147ஆக சரிந்த கொரோனா பாதிப்பு..பலி எண்ணிக்கையும் கட்டுக்குள் வந்தது..தமிழக அரசின் முழு அறிக்கை இதோ..!
சென்னை : தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், இன்று மேலும் 147 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்தமாக கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 34,51,469 ஆக உயர்ந்துள்ளதாக மாநில மருத்துவத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தமிழக மருத்துவத்துறை சார்பில் தமிழகத்தில் தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, உயிரிழந்தவர்கள், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் உள்ளிட்ட விவரங்கள் குறித்து தினமும் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது.
அதன்படி, சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் மேலும் 147 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 34,51,469 ஆக அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், இது நேற்றைய பாதிப்பைவிட குறைவாகும்.

குணமடைந்தவர்கள் எண்ணிக்கை
தமிழக அரசின் மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை மூலம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 387 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 34,11,545பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் இன்று மேலும் 2 பேர் மட்டும் உயிரிழந்துள்ளதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 38,021 ஆக உயர்ந்துள்ளது.

2 பேர் உயிரிழப்பு
கொரோனா காரணமாக அரசு மருத்துவமனையில் இருவர் மட்டும் உயிரிழந்த நிலையில் , தனியார் மருத்துவமனைகளில் யாரும் உயிரிழக்கவில்லை. கடந்த நில நாட்களாக பலி எண்ணிக்கை 3ஐ தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் அதிகபட்சமாக தலைநகரமான சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 47 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை மொத்தம் 7,50,566 ஆக உயர்ந்துள்ளது. அதற்கு அடுத்த படியாக கோவையில் 17 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா சோதனை
இதுவரை 6,48,37,145 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று மட்டும் 41,648 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 1,903 கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், இதுவரை மொத்தம் 20,14,479 ஆண்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்றைக்கு மட்டும் 81 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் பெண்கள் பாதிப்பு
பெண்களில் இதுவரை மொத்தம் 14,36,952 பேர் பெண்கள் எனவும், இன்றைக்கு மட்டும் 66 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 38 திருநங்கைகளுக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், திருநங்கைகள் இன்று யாரும் பாதிக்கப்படவில்லை எனவும் அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications