புறநகர் மின்சார ரயிலை பயன்படுத்தும்.. சென்னை மக்களின் கனிவான கவனத்திற்கு! 17 ரயில்கள் ரத்து
சென்னை: சென்னை மக்களின் போக்குவரத்து தேவையை கணிசமான அளவுக்கு புறநகர் மின்சார ரயில்கள் பூர்த்தி செய்கின்றன. இந்நிலையில் இன்று 17 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
வடசென்னை மக்களை சென்னையுடன் இணைப்பதில் மின்சார ரயில்களின் பங்கு அளப்பரியது. திருவொற்றியூரில் இருந்து சென்னையின் மையத்திற்கு வர வேண்டும் எனில் மூன்று வழிகள் இருக்கின்றன. ஒன்று மெட்ரோ. இரண்டாவது புறநகர் மின்சார ரயில். மூன்றாவது பேருந்துகள். திருவொற்றியூர்தான் சென்னையின் தொடக்கம்.

மெட்ரோ ரயில்களின் கட்டணம் அதிகம் என்பதால் சாமானிய மக்கள் இந்த ரயில் சேவையை பயன்படுத்துவதில் சிரமம் இருக்கிறது. அதேபோல பேருந்து மூலம் பயணிப்பது நேரத்தை அதிகமாக இழுக்கும். மெட்ரோ அளவுக்கு கட்டணம் இல்லை என்றாலும் கூட, பேருந்துகளிலும் கட்டணம் அதிகமாகத்தான் இருக்கிறது.
ஆனால் புறநகர் மின்சார ரயில் அப்படி கிடையாது. ரூ.5க்கு டிக்கெட் எடுத்தால், எண்ணூரில் இருந்து சென்ட்ரல் வரை பயணிக்கலாம். அதேபோல நேரமும் மிச்சமாகும். இடையில் சிக்னல் எதுவும் போடவில்லை எனில் 30-35 நிமிடத்தில் ரயில் சென்ட்ரல் வந்துவிடும். எனவே புறநகர் மின்சார ரயில் சாமானிய மக்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருந்து வருகிறது. இப்படி இருக்கையில்தான் இன்று 17 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதாவது, "கும்மிடிப்பூண்டி மற்றும் கவரைப்பேட்டை ரயில் நிலையங்களில் சனிக்கிழமை (ஜூலை 26) பிற்பகல் 1.15 முதல் மாலை 5.15 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன. இதன் காரணமாக சென்னை சென்ட்ரலிலிருந்து காலை 10.15, நண்பகல் 12.10 மணிக்கு சூலூர்பேட்டை செல்லும் புறநகர் மின்சார ரயில்களும், காலை 11.35, பிற்பகல் 1.40, 3.05 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில்களும் ரத்து செய்யப்படவுள்ளன.
மறுமார்க்கமாக, கும்மிடிப்பூண்டியில் இருந்து பிற்பகல் 1, 2.30, 3.15,3.45, மாலை 5 மணிக்கும், சூலூர்பேட்டையிலிருந்து பிற்பகல் 1,1.15,3.10 மணிக்கும் சென்ட்ரல் செல்லும் ரயில்களும் முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளன.
அதேபோல், சனிக்கிழமை கடற்கரையிலிருந்து பிற்பகல் 12.40, 2.40, 3.45 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில்களும், மறுமார்க்கமாக கும்மிடிப்பூண்டியிலிருந்து மாலை 4.30 மணிக்கு கடற்கரை செல்லும் ரயிலும் என மொத்தம் 17 ரயில்கள் ரத்து செய்யப்படும். சிறப்பு ரயில்கள்: பயணிகளின் வசதிக்காக சனிக்கிழமை சென்ட்ரலிலிருந்து காலை 11.35, பிற்பகல் 1.40, 3.05 மணிக்கும், கடற்கரையிலிருந்து பிற்பகல் 12.40, 2.40, 3.45 மணிக்கும் பொன்னேரிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.
மறுமார்க்கமாக பொன்னேரியில் இருந்து பிற்பகல் 1.18, 2.48,3.33, மாலை 4.03, 5.18 மணிக்கு சென்ட்ரலுக்கும், மாலை 4.47 மணிக்கு கடற்கரைக்கும் ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
மேலும், கும்மிடிப்பூண்டியிலிருந்து பிற்பகல் 12.05 மணிக்கு சென்ட்ரலுக்கும், சூலூர்பேட்டையிலிருந்து மாலை 4.30 மணிக்கு கும்மிடிப்பூண்டிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்" என தெற்கு ரயில்வே விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
-
சிறுக சிறுக 25 சவரன் சேர்த்த விசுவாசி… சென்னை தி.நகரில் பிரபல தங்க நகைக்கடை அலறியது ஏன்?” -
ராட்சத பலூன்கள்.. ஃபிளாஷ் மாப்கள்.. தேர்தலுக்கு சென்னை எப்படி ரெடியாகிறது தெரியுமா? -
அமைச்சர் சேகர்பாபு மகன்கள் நடத்தும் நிறுவனத்தில் ரெய்டு.. தேர்தல் நேரத்தில் இறங்கிய ஐ.டி அதிகாரிகள் -
தமிழ்நாட்டு உயர்கல்வியில் புதுமைப்பெண் – தமிழ்புதல்வன் திட்டங்கள் நிகழ்த்திய மாற்றங்கள் -
விஜயின் தவெகவிற்கு ‘செக்'.. சென்னையின் 16 தொகுதிகளில் வெல்ல சபரீசன் வியூகம்.. ரெடியான 5 லட்சம் பேர் -
சிக்னலில் நின்ற விஜய் வாகனம்.. யாரும் எதிர்பாராத நேரத்தில் திடீரென தவெக தொண்டர் செய்த செயல்! -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி












Click it and Unblock the Notifications