“கள்ளச் சந்தையில் ஐபிஎல் டிக்கெட்”.. CSK போட்டியின்போது 12 பேரை கொக்கி போட்டு தூக்கிய போலீசார்!
சென்னை: சென்னையில் நேற்று நடைபெற்ற CSK - LSG போட்டியின்போது கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்பனை செய்ததாக 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 17வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் சென்னை உட்பட நாட்டின் பல நகரங்களில் நடைபெற்று வருகின்றன. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற 39-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதின.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, ருதுராஜ் கெய்க்வாட் சதத்தின் உதவியுடன் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 210 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி 19.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை வென்றது லக்னோ.
சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக திருவல்லிக்கேணி போலீசார் தீவிர ரோந்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், பிளாக்கில் ஐபிஎல் டிக்கெட் விற்ற 12 பேரை கைது செய்துள்ளனர்.
சென்னை - லக்னோ ஆட்டத்தின்போது, கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை செய்யும் நபர்களை தொடர்ச்சியாக கண்காணித்து வந்த போலீசார், டிக்கெட் விற்பனை செய்ததாக 12 பேரை திருவல்லிக்கேணி போலீசார் கைது செய்தனர். கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை செய்ததாக மொத்தம் 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 56 டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆடும் போட்டிகளை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வரும் நிலையில், அதனை பயன்படுத்தி பிளாக்கில் மிக அதிக விலைக்கு டிக்கெட் விற்பது போன்ற நடவடிக்கைகளில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து தொடர்ச்சியாக புகார்கள் எழும் நிலையில், போலீசார் தீவிரமாக கண்காணித்து 12 பேரை கைது செய்துள்ளனர்.
மேலும், சினிமா டிக்கெட்டுகளை விற்பனை செய்யும் பிரபல டிக்கெட் விற்பனை இணையதளத்தின் பெயரில் அதேபோன்று போலியாக இணையதளம் உருவாக்கி ஐபிஎல் டிக்கெட்டுகள் விற்பனை செய்து மோசடி செய்யப்படுவதாகவும் புகார்கள் எழுந்து வருகின்றன.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
ஐபிஎல் முடிந்தது.. அடுத்த வேலையை பாருங்க.. உதய் கோட்டக் ட்வீட் கொடுத்த ஷாக் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications