சிவி சண்முகம் தலைமையில் புதுச்சேரி ரிசார்ட்டில் கூடிய அதிமுக MLAக்கள்.. அடுத்தடுத்து வந்த தலைகள்
புதுச்சேரி: பரபரப்பான அரசியல் சூழலில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் 15 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் சொகுசு விடுதியில் தங்கியுள்ளனர். அதிமுக மூத்த தலைவர்களான ஓ.எஸ்.மணியன், தளவாய் சுந்தரம் ஆகியோரும் அங்கு சென்றுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தவெக தலைவர் விஜய் ஆட்சியமைக்க உரிமை கோரி ஆளுநரிடம் கடிதம் கொடுத்த நிலையில், ஆளுநர் இன்னும் பதவியேற்க அழைப்ப்பு விடுக்கவில்லை. இந்நிலையில், திடீரென அவருக்கு வழங்கப்பட்டிருந்த கான்வாய் பாதுகாப்பு விலக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

இன்னொரு புறம் அதிமுக எம்.எல்.ஏக்கள் புதுச்சேரியில் ஒரே ரெசார்ட்டில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர். அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சிவி சண்முகம் தவெக கட்சிக்கு ஆதரவு கொடுக்கும் நிலைப்பாட்டை எடுத்திருப்பதாகவும் இதுதொடர்பாக பல்வேறு எம்எல்ஏ-க்களிடம் ஆலோசனை நடத்தி வருவதாகவும் செய்திகள் வெளியாகின.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர் ஆகியோர் சந்தித்தனர். இதைத்தொடர்ந்து நேற்று மாலை எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது.
தவெகவுக்கு ஆதரவு தர வேண்டும் என ஒரு தரப்பினரும், தரக்கூடாது என அதிமுகவில் மற்றொரு தரப்பினரும் இன்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் பேசியிருந்ததாக தகவல் வெளியானது.
அதிமுக முன்னாள் தலைவரும் அக்கட்சியின் துணை பொதுச்செயலாளருமான கேபி முனுசாமி செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது, பேசிய அவர், தவெகவுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக எதுவும் பேசவில்லை. எந்தச் சூழ்நிலையிலும் தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது" என்று தெரிவித்தார்.
இதற்கிடையே, திமுக-வும், அதிமுக-வும் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைக்காமல் தடுப்பதற்காக கூட்டணி அமைக்க உள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது.பிரபல அரசியல் விமர்சகர்கள், மூத்த பத்திரிகையாளர்கள் பலரும் இந்த கருத்தை தொடர்ந்து இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் அக்கட்சி எம்.எல்.ஏக்கள் சுமார் 15 பலர் புதுச்சேரி பூரணங்குப்பம் பகுதியில் உள்ள சொகுசு விடுதிக்கு அழைத்து வந்து தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அங்கு அதிமுக மூத்த தலைவர்களான எம்.எல்.ஏக்கள் ஓ.எஸ்.மணியன், தளவாய் சுந்தரம் ஆகியோரும் சென்றுள்ளனர். அதிமுகவின் பல எம்.எல்.ஏக்களை புதுச்சேரிக்கு அழைத்து வந்து தங்க வைத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
விஜய் போட்ட உத்தரவு.. 5 நாள் தான் டைம்.. வீடு கட்டுவோருக்கு மெகா குட்நியூஸ்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
அலையவிடும் ரங்கசாமி.. ஏக கடுப்பில் பாஜக எம்எல்ஏக்கள்.. இப்படி பண்ணிட்டாரே.. அமித் ஷா அப்செட்? -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications