தமிழகத்தில் மேலும் 15,684 பேருக்கு கொரோனா பாதிப்பு.. 13 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 15,684 பேருக்கு ஏற்பட்டுள்ளது. அதாவது இரண்டாவது நாளாக 15 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்த நிலையில் தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத் துறை வெளியிடுகிறது.

அந்த வகையில் இன்றைய தினம் சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 15,684 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

குணமாதல்

குணமாதல்

தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 10,97,672 ஆகும். இன்று ஒரே நாளில் 13,625 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இது வரை 9,76,876 பேர் கொரோனாவிலிருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனா பரிசோதனை

கொரோனா பரிசோதனை

தமிழகத்தில் இன்று 1,07,145 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இன்று ஒரே நாளில் 1,20,184 சளி மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதுவரை 2,21,26,656 சளி மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புதிய பாதிப்பு

புதிய பாதிப்பு

இன்று ஒரே நாளில் 1,15,642 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுவரை தமிழகத்தில் 2,17,63,365 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இன்றைய நிலவரப்படி 9,605 ஆண்களுக்கும், 6,079 பெண்களுக்கும் கொரோனா புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வீடு திரும்பியவர்கள்

வீடு திரும்பியவர்கள்

இன்று ஒரே நாளில் 13,625 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளார்கள். இதுவரை 9,76,876 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளார்கள். தமிழகத்தில் 263 கொரோனா சோதனை மையங்கள் இயங்கி வருகின்றன. இன்று ஒரே நாளில் 94 பேர் கொரோனாவுக்கு பலியாகிவிட்டனர். இதுவரை 13,651 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+