கிடுகிடுவென அதிகரிக்கும் கொரோனா.. சென்னையில் இன்று மட்டும் 138 பேர் பாதிப்பு.. மக்கள் அதிர்ச்சி!!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் இன்று ஒரே நாளில் 138 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Recommended Video

    சென்னையில் 98 சதவீதம் பேருக்கு அறிகுறி இல்லாமல் கொரோனா

    தமிழகத்தில் கொரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கை நேற்று வரை 2,162 பேராக இருந்தது. இந்த நிலையில் இன்று கொரோனா குறித்த நிலவரங்கள் அரசு வெளியிட்ட இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

    அதில் தமிழகத்தில் மேலும் 161 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 2323-ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 138 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    சென்னை

    சென்னை

    சென்னையில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 906 ஆக உயர்ந்துள்ளது. இது பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் சென்னையில் 98 சதவீதம் பேருக்கு அறிகுறி இல்லாமலேயே கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் இந்த எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது என்றார்.

    அதிகரிப்பு

    அதிகரிப்பு

    நாளுக்கு நாள் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் வரும் மே 3 ஆம் தேதியுடன் ஊரடங்கு உத்தரவு முடிவடையும் நிலையில் சென்னையில் இத்தகைய பாதிப்பால் மக்கள் கலக்கமடைந்துள்ளனர். ஒருவேளை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படாவிட்டால் கொரோனா பாதிப்புள்ள மக்கள் வெளியே வந்தால் அது சமூக பரவலுக்கு வழி வகுக்கும் என்பதால் இந்த அச்சம் எழுகிறது.

    கொரோனா பாதிப்பு

    கொரோனா பாதிப்பு

    தமிழகத்தில் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 142 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 75 பேர் ஆண் குழந்தைகளும், 67 பேர் பெண் குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். அது போல் 13 வயதிலிருந்து 60 வயது வரையில் 1303 ஆண்களும், 626 பெண்களும் என மொத்தம் 1929 பேருக்கும், 60 வயதுக்குட்பட்டவர்களில் 175 ஆண்களுக்கும், 77 பெண்களுக்கும் என 252 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    தளர்த்த முடியும்

    தளர்த்த முடியும்

    மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 1,035 பேராகும். இன்று வரை 1,10,718 பேருக்கு கொரோனா சோதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை படிப்படியாகத்தான் தளர்த்த முடியும் என மருத்துவ நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+