ஆஹா... அருமை தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மழை இருக்கு.. வானிலை மையம் நல்ல தகவல்
சென்னை: தென்மேற்கு பருவமழையால் கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, விருதுநகர் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பருவமழை பொய்த்துப்போனதால் பல இங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொள்வதற்காக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இருந்த போதிலும் வருண பகவான் மனது வைக்காததன் காரணமாக தண்ணீர் தட்டுப்பாடு தமிழகத்தில் தலைவிரித்தாடுகிறது.

குமரி, தேனி- நெல்லை
இந்த சூழலில் இமயமலைப் பகுதிகளில் தெற்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, விருதுநகர் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடலூர் புதுக்கோட்டை
வெப்பச்சலனம் உள்ளிட்ட காரணத்தால். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழைக்கும் வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. இதேபோல் கிருஷ்ணகிரி, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துளள்து.

சென்னையில் மேகம்
சென்னயை பொருத்த வரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் மாலை அல்லது இரவு வேளைகளில் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நீலகிரியில் அதிக மழை
தென் மேற்கு பருவமழை தீவிரமடைவதன் காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு மத்திய அரபிக்கடல் மற்றும் தென் மேற்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் கூடலூரில் அதிகபட்சமாக 4 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
-
Bakrid: பக்ரீத், வார இறுதிக்கு சொந்த ஊர் போறீங்களா.. போக்குவரத்துக் கழகத்தின் சூப்பர் அறிவிப்பு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்?












Click it and Unblock the Notifications