என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.. கொரோனாவை கட்டுப்படுத்த 123 வருட பழைய சட்டத்தை தூசி தட்டிய அரசு
சென்னை: கொரோனா வைரஸை கட்டுப்படுத்த எதை செய்வது என்று தெரியாமல் உலக நாடுகள் எல்லாம் விழிபிதுங்கி வருகின்றன. நோய் பரவாமல் தடுக்க மக்களை வீட்டுக்குள்ளே இருக்க வைப்பது தான் இப்போதைக்கு ஒரே வழியாக உள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த இந்திய அரசு 123 ஆண்டுகள் பழமையான தொற்று நோய்கள் சட்டத்தை எடுத்துள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் கடும் வேகத்தில் பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 590 பேர் கொரோனா வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசுகளும் 123 ஆண்டுகள் பழமையான தொற்று நோய்கள் சட்டத்தை கையில் முதல்முதலாக 123 ஆண்டுகளுக்கு முன்பு 1897 ம் ஆண்டு பிப்ரவரி 4ம் தேதி கொள்ளைநோய்கள் தடுப்பு சட்டம் இயற்றப்பட்டது. அந்த காலத்தில் நோய் தடுப்பு மருந்துகள் இல்லாததால் பிளேக் என்ற கொள்ளை நோயில் மக்கள் கொத்து கொத்தாய் மடிந்தனர். இதையடுத்து மக்களை பாதுகாக்க இந்த சட்டத்தை ஆங்கிலேயே அரசு இயற்றியது.

சட்டத்தில் புதிய திருத்தம்
இந்நிலையில் நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் கொள்ளை நோய்கள் தடுப்பு சட்டத்தில் பல்வேறு திருத்தங்கள் கொண்டுவரப்பட்டது. அதன்பிறகு காலமாற்றத்திற்கு ஏற்ப அவ்வப்போது புதிய புதிய திருத்தங்களும் கொண்டுவரப்பட்டன. . இந்த புதிய திருத்தப்பட்ட கொள்ளை நோய்கள் தடுப்பு சட்டம் மாநில அரசுகளுக்கு பல்வேறு சிறப்பு அதிகாரங்களை அளித்துள்ளது.

144 தடை உத்தரவு
இதன் காரணமாகவே கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு இந்த சட்டத்திற்கு அனுமதி அளித்துள்ளது. மத்திய அரசு சட்டத்தை பயன்படுத்தலாம் என்று சொன்ன உடன் முதல் மாநிலமாக கர்நாடகா அமல்படுத்தியது. அதன்பின்னர் ஹரியானா, மகாராஷ்டிரம், தமிழ்நாடு, ஆந்திரா, டெல்லி, தெலுங்கானா, என பல மாநிலங்கள் அடுத்தடுத்து பயன்படுத்தி 144 தடை உத்தரவு பிறப்பித்தன. மாவட்ட எல்லைகளை மூடியும் உத்தரவிட்டன.

வீட்டில் இருந்து வேலை
இந்த சட்டத்தின் படி பொது இடங்களில் மக்கள் கூடுவதை தடுக்க முடியும் பள்ளிகளையும் மூட முடியும். நிறுவனங்கள் இயங்குவதை முடக்க முடியும். வீடுகளில் இருந்து கொண்டே அலுவலகப் பணியை செய்யவும் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டு உள்ளது. அபாயகரமான தொற்று நோய்களை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுப்பதற்கு இந்த சட்டத்தின் பிரிவு 2 உதவுகிறது.

ஆபத்தான தொற்று நோய்
எந்த நேரத்திலும் எந்தப்பகுதியிலும் ஏதேனும் ஆபத்தான தொற்றுநோய் ஏற்படுகிற போது நடைமுறையில் உள்ள பிற சட்டங்களின் விதிகள் இந்த நோக்கத்திற்கு போதுமானதாக இல்லை என்கிற போது தொற்று நோய்கள் சட்டத்தை அரசு பயன்படுத்துகிறது. ரயில் பேருந்து, உள்ளிட்ட போக்குவரத்துகளில் பயணிக்கும் மக்களையும் பரிசோதிக்க முடியும்.

சோதனை செய்ய அதிகாரம்
எந்த ஒரு தொற்று நோயால் ஒருவர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் அரசு அதிகாரிகளுக்கு ஏற்படுகிற போது அவர்களை விலக்கி வைக்க முடியும். மருத்துவமனைகளில் தற்காலிக இடவசதிகளை உருவாக்க முடியும் கப்பல் அல்லது அனைத்து போக்குவரத்து சாதனங்களையும் சோதனையிட்டு நடவடிக்கை எடுக்க தொற்று நோய் சட்டப்படி அரசுக்கு உரிமை உள்ளது.

போக்குவரத்தை தடை செய்யலாம்
மேலும் தொற்று நோய்கள் சட்டத்தின் கீர் முக்கியமான கீழ்கண்ட விஷயங்களையும் மேற்கொள்ள முடியும் . அதன்படி எல்லைகளை மூடுவது, வாகன போக்குவரத்தை தடை செய்வது, பொதுமக்கள் கூடுவதை தடை செய்வது உள்ளிட்டவற்றை இச்சட்டப்படி மேற்கொள்ள முடியும். இந்த சட்டத்தின்படி பிறப்பிக்கப்படும் உத்தரவுக்கு கீழ்படிந்து நடக்காவிட்டால் அவர்களை இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 188ன் கீழ் தண்டிக்கவும் முடியும்.

அதிகாரிகளுக்கு பாதுகாப்பு
இந்த சட்டத்தின் படி செயல்படுத்தப்படுகிற எந்த ஒரு நடவடிக்கைக்கும் அல்லது எந்த ஒரு அதிகாரிகளுக்கும் எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்க முடியாது. எனவே மக்கள் சூழ்நிலையை உணர்ந்து , கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அரசு பிறப்பித்து வரும் அனைத்து உத்தரவுகளையும் முறையாக பின்பற்றினால் இந்த கொடூர கொள்ளை நோயில் இருந்து தப்பிக்க முடியும்.
-
இந்தியாவை அச்சுறுத்தினால் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.. எச்சரித்த ரஷ்ய அதிபர் புதின் -
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்!












Click it and Unblock the Notifications