காக்கா தோப்பு பாலாஜி..கதை முடித்த போலீஸ்! 6 வருடத்தில் 15 சம்பவங்கள்..தோட்டாக்களுக்கு இரையான டான்கள்
சென்னை: சென்னையில் பிரபல ரவுடியாக வலம் வந்த காக்கா தோப்பு பாலாஜி இன்று போலீசார் நடத்திய என்கவுண்டரில் சுட்டு கொலை செய்யப்பட்டார். கொலை, கொலை முயற்சி, கடத்தல் என பல வழக்குகள் இருந்த காக்கா தோப்பு பாலாஜியை சுற்றி வளைத்த போது துப்பாக்கியால் சுட்டதாகவும், இதை அடுத்து தற்காப்புக்காக என்கவுண்டர் செய்ததாக போலீசார் விளக்கம் அளித்து இருக்கின்றனர். இந்த நிலையில் கடந்த ஆறு ஆண்டுகளில் தமிழகத்தில் 15 என்கவுண்டர் சம்பவங்கள் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னை 7 கிணறு பகுதியைச் சேர்ந்த காக்கா தோப்பு பாலாஜி. அப்பகுதியில் பிரபல ரவுடியாக வலம் வந்தார். யுவராஜ் என்ற ரவுடி மூலம் ரவுடி உலகில் காலடி எடுத்து வைத்தவர், பின்பு யார் பெரியவர் என்ற பிரச்சினையில் அவரையே போட்டு தள்ளி பெரிய ரவுடியாக மாறினார்.

தற்போது சிறையில் இருக்கும் ரவுடி நாகேந்திரனுக்காக பல கொலைகளை செய்த காக்கா காப்பு பாலாஜி, வடசென்னை முழுவதும் தனது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதற்காக பிற ரவுடிகளை கொலை செய்தார்.

காக்கா தோப்பு பாலாஜி மீது கொலை கொள்ளை உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இந்த நிலையில் பல கொலை வழக்குகளில் சிக்கித் தலைமறைவாக இருந்த காக்கா தோப்பு பாலாஜியை இன்று போலீசார் சுற்றி வளைத்தனர். வியாசர்பாடி ரயில் நிலையம் அருகே ஒரு குடியிருப்பில் காக்கா தோப்பு பாலாஜி பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதை அடுத்து கொடுங்கையூர் போலீசார் அதிகாலையில் காக்கா தோப்பு பாலாஜியை சுற்றி வளைத்தனர்.

அப்போது போலீசாரை தாக்கி விட்டு செல்ல முயன்ற காக்கா தோப்பு பாலாஜி போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. இதனால் இன்ஸ்பெக்டர் சரவணன் துப்பாக்கியால் சுட இடது மார்பில் குண்டு பாய்ந்து காக்கா தோப்பு பாலாஜி சம்பவ இடத்திலேயே உயரிழந்தார். இந்த என்கவுண்டர் சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் தற்போது காக்கா தோப்பு பாலாஜி வரை சுமார் 15 என்கவுண்டர் சம்பவங்கள் நடைபெற்றிருக்கின்றன.
* 2019 ஆம் ஆண்டு சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கதிர்வேல், வியாசர்பாடி சேர்ந்த வல்லரசு ஆகியோர் போலீசார் நடத்திய என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

* 2020 ஆம் ஆண்டு ஒரே ஒரு என்கவுண்டர் சம்பவம் நடைபெற்றது. சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த பிரபல ரவுடியான சங்கரை போலீசார் சுட்டுக் கொண்டனர். போலீசார் திட்டமிட்டு சங்கரைக் கொன்றதாக அவரது உறவினர்கள் புகார் கூறியது குறிப்பிடத்தக்கது.

* தொடர்ந்து கடலூரை சேர்ந்த கிருஷ்ணன், காஞ்சிபுரத்தைச் சேர்ர்ந்த முர்தசா ஆகியோர் 2021 ஆம் ஆண்டு போலீசாரின் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியாகினர்.

* 2022 இல் செங்கல்பட்டைச் சேர்ந்த சேர்ந்த தினேஷ், மொய்தீன் மற்றும் நெல்லையில் நீராவி முருகன் ஆகியோர் போலீசார் நடத்திய என்கவுண்டரில் கொல்லப்பட்டனர்.

* 2023 மட்டும் 3 என்கவுண்டர் சம்பவங்கள் நடைபெற்றது, சென்னை கூடுவாஞ்சேரியை சேர்ந்த சோட்டா வினோத், ரமேஷ், திருச்சியைச் சேர்ந்த பில்லா ஜெகன் ஆகியோர் காவல் துறையின் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியாகினர்.

* 2024 ஆம் ஆண்டில் திருச்சி திருச்சியைச் சேர்ந்த பிரபல ரவுடியான துரைசாமி புதுக்கோட்டையில் என்கவுண்டர் செய்யப்பட்டார். தொடர்ந்து சென்னையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய திருவேங்கடமும், தற்போது காக்கா தோப்பு பாலாஜியும் என்கவுண்டர் செய்யப்பட்டிருக்கின்றனர்.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications