150 சவரன் தங்க நகைகளை, ஒரு தட்டு மோமோஸுக்காக தூக்கிக் கொடுத்த சிறுவன்! பீரோவில் ரூ.85 லட்சம் காலி
சென்னை: தங்கம் விலை தினந்தோறும் விண்ணை தொட்டு வருகிறது.. இனிமேல் தங்க நகைகள் வாங்குவதை ஏழை, எளிய மக்களால் நினைச்சுகூட பார்க்க முடியாத அளவுக்கு விலை எகிறிவிட்டடது.. இப்படிப்பட்ட சூழலில் ஒரு தட்டு மோமோஸுக்காக ஒரு குடும்பமே சேமித்து வைத்திருந்த மொத்த சொத்தும் பறிபோயிருப்பது பலரையும் உலுக்கியுள்ளது. அப்படி என்ன நடந்தது உத்தர பிரதேசத்தில்???
உபி மாநிலத்தில் தியோரியா நகரில் வசித்து வருகிறார் விம்லேஷ் மிஸ்ரா.. இவர் அங்குள்ள ஒரு கோயிலில் பூசாரியாக வேலை பார்த்து வருகிறார்.

இவருடைய 14 வயது மகனுக்கு மோமோஸ் என்றால் கொள்ளை பிரியம்.. அதனால் தான் வசித்து வரும் தும்ரி சௌராஹாவில் செயல்படும் ஒரு கடைக்கு அடிக்கடி சென்று மோமோஸ் சாப்பிடுவது சிறுவனின் வழக்கம்...
அநத் மோமோஸ் கடையை 3 இளைஞர்கள் சேர்ந்து நடத்தி வந்துள்ளார்கள்.. சிறுவனுக்கு மோமோஸ் மீதுள்ள ஆசையை கவனித்த 3 பேரும், அதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள முடிவு செய்தனர்..
சின்ன சின்ன தங்க நகைகள்
இதற்காக சிறுவனிடம் ஒரு விபரீத ஆசையை தூண்டியுள்ளனர்... அதாவது வீட்டிலிருந்து காஸ்ட்லி பொருட்களை எடுத்து வந்து கொடுத்தால், தேவையான மோமோக்களை வாழ்நாள் முழுவதும் இலவசமாக தருவதாக சிறுவனுக்கு ஆசை வார்த்தை காட்டியுள்ளனர்.
மோமோஸ் மீது இருந்த ஈர்ப்பால், உடனே சிறுவன் ஆரம்பத்தில் வீட்டில் இருந்த சின்ன சின்ன பொருட்களை எடுத்து சென்று கொடுத்துள்ளான். பிறகு கடைக்காரர்களின் தூண்டுதலால், பீரோவில் இருந்த நகைகளை திருட ஆரம்பித்தான்..
தன்னுடைய சகோதரியின் நகைகளை ஒவ்வொன்றாக திருடிச் சென்று கடைக்காரர்களிடம் ஒப்படைத்துள்ளான் சிறுவன்.. பீரோவில் இருந்த நகைகள் ஒவ்வொன்றாக காணாமல் போவது யாருக்கும் தெரியாமல் இருந்துள்ளது...
ரூ.85 லட்சம் நகை பீரோவில் மாயம்
ஒருநாள் விம்லேஷ் மிஸ்ராவின் சகோதரி வீட்டிற்கு வந்திருந்தார். தன்னுடைய நகைகளை திருப்பி தருமாறு சகோதரிடம் கேட்டார்.. உடனே விம்லேஷ் மிஸ்ராவும் பீரோவைத் திறந்து பார்த்தபோது நகைகள் காணாமல் போயிருந்ததை கண்டு திடுக்கிட்டார்..
சுமார் 85 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் அனைத்தும் மாயமாகி இருப்பதைக் கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்தனர்.. உடனே இதுகுறித்து சிறுவனிடம் விசாரித்தபோதுதான், அவன் செய்த செயலை அழுதுகொண்டே ஒப்புக்கொண்டான். உடனடியாக அந்த மோமோஸ் கடைக்கு சென்று பார்த்தபோது, சம்பந்தப்பட்ட 3 மோமோஸ் வியாபாரிகளும் கடையை மூடிவிட்டு எகிறி தப்பி ஓடிவிட்டிருந்தது தெரியவந்தது.
தங்கம் கேட்ட மோமோஸ் ஓனர்கள்
இது குறித்து விம்லேஷ் மிஸ்ரா ராம்பூர் கர்கானா போலீசில் புகார் தந்தார்.. இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள அந்த 3 மோமோஸ் கடை ஓனர்களையும் தீவிரமாக தேடி வருகிறார்கள்..
காவல்துறை அதிகாரி தேவேந்திர குமார் சிங் இதுகுறித்து செய்தியாளர்களிடம் சொல்லும்போது, 3 குற்றவாளிகளையும் பிடிக்க தீவிர விசாரணை தொடங்கப்பட்டு, முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன..
140 முதல் 150 சவரன் தங்க நகைகள்
கிராமத்தில் வசிக்கும் சிறுவனுடன் அந்த இளைஞர்கள் நட்பு கொண்டதாக மிஸ்ரா தனது புகாரில் குற்றம் சாட்டியுள்ளார். அந்த 3 இளைஞர்களும் தனது மகனுக்கு மோமோஸ் வழங்கியதாகவும், அதற்கு ஈடாக அவன் வீட்டிலிருந்து நகைகளை எடுத்து வந்து அவர்களிடம் கொடுத்ததாகவும் தெரிகிறது.. அந்த நகைகள் அந்த சிறுவனுக்கும் அவனது சகோதரிக்கும் சொந்தமானவை" என்று தெரிவித்துள்ளார்..
சம்பந்தப்பட்ட சிறுவன் 7ம் வகுப்பு படித்து வருகிறானாம்.. சிறுவனின் அறியாமையைப் பயன்படுத்தி திட்டமிட்டு நடந்த இந்த மோசடி, அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரூ.85 லட்சத்துக்கு நகை என்றால், 140 முதல் 150 சவரன் வரை இருக்கும் என்கிறார்கள்...!!












Click it and Unblock the Notifications