15 வயசு பிஞ்சு.. 3 மாதமாக ரூமில் அடைத்து.. திருத்தணியில் அட்டகாசம்.. ஆந்திராவுக்கு தப்பிய கொடூரன்
15 வயது சிறுமியை 3 மாதமாக பலாத்காரம் செய்த நபரை போலீசார் தேடி வருகிறார்கள்
சென்னை: 15 வயசு சிறுமியை ரூமுக்குள்ளேயே அடைத்து வைத்து, 3 மாதமாக கொடூரமாக பலாத்காரம் செய்துள்ளது ஒரு காம பிசாசு.. அயனாவரத்தை சேர்ந்த இந்த சிறுமியின் சோகத்தை விவரிக்கிறது இந்த செய்தி!
சென்னை அயனாவரத்தை சேர்ந்த சிறுமி தன் பாட்டியுடன் வசித்து வந்துள்ளார்.. சிறுமிக்கு 15 வயசாகிறது.. ஆனால், சற்று மனநிலை சரியில்லை.. பாட்டி எதையாவது பேச, சிறுமி அவருடன் சண்டை போடுவது வழக்கம்.

கடந்த 20ம் தேதி, சிறுமிக்கும் பாட்டிக்கும் இப்படித்தான் தகராறு வெடிக்க, கோபித்து கொண்ட சிறுமி வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டார். வீட்டை விட்டு வெளியேறிய சிறுமிக்கு எங்கே போவது என்றே தெரியவில்லை.. ஆதரவில்லாமல் பெரம்பூர் ரயில்வே ஸ்டேஷனிலேயே சுற்றி திரிந்துள்ளார்.
அப்போதுதான் வெங்கடேசன் என்பவர் சிறுமியை சந்தித்தார்.. வெங்கடேசன் திருத்தணியை சேர்ந்தவர்... விஷயத்தை தெரிந்து கொண்டார்.. சிறுமியின் மனநல பிரச்சனையையும் புரிந்து கொண்டார்.. அதனால் "நான் இருக்கிறேன், கவலைப்படாதே" என்று வீட்டுக்கு அழைத்து சென்றார். ஆனால் வீட்டுக்கு போனதும், சிறுமியை தனி ரூமில் தள்ளிவிட்டு, கொடூரமாக பலாத்காரம் செய்துள்ளார்.
அந்த ரூமை விட்டு சிறுமியை வெளியே வர விடவே இல்லை.. இப்படியே 3 மாதமாக சிறுமியை அதே ரூமில் சீரழித்துள்ளார் வெங்கடேசன்.. இத்தனைக்கும் வெங்கடேசனின் அம்மா அந்த வீட்டில்தான் இருக்கிறார்.. மகனிடம் மல்லுக்கட்டியும் பிரயோஜனம் இல்லை.. ஒருகட்டத்தில் பொறுமை இழந்த அவர், சிறுமிக்கு உதவ முடிவெடுத்து, அதற்கான நேரத்திற்காக காத்திருந்தார்.
வேலை விஷயமாக வெங்கடேசன் வெளியேறி உள்ளார்.. அந்த நேரத்தை பயன்படுத்தி, சிறுமியை வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டார். இப்போது திரும்பவும் சிறுமி திருத்தணி ரயில்வே ஸ்டேஷனில் சுற்றி திரிந்துள்ளார்.. அப்போது ரயில்வே போலீசார் பார்த்து, சிறுமியை மீட்டுள்ளனர்.
நடந்த சம்பவத்தை எல்லாம் விசாரித்து, அயனாவரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவலையும் சொன்னர்கள்.. வீட்டுக்கு வந்ததும் சிறுமி இல்லாததை கண்ட வெங்கடேசன், நடந்ததை புரிந்து கொண்டார்.. எப்படியும் போலீசார் வருவார்கள் என்று நினைத்து அங்கிருந்து தப்பிவிட்டார்.. ஆந்திராவுக்கு போய்விட்டாராம்.. அவரை கைது செய்யதான் போலீசாரும் ஆந்திரா சென்றுள்ளனர்.
இப்படித்தான் கடந்த ஆண்டு, ஜூலை மாதம் சென்னை புளியந்தோப்பை சேர்ந்த சிறுமி கோபித்து கொண்டு வெளியே வந்து, கடைசியில் பாலியல் கும்பலிடம் மாட்டி கொண்டார்... கோபித்து கொண்டு வெளியே வரும் இதுபோன்ற சிறுமிகளை குறித்து வைத்தே ஒரு கும்பல் சுற்றி கொண்டிருக்கிறது.. தற்போது ஊரடங்கிலும் இப்படிப்பட்ட கொடுமைகள் நடப்பது அதிர்ச்சிக்குரியதாகி வருகிறது.. கடுமையான சட்டங்களே இப்போதைக்கு உடனடி தேவையாக உள்ளது!
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications