கங்குவா கிரிஞ்ச் சீன்களை மொத்தமாக தூக்கிய படக்குழு.. இனி பிரச்னை முடிஞ்சுது
சென்னை: சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா படம் நெகட்டிவ் விமர்சனங்களால் எதிர்பார்த்தை வரவேற்பு கிடைக்கவில்லை. இதை சரி செய்யும் விதமாக படக்குழு அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. மக்களின் விமர்சனங்களை ஏற்று அதில் மக்களால் விமர்சிக்கப்பட்ட 15 நிமிட காட்சிகளை நீக்கியுள்ளனர்.
இயக்குநர் சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவான படம் கங்குவா. ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு தேவி ஶ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். பிரமாண்ட பொருட் செலவில் தயாரிக்கப்பட்ட இப்படம் பான் இந்தியா மார்க்கெட்டை குறிவைத்து உலகம் முழுவதும் சுமார் 11,000 திரைகளில் கடந்த நவம்பர் 14 ஆம் தேதி ரிலீஸ் செய்தனர்.

கங்குவா படம் ரிலீஸ்க்கு முன்பிருந்து, இப்போது வரை ஏராளமான பிரச்னைகளில் சிக்கி வருகிறது. கங்குவா படத்தை முதலில் கடந்த அக்டோபர் 10 ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர். ஆனால், ரஜினிகாந்த் நடிப்பில் உருவான வேட்டையன் படமும் அதே அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகும் என அறிவித்தனர்.
இதனால் கங்குவா படத்தின் தேதி தள்ளி வைக்கப்பட்டது. படக்குழு இந்தியா முழுவதும் பயணித்து ப்ரொமோசன்களில் ஈடுபட்டனர். கங்குவாவை மொத்தம் இரண்டு பாகங்களாக வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக சூர்யா நடிப்பில் எந்தப் படமும் வெளியாகவில்லை. சூர்யா ரசிகர்களும் கங்குவா படத்தை ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, சிறுத்தை சிவா, சூர்யா உள்ளிட்டோர் படம் குறித்து மிகவும் பாசிட்டிவாக பேசி வந்தனர்.
படத்தின் பிசினஸ் குறித்தும் படக்குழு பெருமையாக கூறிவந்தனர். இதனிடையே தீபாவளி பண்டிகைக்கு வெளியான அமரன் படத்துக்கு கிடைத்த வரவேற்பால், கங்குவா படத்துக்கு போதிய திரைகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இப்படி பல தடைகளை தாண்டி வெளியான கங்குவா, முதல் காட்சி முதலே கடுமையாக விமர்சிக்கப்பட்டது. படத்தின் முதல் 30 நிமிடங்கள் மிகவும் கிரிஞ்சாக உள்ளது. படம் முழுவதுமே இரைச்சலாக இருக்கிறது என்று நெகட்டிவ் விமர்சனங்கள் எழுந்தன.
அடுத்தடுத்த விமர்சனங்களால் தியேட்டர்களில் எதிர்பார்த்த மக்கள் கூட்டம் வரவில்லை. இதனால் படக்குழு அதிர்ச்சியடைந்தது. தியேட்டர் உரிமையாளர்களிடம் சத்தத்தின் அளவை குறைக்க சொல்லப்பட்டது. சூர்யாவின் மனைவி ஜோதிகா நேற்று வெளியிட்ட அறிக்கையில் கங்குவா படத்துக்கான எதிர்மறை விமர்சனம் குறித்து கண்டனம் தெரிவித்தார்.
கங்குவா படத்துக்கு எதிராக திட்டமிட்டு அவதூறு பரப்புகிறார்கள். முதல் 30 நிமிடங்கள் தான் சரி வரவில்லை. மற்றபடி படக்குழு இதற்காக மிகப்பெரிய உழைப்பை போட்டுள்ளது. பெண்களை இரட்டை அர்த்தங்களுடன் விமர்சித்த மோசமான படங்களுக்கு கூட இவ்வளவு நெகட்டிவ் வரவில்லை. எதற்காக இவ்வளவு நெகட்டிவ் என தெரியவில்லை என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் மக்களின் விமர்சனத்தை ஏற்று படத்தில் இருந்து மேலும் சில காட்சிகளை படக்குழு நீக்கியுள்ளது. முக்கியமாக முதல் 30 நிமிடங்கள் குறித்து அதிகம் விமர்சனம் எழுந்தது. தற்போது அதில் 15 நிமிட காட்சிகளை நீக்கி, ரீ சென்ஸார் செய்துள்ளனர். இதன் பிறகு திரையங்குகளில் அந்த 15 நிமிடங்கள் நீக்கப்பட்ட நிலையில் தான் கங்குவா திரையிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications