தமிழக அரசு ஊழியர்களுக்கு ஷாக்.. அரசு ஆசிரியர்கள் உள்பட 15,000 பேர் ஊதியத்துக்கு காத்திருப்பு.. ஏன்?
சென்னை: தமிழகத்தில் பள்ளி கல்வித்துறையில் பணியாற்றும் ஐஏஎஸ் அதிகாரி உள்பட அரசு பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள் என 15,000 பேருக்கு செப்டம்பர் மாத சம்பளம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழக பள்ளி கல்வித்துறைக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ரூ.573 கோடி நிதி விடுவிக்கப்படாத நிலையில் 15,000 பேரும் சம்பளத்துக்காக காத்திருக்க வேண்டிய நிலை உருவாகி உள்ளது. இது தமிழக அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய, மாநில அரசுகள் சார்பில் பள்ளி கல்வித்துறைக்கு என்று தனித்தனியாக திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அந்த வகையில் ஒருங்கிணைந்த கல்வித் திட்டம் (Samagra Shiksha Scheme) என்பது மத்திய அரசு, மாநில அரசின் பங்களிப்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதில் மத்திய அரசு 60 சதவீதம், மாநில அரசு 40 சதவீதம் பங்களிப்பு செய்கிறது. இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் மத்திய - மாநில அரசுகள் சேர்ந்து பள்ளி கல்வித்துறைக்கு ரூ.3,586 கோடியை வழங்க வேண்டும். இதில் மத்திய அரசு ரூ.2152 கோடி வழங்கும். மற்றவற்றை தமிழக அரசு பங்களிப்பு செய்யும்.
இந்நிலையில் தான் ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டுக்கு மத்திய அரசு சார்பில் தமிழகத்துக்கு ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ் ரூ.573 கோடி வழங்கப்பட வேண்டும். இந்த தொகை தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் புதிய கல்வி கொள்கையை செயல்படுத்தாமல் தமிழக அரசு உள்ளதால் இந்த தொகையை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.
இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் நேரடியாக கடிதம் எழுதினார். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த 27 ம் தேதி முதல்வர் ஸ்டாலின் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து நிதியை விடுவிக்க கூறினார். ஆனாலும் மத்திய அரசு நிதியை வழங்கவில்லை. இதனால் தமிழகத்தில் பள்ளி கல்வித்துறை நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் எஸ்எஸ்ஏ திட்டத்தில் பணியாற்றும் ஐஏஎஸ், அரசு ஆசிரியர்கள், ஊழியர்கள் என 15,000 பேருக்கு சம்பளம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இன்று 1ம் தேதி என்றாலும் கூட தற்போது வரை அவர்களுக்கு செப்டம்பர் மாதம் சம்பளம் என்பது வழங்கப்படவில்லை. மத்திய அரசு நிதி விடுவிக்காமல் இருப்பதே இதற்கு முக்கிய காரணமாக உள்ளது. தற்போது இந்த ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் என்றால் ரூ.25 கோடி நிதி வேண்டும்.
இத்தகைய சூழலில் தான் அரசு ஆசிரியர்கள், ஊழியர்கள் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. போர்க்கால அடிப்படையில் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து சம்பளத்தை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இது தமிழக அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமின்றி 15,000 பேருக்கும் எப்போது செப்டம்பர் மாத ஊதியம் கிடைக்கும் என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications