சென்னையில் 13 வயது சிறுமி உயிரிழந்த விவகாரம்.. குளிர்பான நிறுவனத்தை மூட அதிரடி உத்தரவு
சென்னை: பெசன்ட் நகரை சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் குளிர்பானம் குடித்து சிறிது நேரத்திலேயே உயிரிழந்துள்ள நிலையில், சம்மந்தப்பட்ட குளிர்பான நிறுவனத்தில் ஆய்வு செய்த மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர், அந்த ஆலையை மூட உத்தரவிட்டுள்ளார்
சென்னை பெசன்ட் நகரைச் சேர்ந்த சதீஷ் -காயத்ரி தம்பதியின் மகள் தரணி. 13 வயதான தரணி கடந்த செவ்வாய்க்கிழமை வீட்டின் அருகே இருந்த மளிகைக் கடையிலிருந்து 10 ரூபாய் குளிர்பானம் ஒன்றை வாங்கி குடித்துள்ளார்.

அதைக் குடித்த சற்று நேரத்திலேயே திடீரென வாந்தி எடுக்கத் தொடங்கிய தரணி, சற்று நேரத்தில் மயக்கமடைந்தார். மேலும், அவரது உடலும் நீல நிறமாக மாறியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து உறவினர்கள் உறவினர்கள் அச்சிறுமியை அருகிலுள்ள தனியார்மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், தரணி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இது தொடர்பாகத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுமியின் உடலை உடற்கூறு ஆய்வு செய்ய ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிறுமி உயிரிழந்ததற்கு அவர் குடித்த குளிர்பானம் காரணமாக இருக்கலாம் என உறவினர்கள் சந்தேகம் தெரிவித்ததால், சிறுமி குடித்துவிட்டு மீதம் வைத்திருந்த குளிர்பானத்தை போலீசார் ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். சம்மந்தப்பட்ட அந்த மளிகைக் கடையில் இருந்தும் மீதுள்ள குளிர்பான பாட்டில்களைக் கைப்பற்றினர்.
மேலும், திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே அமைந்துள்ள அந்த குளிர்பான நிறுவனத்தில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ஜெகதீஷ் சுபாஷ் சந்திரபோஸ் நேரடியாகச் சென்று ஆய்வு செய்தார். குளிர் பானம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மூலப் பொருட்கள் குறித்த விவரத்தை அங்குள்ள ஊழியர்களிடம் கேட்டறிந்தார்.
மேலும், ஆலையைத் தற்காலிகமாக மூடவும் அலுவலர் ஜெகதீஷ் சுபாஷ் சந்திரபோஸ் உத்தரவிட்டார்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications