பிப்ரவரி மாதத்தில் வங்கிகளுக்கு 14 நாட்கள் லீவ்! எந்தெந்த தேதிகள்.. லிஸ்ட் வெளியிட்ட ரிசர்வ் வங்கி
சென்னை: பிப்ரவரி மாதத்தில் 28 நாட்களே இந்த ஆண்டு உள்ளன. பிப்ரவரி மாதத்தில் வங்கிகளுக்கு விடுறை விடப்படுவதற்கான பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. மொத்தமாக 14 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை வருகின்றன. இந்த விடுமுறை லிஸ்ட் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும். கூட்டாக 14 நாட்கள் என்றாலும் மாநில வாரியாக பார்த்தால் 14 நாட்கள் வராது. எந்தெந்த மாநிலங்களில் எந்த நாள் விடுமுறை என்ற விவரங்களை இங்கே பார்க்கலாம்.
வங்கி பரிவர்த்தனைகள் தற்போது பெரும்பாலும் ஆன்லைனில் மாறிவிட்டாலும், காசோலை டெபாசிட், பெரிய அளவிலான பண பரிமாற்றம் போன்றவை என்றால் வங்கிகளுக்கு நேரடியாகவே செல்ல வேண்டியுள்ளது. அது மட்டும் இன்றி ஆன்லைன் சேவையில் பாதுகாப்பு விதி மீறல் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சப்படுபவர்களும் நேரடியாக வங்கிக்கு சென்றே வங்கி பரிவர்த்தனைகளை மேற்கோண்டு வருகிறார்கள்.

இதனால், வங்கி வேலை நாட்களில் வாடிக்கையாளர்கள் கூட்டம் தற்போதும் சில முக்கியமான வங்கிகளில் இருப்பதை காண முடிகிறது. வங்கிகளை பொறுத்தவரை வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை மற்றும் இரண்டாவது மற்றும் 4 வது சனிக்கிழமைகளில் விடுமுறை விடப்படுகிறது. அனைத்து சனிக்கிழமைகளிலும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்று வங்கிப் பணியாளர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். விரைவில் இது பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கிகளுக்கு வழக்கமான விடுமுறை தவிர உள்ளூர் பண்டிகைககளுக்கு ஏற்ப விடுமுறை விடப்படுகின்றன. அந்த வகையில் பிப்ரவரி மாதத்திற்கான விடுமுறை பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இதன்படி பார்த்தால் வங்கிகளுக்கு வரும் பிப்ரவரி மாதத்தில் 14 நாட்கள் விடுமுறை விடப்படுகிறது. ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள விடுமுறை பட்டியலை இங்கே பார்க்கலாம்.
* சரஸ்வதி பூஜையை முன்னிட்டு பிப்ரவரி 3 ஆம் தேதி திரிபுராவில் வங்கிகளுக்கு விடுமுறை.
* தை பூசம்: தமிழகத்தில் உள்ள வங்கிகளுக்கு பிப்ரவரி 11 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) விடுமுறை.
* ஸ்ரீ ரவிதாஸ் ஜெயந்தி: பிப்ரவரி 12 ஆம் தேதி (புதன்கிழமை) இமாசல பிரதேச மாநிலம் சிம்லாவில் வங்கிகளுக்கு விடுமுறை
*பிப்ரவரி 15 சனிக்கிழமையன்று மணிப்பூரில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை.
* சத்ரபதி சிவாஜி மகாராஜ் ஜெயந்தி: 19 ஆம் தேதி மகாராஷ்டிராவில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை.
* மாநில தினம்: மிசோரம், அருணாசல பிரதேசத்தில் வங்கிகளுக்கு விடுமுறை
* மகாசிவராத்ரி: பிப்ரவரி 26 ஆம் தேதி பல மாநிலங்களில் விடுமுறை விடப்படுகிறது. தமிழ்நாடு, திரிபுரா, சிக்கிம், அசாம், மணிப்பூர், அருனாசல பிரதேசம், நாகலாந்து, புதுடெல்லி, கோவா, பீகார், மேகாலயா ஆகிய மாநிலங்களில் விடுமுறை இல்லை.
பிப்ரவரி மாதத்தில் மேற்கண்ட நாட்களை தவிர ஒவ்வொரு மாதமும் போலவே, இந்த முறையும் சனி மற்றும் ஞாயிறு காரணமாக ஆறு நாட்களுக்கு வங்கிகள் மூடப்படும். இதனையும் சேர்த்து 14 நாட்கள் மொத்தமாக விடுமுறை வருகிறது. வங்கிகளுக்கு செல்ல திட்டமிட்டு இருந்தால் விடுமுறை எப்போது என்பதை தெரிந்து கொண்ட பின்னர் வாடிக்கையாளர்கள் சென்றால் சிரமம் இன்றி சென்று வரலாம்.












Click it and Unblock the Notifications