கலாம்.
4) 100 மைனஸ் உங்கள் வயது விதி: இந்த விதி சொத்து ஒதுக்கீட்டிற்கு பயன்படுத்தப்படுகிறது.
உங்கள் போர்ட்ஃபோலியோவில் எவ்வளவு பணம் பங்குகளுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்பதை அறிய, உங்கள் வயதை 100லிருந்து கழிக்கவும்.
உங்கள் வயது 30 என்று வைத்துக்கொள்வோம் (100 – 30 = 70)
பங்கு: 70%
கடன்: 30%
ஆனால் உங்கள் வயது 60 ஆக இருந்தால் (100 – 60 = 40)
பங்கு: 40%
கடன்: 60%
5) 10-5-3 விதி
நாம் ஒவ்வொருவருக்குமே நியாயமான வருமான எதிர்பார்ப்புகள் இந்த விதி போல் நிச்சயம் இருக்க வேண்டும்
10℅ வருவாய் விகிதம் - ஈக்விட்டி / மியூச்சுவல் ஃபண்டுகள்
5℅ - கடன்கள் (நிலையான வைப்பு அல்லது பிற கடன்கள்)
3℅ - சேமிப்பு கணக்கு
6) 50-30-20 விதி - செலவு மற்றும் வருமானத்துக்கான ஒதுக்கீடு பற்றி ரூல் ஆகும்.
உங்கள் வருமானத்தை இப்படி பிரியுங்கள்
50℅ - தேவைகள் (மளிகை பொருட்கள், வாடகை, இஎம்ஐ போன்றவை)
30℅ – தேவைகள் / ஆசைகள் (பொழுதுபோக்கு, விடுமுறைகள் போன்றவை)
20℅ - சேமிப்பு (ஈக்விட்டி, எம்எஃப்கள், கடன், எஃப்டி போன்றவை)
இந்த 50-30-20 ரூல் படி, குறைந்தபட்சம் உங்கள் வருமானத்தில் 20℅ ஐ சேமிக்க முயற்சி செய்யுங்கள். உங்களால் நிச்சயமாக அதிகமாக சேமிக்க முடியும்.
7) 3X அவசரகால விதி
வேலை இழப்பு, மருத்துவ அவசரநிலை போன்ற அவசரநிலைகளுக்கு எப்போதும் உங்கள் மாத வருமானத்தின் 3 மடங்குகளை அவசரகால நிதியில் வைத்துக் கொள்ள வேண்டும்.
3 X மாத வருமானம்
உண்மையில், ஒரு பாதுகாப்பான பக்கத்தில் இருக்க வேண்டும் என்றால், லியூக்கியூட் சொத்து இருக்க வேண்டும். அதாவது சுமார் 6 மாத வருமானம் உங்கள் கையில் பணமாக அல்லது எப்போது வேண்டுமானாலும் பணமாக மாற்றக் கூடிய வகையில் இருக்க வேண்டும்.
8) 40℅ இஎம்ஐ விதி
உங்கள் வருமானத்தில் 40 சதவீதத்திற்கு இஎம்ஐகளில் செல்ல வேண்டாம். நீங்கள் மாதம் ₹ 50,000 சம்பாதிக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்படி என்றால் உங்களிடம் ₹ 20,000க்கு மேல் இஎம்ஐக்கள் நிச்சயம் இருக்கவே கூடாது. இந்த விதி பொதுவாக கடன் வழங்க நிதி நிறுவனங்களால் பின்பற்றப்படுகிறது. நீங்கள் கடன் கேட்டால் இந்த விதிப்படித்தான் வங்கிகள் கடன் தருவார்கள். உங்கள் நிதிகளை நிர்வகிக்க இந்த 40℅ இஎம்ஐ விதியை பயன்படுத்தலாம்.
(9)லைப் இன்சூரன்ஸ் ரூல்
உங்களின் வருடாந்திர வருமானத்தின் 20 மடங்கு உறுதித் தொகை வருமாறு லைப் இன்சூரன்ஸ் நீங்கள் போட்டு வைத்திருக்க வேண்டும்.
20 ஆண்டு வருமானம் எப்படி: நீங்கள் ஆண்டுக்கு ₹ 5 லட்சம் சம்பாதிப்பதாக வைத்துக் கொள்வோம்.இந்த விதியைப் பின்பற்றுவதன் மூலம் நீங்கள் குறைந்தபட்சம் 1 கோடி காப்பீட்டைப் பெற முடியும்.
(10) ரூல் நம்பர் 144
SIP மூலம் முதலீடு செய்யப்படும் போது, கொடுக்கப்பட்ட விகிதத்தில் உங்கள் பணத்தை இரட்டிப்பாக்க பல ஆண்டுகள் ஆகும். எனவே எப்போது இரட்டிப்பு ஆகும் என்பதை அறிய வட்டி விகிதத்துடன் 144ல் வகுத்தால் பணம் எத்தனை ஆண்டுகளில் இரட்டிப்பாகும் என்பது தெரிந்துவிடும்.
எ.கா. விகிதம் 15% என்றால், உங்கள் முதலீடு 144/15= 9.6 ஆண்டுகளில் இரட்டிப்பாகும்.
(11) சுழல் கடன் சூத்திரம்:- (1+i%)^12-1.
உதாரணம்:- கிரெடிட் கார்டு நிறுவனம் மாதம் 3% வட்டியாக வசூலித்தால். கூட்டு ஆண்டு செலவு = (1+3%)^12-1 = 42.6% ஆகும். மேற்கண்ட 11 ரூல்களை அறிந்தால் பணத்தை பன்மடங்கு பெருக்க முடியும். இதுபற்றி கருத்துக்களை கமெண்டில் கூறுங்கள்.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம












Click it and Unblock the Notifications