தமிழ்நாட்டில் இன்று 50 ஆயிரம் இடங்களில் 14-வது மெகா தடுப்பூசி முகாம்..!
தமிழகம் முழுவதும் 14-வது மெகா தடுப்பூசி முகாம் இன்று நடக்கிறது
சென்னை: தமிழகம் முழுவதும் 14-வது மெகா தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் மையங்களில் இன்று நடைபெறுகிறது... காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ள, இந்த தடுப்பூசி முகாமில் காலக்கெடு முடிந்தும் 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
Recommended Video
தமிழகத்தில் தொற்று கட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும், இன்னும் முழுமையாக நீங்கவில்லை.. எனவே, தொற்று பரவாமல் தடுக்க தடுப்பூசி போடும் பணியை அரசு தீவிரப்படுத்தி வருகிறது.
அந்தவகையில், கடந்த ஜனவரி மாதம் 16-ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. தினசரி ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில், தடுப்பூசி போடும் பணியை மேலும் தீவிரப்படுத்தும் விதமாக கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து, மெகா தடுப்பூசி முகாமை தமிழக அரசு நடத்தி வருகிறது.

தமிழக அரசு
அதன்மூலம் நாள் ஒன்றுக்கு 10 லட்சத்துக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. மேலும், 100 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி என்ற இலக்கை எட்டுவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது... மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் லட்சக்கணக்கான பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில், நேற்று முன்தினம்வரை 7 கோடியே 24 லட்சத்து 30 ஆயிரம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

தடுப்பூசிகள்
இன்னும் ஒரு கோடி பேர் முதல் டோஸூம், 80 லட்சம் பேர் 2-வது டோஸ் தடுப்பூசியும் செலுத்தி கொள்ளாமல் உள்ளனர். இதுவரை 13 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், தமிழகம் முழுவதும் 14-வது மெகா தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் மையங்களில் இன்று நடைபெறுகிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இந்த தடுப்பூசி முகாமில் காலக்கெடு முடிந்தும் 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

சென்னை
சென்னையில் 2ம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய நாட்களை கடந்து 10,38,623 பேர் உள்ளனர்... சென்னையில் தற்போது 9,60,085 கோவிட் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று 200 வார்டுகளிலும் 1,600 இடங்களில் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இந்த மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்களில் 2 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகள்
எனவே தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத நபர்கள் இந்த தடுப்பூசி முகாமை பயன்படுத்தி தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.. மேலும், கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ள ஒத்துழைப்பு தரவேண்டும் என தமிழக அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
