14 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு.. 6 பேர் அதிரடி டிரான்ஸ்ஃபர்.. தமிழ்நாடு அரசு உத்தரவு!
சென்னை : தமிழ்நாடு காவல்துறையில் ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் 14 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கியும், 6 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், செங்கல்பட்டு சைபர் கிரைம் பிரிவு ஏஎஸ்பி பொன்ராமு பதவி உயர்த்தப்பட்டு சென்னை ரயில்வே எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். அரியலூர் மாவட்ட சைபர் கிரைம் பிரிவு ஏ.எஸ்.பியான பி.ரவிசேகரன், சென்னை ஐ.ஜி. தலைமையகத்தில் எஸ்.பி.யாக பதவி உயர்த்தப்பட்டு பணியமர்த்தப்பட்டுள்ளார்.
திருச்சி ஏ.எஸ்.பி.யான ஆசைத்தம்பி, திருப்பூர் நகர எஸ்.பி.யாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். ராணிப்பேட்டை சைபர் கிரைம் பிரிவு ஏ.எஸ்.பி.யான பி. முத்துக்கருப்பனுக்கு, பழனி பட்டாலியன் தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படைக்கு எஸ்.பி.யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. கொளத்தூர் காவல் துணை ஆணையராக சக்திவேல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வேலூர் செவ்வூர் சிறப்புக் காவல் பட்டாலியன் எஸ்பி சந்திர சேகரன், கடல்சார் அமலாக்கப்பிரிவு எஸ்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மதுரை காவல் தலைமையகத்தின் துணை ஆணையர் கவுதம் கோயல், சேலம் நகர வடக்கு துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை காவல்துறை நிர்வாகப் பிரிவு துணை ஆணையர் ராமமூர்த்தி உளவுத்துறை துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். திருவண்ணாமலை சைபர் கிரைம் கூடுதல் எஸ்பி சுப்பாராஜூக்கு எஸ்பியாக பதவி உயர்வு வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பதவி உயர்வு பெற்ற சுப்பாராஜ், டிஜிபி அலுவலக நிர்வாக எஸ்பி, உதவி ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
வேலூர் காவல் ஆட்சேர்ப்பு பள்ளியில் ஏ.எஸ்.பி.யாக இருந்த வேலூர் மாவட்ட சேவூர் பட்டாலியன் தமிழ்நாடு சிறப்பு போலீஸ், எஸ்.பி.யாக பதவி உயர்வு பெறுகிறார். தமிழ்நாடு சிறப்பு காவல் பிரிவு எஸ்பியாக முத்துகருப்பனும், ஆவடி ரெஜிமண்ட் மைய எஸ்பியாக ஜானகிராமனும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மதுரை காவல் ஆணையர் அலுவலக எஸ்பியாக மங்களேஸ்வரனும், சென்னை பயிற்சி கல்லூரி எஸ்பியாக சந்திரமவுலியும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி போலீஸ் பயிற்சி பள்ளி எஸ்பியாக மாரிராஜனும், சென்னை சைபர் க்ரைம் எஸ்பியாக மோகன் நவாஸும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் சென்னை எஸ்பியாக கெங்கைராஜும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு 14 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்களுக்கு, காவல் கண்காணிப்பாளர்களாக பதவி உயர்வு வழங்கி, 20 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
-
காஞ்சிபுரம் படப்பையில்.. முதியவருக்கு பட்டை நாமம் போட்ட தவெக பெண் நிர்வாகி! 9 லட்சம் அபேஸ்! -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சி.. கார்டு விண்ணப்பித்தோருக்கு 30 நாளில் தமிழக அரசு குட் நியூஸ் -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
மாஸ் லுக்கில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர்! முற்றிலும் வேறான சீருடை.. காரணம் இதுதான்! -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
வன்னி அரசு வந்ததும் வராததுமா செய்த வேலை.. அரசு அதிகாரிகள் பங்கேற்ற தாட்கோ கூட்டத்தில் என்ன நடந்தது -
24 மணி நேரம்தான் டைம்! அரசு ஆபீசிலும் காசு தர வேண்டாம்! இறப்புச் சான்றிதழ் பெற ரூட் போட்ட தமிழக அரசு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது!












Click it and Unblock the Notifications