மீண்டும் வேகம் எடுக்கும் கொரோனா.. மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 11141 கேஸ்கள்.. தமிழகத்தில் நிலை என்ன?
சென்னை: இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. முக்கியமாக மஹாராஷ்டிரா, கேரளாவில் தினசரி கேஸ்கள் அதிகரித்து வருகிறது.
அதோடு தமிழகத்திலும் சென்னையில் கொரோனா கேஸ்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதையடுத்து வெளி நாடுகளில் இருந்து வரும் எல்லோருக்கும் இ - பாஸ் கட்டாயம் என்று நேற்று அறிவிப்பு வெளியானது.
இதேபோல் ஆந்திரா, புதுவை, கர்நாடக மாநிலங்களை தவிர்த்து மற்ற மாநிலங்களுக்கு இது பொருந்தும். இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தொடங்கிவிட்டதோ என்று அஞ்சும் அளவிற்கு நாளுக்கு நாள் கொரோனா கேஸ்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

நிலவரம்
தற்போது நிலவரப்படி மஹாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் 11141 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அங்கு மொத்தம் 22,19,727 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அங்கு மொத்தம் 20,68,044 பேர் குணமடைந்துள்ளனர். மஹாராஷ்டிராவில் இதுவரை 52478 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.

கேரளா
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2100 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அங்கு மொத்தம் 10,77,328 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அங்கு மொத்தம் 10,31,865 பேர் குணமடைந்துள்ளனர். கேரளாவில் இதுவரை 4301 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.

கர்நாடகா
கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 622 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அங்கு மொத்தம் 9,55,015 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அங்கு மொத்தம் 9,35,772 பேர் குணமடைந்துள்ளனர். கர்நாடகாவில் இதுவரை 12362 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.

ஆந்திர பிரதேசம்
ஆந்திர பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 136 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அங்கு மொத்தம் 8,90,692 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அங்கு மொத்தம் 8,82,520 பேர் குணமடைந்துள்ளனர். ஆந்திர பிரதேசத்தில் இதுவரை 7174 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.

தமிழகம்
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 567 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அங்கு மொத்தம் 8,55,121 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அங்கு மொத்தம் 8,38,606 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை 12518 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.
-
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"ஏதோ ரொம்ப தப்பா இருக்கு.." இந்திய பொருளாதாரம் குறித்து சந்தேகம் கிளப்பும் ரகுராம் ராஜன் -
அதானி நிறுவனத்தின் அசுர வளர்ச்சி! சோலார் பேனல் உற்பத்தியில்.. புதிய உச்சம்! -
வாழ வைத்த இந்தியா! 22 வயசுல பெங்களூர் வந்த அமெரிக்கர்.. இன்னைக்கு டாப் கோடீஸ்வரர்! எப்படினு பாருங்க -
இனி "இவங்க" யாரும் பெட்ரோல் பங்கில் டீசலை வாங்க முடியாது.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு -
அமெரிக்க தாக்குதலில் இந்திய மாலுமிகள் மாயம்.. துணை தூதரை அழைத்து கண்டித்த மத்திய அரசு! -
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
பெட்ரோல் விலை 100க்கு கீழ் வருமா? மத்திய அரசின் வரி குறைப்பால் இந்தியாவில் என்ன நடக்க போகிறது? -
மிக பெரிய ஆபத்தில் சீனா.. இனி என்ன செய்தாலும் ஒன்னுமே மாறாது.. ஆனா இந்தியாவுக்கு பயங்கர லாபம்! -
இந்தியாவை கபளீகரம் செய்த சரிவு.. நிலைமை ரொம்ப மோசம்.. இது தொடர்ந்தால் டேஞ்சர் தான்! -
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம்












Click it and Unblock the Notifications