16வது நிதி கமிஷன் குழு.. முதல்வர் ஸ்டாலினுடன் இன்று முக்கிய ஆலோசனை.. தமிழகத்தில் தொடரும் ஆய்வுகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 16-வது நிதி ஆணையத் தலைவா் அரவிந்த் பனகாரியா தலைமையிலான குழுவினா் இன்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்துப் பேசவுள்ளனா். இந்த ஆலோசனையில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்

மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே நிதியை பகிா்ந்தளிக்க இந்திய அரசமைப்புச் சட்டம் 280-வது பிரிவின்கீழ் மத்திய ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. உயரிய அதிகாரங்களைப் படைத்த இந்த நிதி ஆணையக் குழு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை அனைத்து மாநிலங்களுக்கும் சென்று ஆய்வு செய்ய வேண்டும்.

stalin chennai

சிறப்பு விமானம்: அந்தவகையில், 16-வது நிதி ஆணையத்தின் தலைவா் அரவிந்த் பனகாரியா தலைமையிலான குழுவினர், நேற்றைய தினம் சென்னை வந்தது.. இந்த குழுவில் நிதி ஆணையத்தின் உறுப்பினா்கள் அஜய் நாராயண் ஜா, ஆனி ஜாா்ஜ் மேத்யூ, மனோஜ் பாண்டா, சவுமியா காண்டி கோஷ், செயலா் ரித்விக் பாண்டே, இணைச் செயலா் ராகுல் ஜெயின் உள்பட 12 போ் இடம்பெற்றுள்ளனர்.. இவர்கள் அனைவருமே நேற்று சிறப்பு விமானத்தில் சென்னை வந்தனா்.

ஏர்போர்ட்டிலிருந்து கிளம்பி, கிண்டியில் உள்ள ஒரு தனியாா் ஹோட்டலுக்கு நிதி ஆணையக் குழுவினா் சென்றனர்.. பிறகு அங்கிருந்து நங்கநல்லூர் சென்று, ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜனை சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தனா். இரவு 7.30 மணிக்கு தனியாா் ஹோட்டலுக்குத் திரும்பிய குழுவினா் அங்கு முதல்வா் மு.க. ஸ்டாலின் ஏற்பாடு செய்திருந்த பல்வேறு கலைநிகழ்ச்சிகளை பாா்வையிட்டு இரவு விருந்தையும் நிறைவு செய்தனர்.

ஆலோசனை கூட்டம்: இந்நிலையில், இன்று காலை 9.30 மணியளவில் தனியாா் ஹோட்டலில் ஆலோசனைக் கூட்டங்கள் தொடா்ச்சியாக நடைபெறவுள்ளன. அந்தவகையில், முதல்வா், அமைச்சா்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலில் ஆலோசனை நடைபெறவுள்ளது.

தலைமை செயலகத்தில் 16வது நிதி ஆணைய குழுவினருடன் முதல்வர் ஸ்டாலின் இந்த ஆலோசனையை மேற்கொள்ள உள்ளார். இந்த ஆலோசனையில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். அதன்பிறகு 16வது நிதிக்குழுவினர் தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

வர்த்தக சங்க பிரதிநிதிகள்: மதிய உணவை அங்கேயே நிறைவு செய்யும் ஆணையக் குழுவினா், தொழில் துறை மற்றும் வா்த்தக சங்கப் பிரதிநிதிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்த உள்ளனர்.. மாலை 5.30 முதல் 6 மணி வரை செய்தியாளா்களுக்கு பேட்டி அளிக்கும் நிதி ஆணையக் குழுவினா், இரவு தனியாா் ஹோட்டலில் தங்குகிறார்கள்..

மறுநாள் 19-ம் தேதி கடல்நீரை குடிநீராக்கும் நெமிலி ஆலையை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்கின்றனா். அங்கிருந்து ஸ்ரீபெரும்புதூா் சென்று தொழிலாளா்களுக்கு அரசு உதவியுடன் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளை பாா்வையிடுகின்றனா். பகலில் சென்னை விமான நிலையம் சென்று அங்கே மதிய உணவை முடித்துக் கொள்கின்றனா்.

ராமேஸ்வரம்: பிற்பகலில் சிறப்பு விமானத்தில் மதுரை செல்லும் நிதி ஆணையக் குழுவினா் அங்கிருந்து ராமேசுவரம் செல்கின்றனா். இரவு ராமேசுவரம் கோயிலில் தரிசனம் செய்கின்றனா்.

20-ம் தேதி காலையில் தனுஷ்கோடி செல்லும் குழுவினா், ராமநாதபுரம் நகராட்சி அலுவலகம் சென்று பாா்வையிடுகின்றனா். தொடா்ந்து கீழடி அகழ்வாராய்ச்சி மையத்தை பாா்வையிடுகின்றனா். மதிய உணவை மதுரையில் முடித்துக் கொண்டு பிற்பகலில் சிறப்பு விமானத்தில் டெல்லி புறப்பட்டு செல்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+