சென்னை - டெல்லி விமானங்கள் திடீர் ரத்து! முன்கூட்டியே அறிவிக்கவில்லை என பயணிகள் புகார்!
சென்னை: சென்னை - டெல்லி இடையேயான 16 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. டெல்லியில் பெய்த பலத்த மழை காரணமாக சென்னை டெல்லி இடையே 16 விமான சேவை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் கனமழை கொட்டித் தீர்த்தது. கடந்த வியாழக்கிழமை காலை 8.30 மணி முதல் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி வரை டெல்லியில் 228 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1936 ஆம் ஆண்டு் ஜூன் மாதத்தில் 235.5 மில்லிமீட்டர் மழை பெய்ததே இதுவரை அதிகபட்ச மழை அளவாக உள்ளது. அதற்குப் பிறகு நேற்று முன்தினம் பெய்த மழையே அதிகளவு மழையாக பதிவாகியுள்ளது. பலத்த மழையால் டெல்லி நகரின் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.
டெல்லியில் பெய்த பலத்த மழை காரணமாக விமான நிலையத்தின் மேற்கூரை சரிந்து விபத்துக்குள்ளானது. பலத்த மழை மற்றும் விமான நிலைய மேற்கூரை இடிந்து விழுந்த விபத்து காரணமாக சென்னை டெல்லி இடையே 16 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது.
விமான சேவை ரத்து செய்யப்பட்டது தொடர்பாக முன்கூட்டியே முறையான அறிவிப்பு வழங்கவில்லை என பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications