பொள்ளாச்சியைபோல் மாமல்லபுரத்திலும் மதுவிருந்து.. போதையில் ஆட்டம் போட்ட பெண்கள் உள்பட 160 பேர் கைது
Recommended Video
சென்னை: சென்னை புறநகர் பகுதியான மாமல்லபுரத்தில் மதுவிருந்து நடத்தப்பட்டது. இதையடுத்து 160 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தற்போது கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வெப்பம் அதிகமாக இருப்பதால் மக்கள் ஊட்டி, கொடைக்கானல் என மலைவாசஸ்தலங்களுக்கு செல்கின்றனர். அது போல் இன்னும் சிலர் கடற்கரையோரங்களில் உள்ள ரிசார்டுகளில் தங்கி வெப்பத்தை தணித்துக் கொள்கின்றனர்.
இந்த நிலையில் மாமல்லபுரத்தில் உள்ள ஒரு ரிசார்ட்டில் ரவுடிகள் தங்கி கலாட்டா செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

ஆபாச நடனம்
இதையடுத்து போலீஸார் குறிப்பிட்ட ரிசார்டுக்கு சென்று சுற்றி வளைத்து சோதனை நடத்தினர். அப்போது போலீஸாருக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. அங்கு மதுபோதையில் ஆண்களும், பெண்களும் ஆபாச நடனம் ஆடி கொண்டிருந்தனர்.

விடுமுறை
ஒரே கூச்சல், கும்மாளம் என்பதால் ரவுடிகள் வந்துவிட்டதாக புகார் எழுந்த நிலையில் அவர்கள் அனைவரும் ஐடி ஊழியர்கள் என தெரியவந்தது. அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில் சனி, ஞாயிறு விடுமுறையை கழிப்பதற்காக ரிசார்ட்டுக்கு வந்ததாக தெரிகிறது.

200 பேர்
இதையடுத்து போலீஸார் 160 பேரை கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர். அதுபோல் உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவிலும் ஒரு பண்ணை வீட்டில் நேற்றிரவு மது விருந்து நடைபெற்றது. இதையடுத்து இதில் பங்கேற்ற 200 பேர் கைது செய்யப்பட்டனர்.

தலைதூக்கத் தொடக்கம்
முன்னதாக பொள்ளாச்சியில் சேத்துமடை பகுதியில் உள்ள தோட்டத்தில் அனுமதியின்றி நடத்தப்பட்டு வந்த ரிசார்ட்டில் கேரளா, கோவை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மாணவர்கள் போதையில் ஆண்கள், பெண்கள் என நடனம் ஆடியுள்ளனர். இதையடுத்து போலீஸார் 160 பேரை பிடித்தனர். பொள்ளாச்சி போல் மாமல்லபுரத்திலும் போதை விருந்து கலாசாரம் தலைத்தூக்கத் தொடங்கிவிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications