Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வடஇந்தியாவில் 13 மாநிலங்களில் பாஜகவிற்கு சிக்கல்.. ஆக்சிஸ் மை இந்தியா இயக்குனர் சொன்ன தகவல்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பாரதிய ஜனதா கட்சி (BJP) தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA), மத்திய அரசில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க முயல்கிறது. ஆனால் கடந்த முறை பாஜக அதிக இடங்களை வென்ற 13 மாநிலங்களில் இந்த முறை அதன் எண்ணிக்கையை வெல்ல வாய்ப்பு குறைவாக இருப்பதாக பிரதீப் குப்தா தெரிவித்துள்ளார். இவர் பிரபல தேர்தல் கணிப்பு நிறுவனமான ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆவார்.

பாரதிய ஜனதா கட்சி (BJP) 2024 லோக்சபா தேர்தலில் 370 இடங்களை வெல்வதை லட்சிய இலக்காக நிர்ணயித்துள்ளது. 2019 ஐ விட 67 இடங்கள் அதிகம் வெல்வோம் என்று பாஜக தலைவர்கள் மேடைக்கு மேடை அறிவித்து வருகின்றனர். ஆனால் பாஜகவால் இந்த இலக்கை அடைய முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

13 states where BJP-led NDA faces uphill task says Axis My India Pradeep Gupta

பாஜக தனியாக 370 இடங்களை வெல்வதன் மூலம் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு (NDA) 400 ரன்களை கடக்க வாய்ப்பாக அமையும் என்பதால் பாஜக இந்த மாபெரும் இலக்கை நிர்ணயம் செய்துள்ளது. . மக்களவையில் 543 இடங்கள் உள்ளன, பாஜக 2014 மற்றும் 2019 இல் முறையே 282 மற்றும் 303 இடங்களை வென்றது.

370 என்ற இலக்கை.. ஜம்மு காஷ்மீரின் 370 நீக்கத்துடன் பிரதமர் நரேந்திர மோடி, பாஜகவினர் இணைத்து பேசி வருகின்றனர்.ஆனால் கடந்த முறை வென்றதில் இருந்து கூடுதலாக 67 இடங்களை சேர்ப்பது என்பது பாஜகவிற்கு மிகவும் கடினமான பணியாக இருக்கலாம்.

பாஜகவிற்கு இலக்கு கஷ்டம்; பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று பெரும்பாலான அரசியல் ஆய்வாளர்கள் ஒப்புக்கொண்டாலும், 370 இடங்கள் என்பது அக்கட்சிக்கு மிகவும் கடினமான ஒன்றாகும். 2019ல் பாஜக வெற்றி பெற்ற மாநிலங்களில் எல்லாம் அதே மாதிரி வெற்றியை மீண்டும் பாஜக பதிவு செய்ய வேண்டும்.

கடந்த முறை குறைவான வாக்கு வித்தியாசத்தில் வென்ற இடங்களிலும் வெற்றியை உறுதி செய்ய வேண்டும். அதோடு இல்லாமல் புதிதாக 67 இடங்களை வெல்ல வேண்டும். கடந்த முறை வென்ற இடங்களில் சில தொகுதிகளை இழக்கும் பட்சத்தில் கூடுதலாக புதிய இடங்களில் வெல்ல வேண்டும்.

தற்போது லோக்சபா தேர்தலில் பாஜக 443 மக்களவைத் தொகுதிகளிலும், அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு 100 இடங்களிலும் போட்டியிடுகிறது.

வாய்ப்பு குறைவு; இந்த நிலையில்தான் கடந்த முறை பாஜக அதிக இடங்களை வென்ற 13 மாநிலங்களில் இந்த முறை அதன் எண்ணிக்கையை வெல்ல வாய்ப்பு குறைவாக இருப்பதாக பிரதீப் குப்தா தெரிவித்துள்ளார். இவர் பிரபல தேர்தல் கணிப்பு நிறுவனமான ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆவார்.

இந்த 13 மாநிலங்களில் முன்பு எடுத்த இடங்களை மீண்டும் எடுக்க பாஜகவிற்கு ஜீரோ வாய்ப்பு மட்டுமே உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். பாஜக தற்போது வைத்திருக்கும் சில இடங்களை இழக்கக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனம் ஏற்கனவே பல முறை துல்லியமான கணிப்புகளை வென்ற நிறுவனம் ஆகும். கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை துல்லியமாக இந்த நிறுவனம் கணித்தது. 2019 லோக்சபா தேர்தலில் பாஜக ஆட்சியையும் இந்த நிறுவனம் துல்லியமாக இந்த நிறுவனம் கணித்தது.

மகாராஷ்டிரா, பீகார், மத்தியப் பிரதேசம், கர்நாடகா, குஜராத், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், ஹரியானா, டெல்லி, உத்தரகண்ட், ஹிமாச்சலப் பிரதேசம் மற்றும் கோவா மற்றும் சில யூனியன் பிரதேசங்களில் பாஜக இடங்களை இந்த முறை இழக்கும் என்று அவர் கணித்துள்ளார்.

இங்கே 257 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. கடந்த 2019 பொதுத் தேர்தலில் இங்கே பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி 238 இடங்களை வென்றது.

2019 மக்களவைத் தேர்தலின் போது, ​​இந்த மாநிலங்களில் NDA 93 சதவீத வெற்றியை பெற்றிருந்தது. இந்த 13 மாநிலங்களில் முன்பு எடுத்த இடங்களை மீண்டும் எடுக்க பாஜகவிற்கு ஜீரோ வாய்ப்பு மட்டுமே உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். பாஜக தற்போது வைத்திருக்கும் சில இடங்களை இழக்கக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா, பீகார், கர்நாடகா மற்றும் டெல்லி போன்ற மாநிலங்களில் அரசியல் ரீதியாக மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டு உள்ளது. மகாராஷ்டிராவில் அமைக்கப்பட்ட புதிய கூட்டணிகள், சிவசேனா, தேசியவாத காங்கிரசை உடைத்து பாஜகவிற்கே எதிராக திரும்பி உள்ளது, பீகாரில் நிலவும் அதிருப்தி நிலை, கர்நாடகாவில் காங்கிரஸ் வலிமையாக இருப்பது, டெல்லியில் காங்கிரஸ் - ஆம் ஆத்மி கூட்டணி ஆகியவை பாஜகவிற்கு எதிராக திரும்பி உள்ளது.

இதனால் இந்த இடங்களில் பாஜக கடந்த முறை பெற்ற இடங்களை இழக்கும் வாய்ப்புகள் உள்ளன. அதேபோல் 2019 ஆம் ஆண்டில், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், ஒடிசா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 185 இடங்களில் வென்றது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் செயல்திறன் 60 சதவீதமாக இருந்தது இது போக அசாம் மற்றும் ஏழு வடகிழக்கு மாநிலங்கள் 109 இடங்களை வென்றது. இங்கே வேண்டுமானால் பாஜக கொஞ்சம் கூடுதல் இடங்களை வெல்லலாம். ஆனால் மொத்தமாக இடங்களை பாஜக உயர்த்த வாய்ப்பு குறைவு என்று பிரதீப் குப்தா தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+