சீமான் Vs விஜயலட்சுமி- காதல், மோதல், கண்ணாமூச்சி ஆட்டம், க்ளைமாக்ஸ் சண்டை..அசல் சினிமாவாகிப் போனது!
சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது புகார் கூறி 12 ஆண்டுகள் போராடிய நடிகை விஜயலட்சுமி 2-வது முறையாக தமது புகாரை திரும்பப் பெற்றுக் கொண்டார்.
"பெரியாரின் பேரன்.. மார்க்ஸின் மாணவன்.. பிரபாகரனின் தம்பி.." இப்படித்தான் தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு திராவிடர் இயக்கம், இடதுசாரிகளின் மேடைகள் மூலமாக அறிமுகமானவர் சீமான். 2009-ம் ஆண்டு ஈழத்து இறுதி யுத்தத்துக்குப் பின் உணர்வுப் பெருவெடிப்பில் தனி இயக்கம், தனிக் கட்சி.. இப்போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக 'அண்ணன்' 'செந்தமிழன்' சீமான்.

விஜயலட்சுமி புகார்: நடிகை விஜயலட்சுமி.. பிரண்ட்ஸ் படத்தில் நடித்து புகழ்பெற்றவர்.. "வாழ்த்துகள்" பட காலத்தில் சீமான் - விஜயலட்சுமி காதல் உருவானது என்கிற பேச்சு உண்டு. 2008-ல் சீமான் இயக்கமாக, கட்சியாக தனிநபராக களமாடிய காலத்தில் திருமணம் செய்து கொண்டார் என்றார் நடிகை விஜயலட்சுமி.
2011-ல் முடிந்த விளையாட்டு: 2008 முதல் 2011 வரை சீமானும் தாமும் கணவன் மனைவியாக வாழ்ந்தோம்; சீமான் ஏமாற்றிவிட்டார் என புகார் கொடுத்தார். இந்த புகார் 2011-ல் சீமானின் அரசியல் வாழ்வின் தொடக்கத்தில் புயலை கிளப்பியது. ஆனால் புயல் புறப்பட்ட கையோடு பிரளயம் எதுவும் செய்யாமல் அடங்கிப் போனது.
எத்தனை ஆயிரம் வீடியோக்கள்: ஆனால் நடிகை விஜயலட்சுமி, பெங்களூர் சென்று இடைவிடாமல் சீமானை விமர்சித்து, சீமானின் முதல் மனைவி என உரிமை கோரி ஆயிரக்கணக்கான வீடியோ பதிவுகளை பதிவு செய்து வந்தார். எதற்கும் சீமான் கண்டுகொள்ளவில்லை.
மீண்டும் விஜயலட்சுமி: கடந்த ஆகஸ்ட் மாதம் இறுதியில் திடீரென சென்னை வந்த நடிகை விஜயலட்சுமி, 12 ஆண்டுகளுக்கு முன்னர் கொடுத்த புகாரை தூசு தட்டி அதே பஞ்சாயத்தை மீண்டும் கூட்டினார். இப்போது நடிகை விஜயலட்சுமிக்கு ஆதரவாக, தமிழர் முன்னேற்றப் படை தலைவர் வீரலட்சுமியும் களத்துக்கு வந்தார். சென்னை போலீசாரும் விஜயலட்சுமியிடம் விசாரணை நடத்தியது; மருத்துவ பரிசோதனை நடத்தியது. சீமானையும் விசாரணைக்கு அழைத்தது சென்னை போலீஸ்.
போலீஸ் விசாரணை: இப்போது சீமான் விஸ்வரூபம் காட்டினார். 12 ஆண்டுகளுக்கு முந்தைய வாபஸ் பெறப்பட்ட ஒரு விவகாரம் இப்போது ஏன் தூசு தட்டப்படுகிறது? காரணம் கேட்டார் சீமான். போலீஸ் விசாரணைக்கு போக மறுத்தார். நீதிமன்ற ஒப்புதல் இருக்கிறதா? என எதிர்கேள்வி கேட்டார்.
அனல் பறந்த சீன்கள்: சீமான் தன் பக்கம் வாதங்களை அடுக்கிய நிலையில், வீரலட்சுமிக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் இடையே உக்கிர மோதல்; இடதுசாரிகளின் ஜனநாயக மாதர் சங்கத்துக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் இடையே உக்கிர மோதல்- கைது என அன்றாடம் பரபரப்புகளுக்கு பஞ்சம் இல்லாமல் நகர்ந்தது இந்த விவகாரம்.

க்ளைமாக்ஸ் சண்டை: சீமான் ஒரு திரைநட்சத்திரம்.. விஜயலட்சுமி ஒரு திரைநட்சத்திரம்.. அதனால் என்னவோ க்ளைமாக்ஸ் காட்சிகள் ஆக்ஷன் ரேஞ்சில்தான் இருந்தன. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சீமான், நடிகை விஜயலட்சுமி, வீரலட்சுமி என ஒருவரையும் விடாமல் வெளுத்து எடுத்தார். ஒரு கட்டத்தில் கட்சியாவது ஒன்றாவது வெட்டிப் போட்டு போயிடுவேன்.. வீரலட்சுமியை ஸ்கெட்ச் போட்டு தூக்கிடுவேன் என்றெல்லாம் க்ளைமாக்ஸ் ஆக்ஷன் காட்சிகளாக சீமான் பேட்டிகள் இருந்தன.
இறுதி சீன்: இதன் உச்சமாக யாருமே எதிர்பாராத திருப்பமாக, நள்ளிரவில் நடிகை விஜயலட்சுமி தமது சீமான் மீதான புகாரை வாபஸ் பெற்றுக் கொள்வதாக் தெரிவித்தார். சீமானை எதிர்த்துப் போராட முடியவில்லை; எனக்கு ஆதரவு கிடைக்கவில்லை என அறிவித்துவிட்டுப் போய்விட்டார். திரைப்படத்துக்குரிய அத்தனை அம்சங்களையும் கலந்த ஒரு கலவையான படைப்பு போல முடிந்துவிட்டது சீமான் Vs விஜயலட்சுமி மோதல்!
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications