முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம்! சட்டசபை மே 11-ல் தொடங்குகிறது!
சென்னை: தமிழக அமைச்சரவை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை நடைபெறுகிறது. மேலும் 16-வது சட்டசபையின் முதல் கூட்டத் தொடர் மே 11-ல் தொடங்குகிறது.
தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மே 10-ந் தேதி முதல் 2 வார காலத்துக்கு முழு லாக்டவுன் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த லாக்டவுன் கட்டுப்பாடுகளை பொதுமக்கள் முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த நிலையில் தமிழக அமைச்சரவையின் முதல் கூட்டம் நாளை நடைபெறுகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறும்.
மேலும் 16-வது தமிழக சட்டசபையின் முதல் கூட்டத் தொடர் மே 11-ந் தேதி தொடங்குகிறது. இது தொடர்பாக தமிழக சட்டசபை செயலாளர் கி. சீனிவாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
16-வது சட்டசபையின் முதல் கூட்டம் மே 16-ந் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுகிறது. மே 11-ந் தேதி எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும்.
புதிய எம்.எல்.ஏக்கள், தேர்தலில் வெற்றி பெற்ற சான்றிதழை கொண்டு வரவேண்டும். சட்டசபை சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தல்கள் மே 12-ந் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும்.
தற்காலிக சபாநாயகர் கு. பிச்சாண்டி
இதனிடையே கீழ்பெண்ணாத்தூர் திமுக எம்.எல்.ஏ. கு. பிச்சாண்டி, தற்காலிக சபாநாயகராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஆளுநர் மாளிகையில் திங்கள்கிழமையன்று கு. பிச்சாண்டி பதவியேற்கிறார்.
இதனையடுத்து சட்டசபையில் மே 11-ந் தேதி அன்று எம்.எல்.ஏக்களுக்கு பதவியேற்பு நிகழ்வை நடத்தி வைக்கிறார் கு. பிச்சாண்டி. மே 12-ந் தேதி புதிய சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தல் நடைபெறும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications